Nissan Magnite காரை இப்போது ஷோரூம்களில் பார்க்கலாம்
published on அக்டோபர் 07, 2024 06:35 pm by dipan for நிசான் மக்னிதே
- 59 Views
- ஒரு கருத்தை எழுதுக
உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்கள் உள்ளன, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் 4-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் என சில புதிய வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன.
நிஸான் மேக்னைட் 2020 ஆம் ஆண்டு முதலில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இப்போது சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டது.. சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் டெலிவரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடங்கின. மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இப்போது டீலர்ஷிப்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. டீலர்ஷிப்களுக்கு வந்த புதிய மேக்னைட்டின் சில படங்களைப் எங்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றின் விவரங்கள் இங்கே:
மாடலின் விவரங்கள்
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் டிஸ்ப்ளேவில் LED ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் உள்ளன. 16-இன்ச் அலாய் வீல்கள், 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் ORVMகளில் டர்ன் இண்டிகேட்டர்கள் (வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள்) மற்றும் பின்புற வைப்பர் ஆகியவற்றைக் காணலாம்.
இன்ட்டீரியரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோ ஏசி -யுடன் ஆரஞ்சு மற்றும் பிளாக் டூயல் டோன் கேபின் உள்ளது. டாஷ்போர்டு, சீட்கள் மற்றும் டோர்களில் சாஃப்ட் டச் லெதரெட் பொருட்களைக் பார்க்க முடிகிறது. இந்த விவரங்களால் படத்தில் உள்ள மாடல் டாப்-எண்ட் டெக்னா பிளஸ் வேரியன்ட் என்று தெரிகிறது.
8 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ்-டியூன்டு ஆடியோ சிஸ்டம், ஆட்டோ-டிம்மிங் IVRM (ரியர்வியூ மிரரின் உள்ளே), 4-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை உள்ளன.
நிஸான் புதிய மேக்னைட்டில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) போன்றவை பாதுகாப்புக்காக உள்ளன. இவை தவிர ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களும் உள்ளன.
மேலும் பார்க்க: நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பேஸ் வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிப்ட்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது:
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
72 PS |
100 PS |
டார்க் |
96 Nm |
160 Nm (MT), 152 Nm (CVT) |
டிரான்ஸ்மிஷன்* |
5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT/CVT |
* AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்: போட்டியாளர்கள்
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவிகளான ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4 மீ கிராஸ்ஓவர்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா?கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நிஸான் மேக்னட் ஏஎம்டி
0 out of 0 found this helpful