சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Maruti Dzire கார் சோதனையின் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

மாருதி டிசையர் க்காக பிப்ரவரி 05, 2024 05:24 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

புதிய செடான் தற்போதைய மாடலின் வடிவத்தைத் தக்கவைத்துள்ளதை போல தெரிகிறது. அதே சமயத்தில் புதிய ஜென் ஸ்விஃப்ட்டிலிருந்து பெறப்பட்ட புதிய ஸ்டைலிங்கையும் கொண்டிருக்கும்.

  • இது ஒரு வட்டமான கிரில், அனைத்து LED லைட்ஸ் மற்றும் புதிய ஸ்விஃப்ட்டாக 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

  • கேபின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது; பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் பீஜ் அப்ஹோல்ஸ்டரியுடன் காணப்படுகிறது.

  • மற்ற வசதிகளில் ஆட்டோ ஏசி, 6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் ஆகியவை இருக்கலாம்.

  • புதிய ஸ்விஃப்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் இதில் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஜூன் 2024 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம்; 6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து விலை தொடங்கலாம்.

நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று தயாரிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்தான் (ஏற்கனவே இந்தியாவில் சில முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது) . எனவே மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் செடானும் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் இருக்கலாம் என தோன்றியது. இப்போது இந்த காரின் முதல் ஸ்பை ஷாட்கள் சில இப்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளன.

படங்கள் எதை காட்டுகின்றன?

முதல் பார்வையில், செடான் விற்பனையில் உள்ள தற்போதைய மாடலை போன்றே இருப்பதை போல தெரிகிறது. பெரிய தட்டையான பின்புறம், இது சப்-4 மீட்டர் டைப் காரின் வரம்பிற்குள் வைத்திருக்கிறது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்விஃப்ட் போன்ற புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும், இதில் பெரிய வட்டமான கிரில் மற்றும் மாற்றப்பட்ட பம்ப்பர்கள் இருக்கின்றன. புதிய டிசையர் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களுடன் அனைத்து LED லைட்டிங் செட்டப்பை பெறலாம். ORVM பொருத்தப்பட்ட கேமரா 360-டிகிரி செட்டப் கொடுக்கப்படலாம் என்பதை காட்டுகின்றது.

கேபின் விவரங்கள்

தற்போதுள்ள மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களை போலவே, புதிய ஜென் மாடல்களும் உட்புறத்தில் அதே போன்ற அமைப்பை கொண்டிருக்கும். ஸ்பை ஷாட்கள் மூன்றாம் ஜென் சப்-4m செடானின் உட்புறத்தை முழுவதுமாக காட்டவில்லை என்றாலும், இது புதுப்பிக்கப்பட்ட கேபினை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. புதிய டிசையர் மற்றும் பீஜ் அப்ஹோல்ஸ்டரியில் வரவிருக்கும் ஸ்விஃப்டில் இருந்து பெரிய டச் ஸ்கிரீன் (அநேகமாக 9-இன்ச் யூனிட்) இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

இதையும் பார்க்கவும்: மாருதி ஜிம்னி ராஜஸ்தானில் ஃபாரஸ்ட் சஃபாரிக்கு மேற்கூரையின்றி செல்கிறது

புதிய டிசைரின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை தவிர, மாருதி ஆட்டோ ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய டிசையர் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் (ஸ்விஃப்ட்டின் சோதனை கார்களில் ஒன்றில் காணப்படுவது போல்), 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றுடன் வரலாம்.

பவர்டிரெய்ன்

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கொண்ட புதிய ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்டில் காணப்படுவது போல் மூன்றாம் தலைமுறை டிசையர் அதே 1.2-லிட்டர் 3-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை (82 PS/108 Nm) பெறும். இருப்பினும், இந்தியா மாடலில் உள்ள வசதிகளை பொறுத்தவரையில் சில வேறுபாடுகளை கொண்டிருக்கலாம், குறிப்பாக ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில்.

இப்போதைக்கு, தற்போதைய-ஜென் செடான் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (90 PS/113 Nm) வழங்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு MT அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கிடைக்கிறது. இது CNG கிட் ஆப்ஷனுடன் கிடைக்கலாம், இதில் இது 77 PS மற்றும் 98.5 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது, 5-ஸ்பீடு MT உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் ஜூன் 2024 -க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ.6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, மற்றும் டாடா டிகோர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

பட ஆதாரம்

Share via

Write your Comment on Maruti டிசையர்

B
bansh bahadur yadav
Jun 25, 2024, 10:07:20 PM

2024 model dzire kab tak launch ho jaega

B
bansh bahadur yadav
Jun 25, 2024, 10:05:55 PM

Kab tak launch ho jaega

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை