• English
    • Login / Register

    மாருதியின் அடுத்த வெற்றி சின்னம் இக்னிஸ் மாடல் - மைக்ரோ SUV பிரிவில் இடத்தை பிடிக்க முந்துகிறது

    மாருதி இக்னிஸ் க்காக நவ 27, 2015 02:36 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 15 Views
    • 2 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    சமீபத்தில் வெளியான பிரிமியம் பலேனோ ஹாட்ச்பேக் மாடலின் வெற்றியை மாருதி நிறுவனம் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அடுத்து வெளிவர உள்ள மைக்ரோ SUV வகையை சார்ந்த மாருதி சுசூக்கி இக்னிஸ் மாடலை நாம் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. தற்போது இந்த புதிய பிரிவு மிகவும் பிரபலமாகி வருகிறது, முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால், இந்த மைக்ரோ SUV வகையில் சமீபத்தில் வெளியான ரினால்ட் கிவிட் காரானது, அசுர வேகத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. வேகமாக அதிகரித்து வரும் வடிக்கையாளர்களின் ஆர்வத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கிவிட் காரைத் தயாரித்த ஃபிரெஞ்சு நாட்டின் ரினால்ட் நிறுவனம் இந்த காரின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்ற செய்தியே, மக்களின் ஆர்வத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய அதீத ஆர்வம் மற்றும் மாருதி நிறுவனத்தின் மேல் இந்தியர்களுக்கு உள்ள நம்பிக்கை இரண்டும் இணைந்து, இந்தியாவின் உள்ள அனைவராலும் விரும்பத்தக்க அடுத்த காராக புதிய மாடலான இக்னிஸ் காரை, மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, நாம் இக்னிஸ் எவ்வாறு மக்களின் மனதில் நம்பகத்தன்மையை வளர்க்கும் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

    தோற்றம்

    இக்னிஸ் மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட பாக்ஸி டிசைன் போல உள்ளது.  தற்போது பிரபலமாக உள்ள கிவிட்டும் பாக்ஸி வடிவத்தையே பெற்றிருக்கிறது. எனினும், முழுவதுமாக கிவிட் போல இல்லாமல், சற்றே முரட்டுத்தனமான தோற்றத்தை இக்னிஸ் பெற்றுள்ளது. மேலும், இதன் கம்பீர தோற்றத்தை அதிகரிக்க, இதன் பெரிய சக்கரங்கள், சக்கரத்தை சூற்றிய வளைவுகள், குரோமிய வேலைப்பாடுகள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளதால், இக்னிஸ் மேல் உள்ள பார்வையை நிலைகொள்ள செய்யும் அளவிற்கு அருமையான தோற்றத்தில் வருகிறது. எனினும், நமது எதிர்பார்ப்பு வெளித் தோற்றத்தோடு நில்லாமல், உட்பகுதியில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதா என்று தொடர்கிறது. மேலும், கான்செப்ட் காரில் கண்டதைப் போல் உட்புறத்தில் இரட்டை வண்ணங்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல்களுக்கான ரெட்ரோ ஸ்விட்ச்கள் போன்றவை, கேபின் உள்ளே பொருத்தப்படும் என்ற வகையில் நமது எதிர்பார்ப்பு தொடர்கிறது. (நடக்கலாம், நடக்காமலும் போகலாம்).

    இஞ்ஜின்கள்

    புதிய இக்னிசை, 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்ற செய்தியைத் தவிர, இந்த நிறுவனம் வேறு எந்த அதிகாரபூர்வ விவரங்களையும் வெளியிடவில்லை. இதன் இஞ்ஜின் பற்றிய விவரங்கள் இன்னும் புதிராகவே உள்ளது. ஆனால் இந்த கார் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் ஸ்விஃப்ட் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் சியாஸ் காரின் 1.3 லிட்டர் மைல்ட் ஹைபிரிட் டீசல் இஞ்ஜின் ஆகியன இந்த புதிய மைக்ரோ SUV காரில் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் வாசிக்க

    was this article helpful ?

    Write your Comment on Maruti இக்னிஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience