• English
  • Login / Register

2024 Hyundai Creta காரின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன

ஹூண்டாய் கிரெட்டா க்காக ஜனவரி 11, 2024 02:45 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 124 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ஜனவரி 16 -ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

2024 Hyundai Creta

  • ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவு ஏற்கனவே ரூ.25,000க்கு தொடங்கி நடந்து வருகிறது.

  • முன்பக்கமும், புதிய லைட்டிங் அமைப்புகள் மற்றும் பம்பர்களுடன் முழுமையான மேக்ஓவரை பெற்றுள்ளன.

  • உட்புறத்தில், 2024 கிரெட்டா ஒரு இன்டெகிரேட்ட ஸ்கிரீன் செட்டப் மற்றும் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலை கொண்டுள்ளது.

  • பாதுகாப்பைப் பொறுத்தவரை, கிரெட்டா இப்போது லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) வருகின்றது.

  • ஒரு புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) இணைக்கப்பட்டுள்ளது.

2024 ஹூண்டாய் கிரெட்டா ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது, அதற்கு முன்னதாக, ஹூண்டாய் அப்டேட் செய்யப்பட்டுள்ள எஸ்யூவி -யின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக காரின் முழுமையான வடிவமைப்பு தெரிய வருகின்றது. இதன்  முன்பக்கம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, புதிய அம்சங்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது. 25,000 ரூபாய்க்கு 2024 கிரெட்டாவிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட படங்களில் அதன் தோற்றத்தை பற்றி பார்க்கலாம்.

முன்பை விட முரட்டுத்தனமான தோற்றம்

Hyundai Creta 2024 Rear

ஆன்லைனில் ஸ்பை ஷாட்களில் மூலமாக புதிய வெளிப்புற வடிவமைப்பு தெரிய வந்திருந்தாலும் கூட. அதிகாரப்பூர்வ படங்கள் இன்னும் விரிவான விவரங்களை கொடுக்கின்றன. 2024 ஹூண்டாய் கிரெட்டா அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தைரியமான தோற்றத்தை கொண்டிருக்கின்றது. எஸ்யூவி -யின் முன்பக்கம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதில் ஒரு புதிய செவ்வக கிரில், ஒரு இன்வெர்ட்டட் L- வடிவ சிக்னேச்சர் உடன் பானட்-முழுமைக்கும் உள்ள LED DRL ஸ்டிரிப் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஸ்கொயர் ஹவுசிங்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கீழே, ஸ்கிட் பிளேட் இப்போது மிகவும் நன்றாக தெரிகிறது மற்றும் அது சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

புதிய அலாய் வீல்கள் சேர்க்கப்ட்டுள்ளதைத் தவிர, எஸ்யூவி -யின் பக்கவாட்டு தோற்றத்தில் எதுவும் மாறவில்லை. பின்புறத்தில் இப்போது கனெக்டட் LED டெயில் லேம்ப்கள் முன்பக்கமாக உள்ளதை போலவே அதே இன்வெர்டட் L வடிவத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது, சில்வர் நிறத்தில் பெரிய ஸ்கிட் பிளேட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: இந்தியாவில் Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியாகவுள்ள தேதி இதுதான் !

அப்டேட் செய்யப்பட்ட கேபின்

2024 Hyundai Creta cabin

2024 கிரெட்டாவின் டேஷ்போர்டு அமைப்பு முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது., ஏனெனில் இது இப்போது டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான டூயல் இன்டெகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்பிளேக்கள் மற்றும் டிரைவருக்கான புதிய டிஸ்ப்ளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் பக்க டேஷ்போர்டின் மேல் பகுதியில் இப்போது பியானோ பிளாக் பேனல் பக்கவாட்டு ஏசி வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் கீழே, ஆம்பியன்ட் லைட்களுடன் கூடிய ஒபன் ஸ்டோரேஜ்  பாக்ஸ் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும் கொண்டுள்ளது, இது  டச் கன்ட்ரோல்களை கொண்டதாக இருக்கும்.

8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இப்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?

பவர்டிரெயின்கள் விவரம்

2024 Hyundai Creta

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இப்போது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (160 PS / 253 Nm) 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வரும். எஸ்யூவி -யின் முந்தைய பதிப்பில் இருந்து மற்ற இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களையும் அப்படியே கொடுத்துள்ளது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS / 144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT, மற்றும் 1.5 - லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience