2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Safari ரெட் டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
published on பிப்ரவரி 02, 2024 05:20 pm by ansh for டாடா சாஃபாரி
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரி ரெட் டார்க் எடிஷனை போல இல்லாமல், இந்த காரில் எந்த புதிய வசதிகளும் சேர்க்கப்படவில்லை.
-
இந்த ஸ்பெஷல் பதிப்பு டாடா சஃபாரியின் அக்கம்பிளிஸ்டு + 6-சீட்டர் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
-
ஹெட்லைட்கள், ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் ரெட் 'சஃபாரி' பேட்ஜிங்கில் ஆல் பிளாக் எக்ஸ்ட்ரீயர் மற்றும் ரெட் இன்செர்ட்களுடன் வருகிறது.
-
உள்ளே, இது ரெட் அப்ஹோல்ஸ்டரி, பிளாக் கேபின் தீம் மற்றும் டாஷ்போர்டு, சென்டர் கன்சோல் மற்றும் டோர்களில் ரெட் இன்செர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
டார்க் வேரியன்ட் இந்த ஆண்டு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரிக்கான ரெட் டார்க் எடிஷனை முதலில் அறிமுகப்படுத்தியது, இப்போது டாடா எஸ்யூவி -யின் தற்போதைய பதிப்பிற்கான அதே ஸ்பெஷல் எடிஷனை வெளிப்படுத்தியுள்ளது. இது டாடா சஃபாரி ரெட் டார்க் பதிப்பு, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் அக்கம்பிளிஸ்டு + 6-சீட்டர் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டின் அடிப்படையில், பல மாற்றங்களுடன் வருகிறது. அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எக்ஸ்ட்டீரியர்
![Tata Safari Red Dark Edition Front Tata Safari Red Dark Edition Front](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![Tata Safari Red Dark Edition Rear Tata Safari Red Dark Edition Rear](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
டாடா சஃபாரியின் தற்போதைய ரெட் டார்க் எடிஷன், ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய பதிப்பின் அதே ட்ரீட்மென்ட்டை கொண்டுள்ளது. எஸ்யூவி முழுவதும் ரெட் நிறச் இன்செர்ட்களுடன் முழுவதும் ஆல் பிளாக் நிற கேபினை கொண்டுள்ளது. இந்த ரெட் இன்செர்ட்கள் ஹெட்லைட்கள், ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் முன் டோர்களிலும் பின்புறத்திலும் ரெட் 'சஃபாரி' பேட்ஜிங்கிலும் மெல்லிய ஸ்ட்ரிப் உள்ளது. இது முன் ஃபெண்டர்களில் ‘#டார்க்’ பேட்ஜையும் கொண்டுள்ளது.தவிர, இது 19-இன்ச் பிளாக் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது.
கேபின்
![Tata Safari Red Dark Edition Front Seats Tata Safari Red Dark Edition Front Seats](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![Tata Safari Red Dark Edition Rear Seats Tata Safari Red Dark Edition Rear Seats](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
உள்ளே, இருக்கைகள் ஹெட்ரெஸ்ட்களில் ‘# டார்க்’ லோகோவுடன் ரெட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகின்றன. கேபின் ரெட் டிஸைன் எலமென்ட் உடன் பிளாக் தீமை கொண்டுள்ளது. இந்த கூறுகள் டாஷ்போர்டில் ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ் வடிவில் உள்ளன, மேலும் சென்டர் கன்சோலில் உள்ள கிராப் ஹேண்டில்கள் மற்றும் டோர்களில் ரெட் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது. சஃபாரி 7- மற்றும் 6-சீட்டர் அமைப்பில் வழங்கப்படுகின்றது, இந்த ரெட் டார்க் பதிப்புக்கு பிறகு கொடுக்கப்படலாம்.
பவர்டிரெய்ன்
டாடா சஃபாரி 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 170 PS மற்றும் 350 Nm டார்க் திறனை வழங்குகிறது. இந்த டீசல் யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரெட் டார்க் பதிப்பு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரியின் ரெட் டார்க் பதிப்பு ஒரு சில அம்சச் சேர்த்தல்களுடன் வந்தாலும், அது இங்கே இல்லை. இருப்பினும், முந்தைய ரெட் டார்க் பதிப்பில் வந்த அம்சங்கள், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சஃபாரியின் வழக்கமான வேரியன்ட்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் டெயில்கேட், மெமரி மற்றும் வெல்கம் ஃபங்ஷனுடன் 6-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் 4-ஐக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் பாஸ் முறையில் பவர்டு முன் பக்க சீட் கொடுக்கப்பட்டுள்ளது .
மேலும் படிக்க: Tata Curvv பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் தயாரிப்புக்கு நெருக்கமான அவதாரில் காட்சிப்படுத்தப்பட்டது
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 7 ஏர்பேக்குகள், ABS வித் EBD , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் பலவற்றுடன் வருகிறது. லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை பெறுகின்றது.
வெளியீடி & விலை
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 26.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ள வழக்கமான அக்கம்பிளிஸ்டு+ 6-சீட்டர் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் விட இது ரூ. 1 லட்சம் வரை கூடுதலாக வரலாம்.
மேலும் படிக்க: டாடா சஃபாரி டீசல்
0 out of 0 found this helpful