பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Curvv தயாரிப்புக்கு நெருக்கமான வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
published on பிப்ரவரி 02, 2024 06:34 pm by rohit for டாடா கர்வ்
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடாவின் புதிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் உடன் கர்வ்வ் 115 PS அவுட்புட்டை கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படும்.
-
டாடா கர்வ்வ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகமானது.
-
சமீபத்திய மாடல் நெக்ஸான் போன்ற முன்பக்கம் மற்றும் கூர்மையான பின்புற தோற்றத்தை காட்டியது.
-
பேக்லிட் டாடா லோகோ மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலுடன் கூடிய ஹாரியர் போன்ற 4-ஸ்போக் ஸ்டீயரிங் இருப்பதை கேபினில் பார்க்க முடிந்தது.
-
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இருக்கலாம்.
-
கர்வ்வ் ICE 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய புதிய கார் வெளியீடுகளில் ஒன்றாக இருக்கப்போகும் உற்பத்திக்கு தயாராக உள்ள எஸ்யூவி -யான டாடா கர்வ்வ் கார் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் டாடா எஸ்யூவியின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பாகும், இதில் இப்போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்வ்வ் டீசல் காரின் விவரங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், டாடாவின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் TGDi இன்ஜினை (125 PS/225 Nm) கர்வ்வ் பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது, பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் (115 PS/260 Nm) கர்வ்வ் -ல் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. கர்வ்வ் ICE பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஆல் எலக்ட்ரிக் வெர்ஷனிலும் கர்வ்வ் இவி -யாக வழங்கப்படும், இது 500 கிமீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்கும் பல பேட்டரி பேக்குகளை பெற வாய்ப்புள்ளது.
இதையும் பார்க்கவும்: பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Nexon CNG கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா கர்வ்வ் ICE -யில், சில சிறிய மாற்றங்களுடன், ஷோரூம்களுக்கு வரும்போது நமக்குக் கிடைக்கும். ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் நாம் பார்த்த கான்செப்டுடன் ஒப்பிடும்போது இது புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தை பெறுகிறது. நெக்ஸான் முக்கோண ஹெட்லைட் மற்றும் ஃபாக் லைட் செட்டப், LED DRL -கள் மற்றும் பெரிய குரோம் பம்பர் உட்பட பல விஷயங்கள் அப்படியே உள்ளன.
ஆனால் கர்வ்வ் -க்கான சிறந்த தோற்றம் பக்கவாட்டில் இருக்கிறது, அதன் முக்கிய வடிவமைப்பு பண்பை எடுத்துக்காட்டுகிறது: கூபே ரூஃப், ஹை-சிட்டிங் பின்புற முனை வரை செல்கிறது. காட்சிப்படுத்தப்பட்ட கர்வ்வ் ICE ஆனது 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை கொண்டுள்ளது, வீல் ஆர்ச்களில், குறிப்பாக பின்புறத்தில் இன்னும் இடைவெளி நிறைய உள்ளது.
பழைய கான்செப்ட்டில் இருந்து அதன் பின்புறத்தில் பெரிதாக எந்தவிதமான மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும், இந்த தயாரிப்புக்கு தயாரான பதிப்பில் சில விஷயங்கள் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. கவனத்தை ஈர்க்க்கும் ஸ்டைலிங் என்பது கிடை மட்டமாக உள்ள டெயில் லேம்ப் ஆகும், இது எஸ்யூவி -யின் அகலத்தை அதிகப்படுத்தியுள்ளது, மேலும் இது ஸ்பிளிட்டட் ரூஃப்-இன்டெகிரேட்டட் ஸ்பாய்லரையும் பெறுகிறது.
இன்ட்டீரியர் மற்றும் அம்சங்கள்
டாடா கர்வ்வ் ICE -யின் உட்புறம் பற்றிய எந்த விவரங்களையும் டாடா வெளியிடவில்லை என்றாலும், காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் கேபினை பார்க்க முடிந்தது. ஹாரியர் மையத்தில் இல்லுமினேட்டட் ‘டாடா’ லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காகவும்). டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலை டாடா கொடுத்துள்ளது.
புரொடக்ஷன்-ஸ்பெக் கர்வ்வ் ஆனது வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பேடில் ஷிஃப்டர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Nexon EV டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் ICE 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு முன்பாகவே கர்வ்வ் EV வெளியிடப்படும். கர்வ்வ் ICE -யின் விலை ரூ 10.50 லட்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், அதே சமயம் அதன் EV வெர்ஷன் ரூ 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். கர்வ்வ் ICE ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுடன் போட்டியிடும். கர்வ்வ் EV -யானது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு போட்டியாளராக இருக்கும்.