2023 Tata Harrier Facelift இன்டீரியர் டீசர் வெளியானது, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பெறுகிறது

modified on அக்டோபர் 06, 2023 06:32 pm by rohit for டாடா ஹெரியர்

  • 105 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டீஸர் ஒரு ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்ட்ரிப், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியருக்கான பெரிய டச் ஸ்கிரீன் ஆகியவற்றைக் காட்டுகிறது.

Tata Harrier facelift interior teased

  • டாடா ஹாரியர் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் முதல் பெரிய அப்டேட்டை விரைவில் பெறும்.

  • டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவை அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்

  • வெளிப்புற புதுப்பிப்புகளில் புதிய வடிவிலான கிரில், புதிய ஹெட்லைட் அமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் இருக்கும்.

  • தற்போதுள்ள டீசல் இன்ஜினுடன் முதல் முறையாக பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

  • புதிய ஹாரியர் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.15 லட்சத்தில் இருந்து இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் -ன் வெளிப்புறத்தின் ஒரு பார்வையை வழங்கிய டீஸரை வெளியிட்ட பின்பு,  டாடா இப்போது புதிய எஸ்யூவியின் உட்புறத்தைக் காட்டும் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா எஸ்யூவி -யின் உள்ளேயும் வெளியேயும் செய்யப்பட்டுள்ள முதலாவது பெரிய அப்டேட் ஆகும். எஸ்யூவி -க்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.

புதிதாக என்ன இருக்கிறது ?

Tata Harrier facelift 2-spoke steering wheel
Tata Harrier facelift digital driver's display

டீசரில் உள்ளபடி, 2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் டாஷ்போர்டு முழுவதும் இருக்கும் ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்டிரிப் மற்றும் புதிய டாடா நெக்ஸான்  மற்றும்  டாடா நெக்ஸான் இவி -யில் காணப்படுவது போல் பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் கிடைக்கும். குறுகிய கிளிப் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் செட்டப் (புதிய நெக்ஸான் இவி -யிலிருந்து.25-இன்ச் மற்றும் 12.3- இன்ச் யூனிட்களாக இருக்கலாம்) என்பதை காட்டுகிறது

இதையும் படியுங்கள்:  செப்டம்பர் 2023 இல் அதிக விற்பனையான 10 கார் பிராண்டுகள் இவையாகும் 

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள் 

Tata Harrier facelift front teased

 எஸ்யூவியின் முந்தைய டீஸரில் கண்டதுபோல், வெளிப்புறத்தில் சிறிய இண்டிகேட்டர்களை இணைக்கும் நீண்ட எல்இடி DRL ஸ்ட்ரிப் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் புதிய நெக்ஸான் வாகனத்தில் இருப்பது போன்ற செங்குத்தாக அடுக்கப்பட்ட ஸ்பிளிட்-LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய கிரில் வடிவமைப்பை பெறும்.

அதன் பக்கவாட்டில் பார்க்கும் போது தெரியும் மிகப்பெரிய மாற்றம் புதிய வடிவத்தில் இருக்கும் அலாய் வீல்கள் ஆகும். டாடா டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள் ஆகியவற்றையும் வழங்கும்.

போர்டில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Tata Harrier cabin

தற்போதுள்ள ஹாரியரின் கேபின் படம் குறிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது

புதிய டிஸ்ப்ளே தவிர, கார் தயாரிப்பாளர் எஸ்யூவியில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ISOFIX ஆங்கர் புள்ளிகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்படலாம்.

இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள்

Tata Harrier facelift turbo-petrol engine

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (170PS/280Nm) வழங்கப்படலாம். இது மேனுவல் மற்றும் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன்களை பெறும் என எதிர்பார்க்கிறோம். அதன் தற்போதைய 2-லிட்டர் டீசல் யூனிட் (170PS/350Nm) 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் புதுப்பிக்கப்பட்டு கொடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்: அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு ஏசி இல்லாமல் வாகனம் ஓட்டுவது மதிப்புள்ளதா? இங்கே கண்டுபிடிக்கவும்

விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் நவம்பரில் அறிமுகமாகும் என்று நம்புகிறோம், இதன் விலை ரூ. 15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.  இந்த எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி700 , எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் ஹையர் வேரியன்ட்களுக்கு போட்டியாக இருக்கும்..

மேலும் படிக்க: ஹாரியர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா ஹெரியர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience