கேபிசி வெற்றியாளருக்கு 1 கோடி ரூபாயுடன் பரிசளிக்கப்பட்ட Hyundai Venue கார்
published on செப் 26, 2024 07:38 pm by dipan for ஹூண்டாய் வேணு
- 96 Views
- ஒரு கருத்தை எழுதுக
கோன் பனேகா குரோர்பதி கேம் ஷோவில் ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றவருக்கு இந்த சீசனில் ஹூண்டாய் அல்கஸார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரபலமான டிவி கேம் ஷோவான கோன் பனேகா குரோர்பதி -ன் (கேபிசி) 16வது சீசனின் முதல் ” கோடீஸ்வரர் “ -க்கு ஹூண்டாய் வென்யூ கார் பரிசாக வழங்கப்பட்டடுள்ளாது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான சந்தர் பிரகாஷ் என்ற யுபிஎஸ்சி ஆர்வலர் கேம் ஷோவில் ரூ.1 கோடி கேள்விக்கு சரியாக பதிலளித்து பரிசுத் தொகையை வென்றுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்த கேம் ஷோவின் ஸ்பான்சர்களில் ஒன்றாக இருந்தது. ஆகவே சப்காம்பாக்ட் எஸ்யூவியான ஹூண்டாய் வென்யூ மூலம் வெற்றியாளரை கௌரவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) தருண் கார்க், வெற்றியாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரகாஷ் ரூ. 7 கோடி கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு விளையாட்டை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலளித்திருந்தால் நிகழ்ச்சியின் மிகப்பெரிய பரிசுத் தொகையுடன் ஹூண்டாய் அல்காஸரையும் வென்றிருக்கலாம்.
A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)
ஹூண்டாய் வென்யூ பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை பார்ப்போம்:
ஹூண்டாய் வென்யூ: ஒரு கண்ணோட்டம்
ஹூண்டாய் வென்யூவை கொரிய கார் தயாரிப்பாளரின் சார்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அமிதாப் பச்சன் சந்தர் பிரகாஷுக்கு வழங்கினார். வென்யூவின் எந்த வேரியன்ட் வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட ஃபுல்லி லோடட் SX(O) மாறுபாடு வழங்கப்பட்டது என்று யூகிக்க முடிகிறது. இந்த வேரியன்ட்டின் விலை ரூ. 12.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.
ஹூண்டாய் வென்யூ LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், LED டிஆர்எல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில் விளக்குகளுடன் வருகிறது. இது 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன.
சப்காம்பாக்ட் எஸ்யூவி டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம் மற்றும் சில்வர் ஆக்ஸென்ட்களுடன் உள்ளது. இருக்கைகள் ஒரே மாதிரியான டூயல்-டோன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வென்யூ சிங்கிள் பேனல் சன்ரூப் உடன் வருகிறது.
8-இன்ச் டச் ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் என்ட்ரி ஆகியவை இந்த காரில் உள்ளன.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும். லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை கொண்டுள்ளது.
ஹூண்டாய் வென்யூ: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் வென்யூ மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் விவரங்கள் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
114 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு மேனுவல் |
6-ஸ்பீடு iMT*, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு மேனுவல் |
*iMT = கிளட்ச்லெஸ் மேனுவல்; DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஹூண்டாய் வென்யூ: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் வென்யூவின் விலை ரூ. 7.94 லட்சத்தில் இருந்து ரூ. 13.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) வரை உள்ளது. மேலும் இது கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற மற்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக உள்ளது. மேலும் இது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுக்கு மாற்றாகவும் இது இருக்கும்
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: வென்யூ ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful