பாருங்கள்: மஹிந்திரா XUV 3XO மற்றும்Tata Nexon – இரண்டு கார்களின் 360 டிகிரி கேமரா ஒப்பீடு
ansh ஆல் மே 30, 2024 05:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு கார்களிலும் 10.25-இன்ச் ஸ்கிரீனில் பல கேமராக்களின் வீடியோ காட்சியானது காட்டப்படும். ஆனால் ஒன்று மற்றொன்றை விட நன்றாக வேலை செய்கிறது.
சமீபத்தில் அறிமுகமான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யான மஹிந்திரா XUV 3XO மற்றும் இந்த பிரிவில் டாடா நெக்ஸான் உடன் போட்டியிடுகின்றது . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு கார்களையும் பல வழிகளில் ஒப்பிடலாம் என்றாலும், எங்களிடம் இரண்டு மாடல்கள் இருந்தபோது, இரண்டின் 360 டிகிரி கேமரா வசதியை நேரடியாக ஒப்பிட்டுப் பார்த்தோம். நாங்கள் கண்டுபிடித்த விஷயங்கள் இங்கே:
CarDekho India (@cardekhoindia) ஆல் ஷேர் செய்யப்பட்ட பதிவு
இயக்கம்
XUV 3XO காரில் 3D மோடில் இருக்கும் போது 360-டிகிரி கேமரா -வின் ஃபீடில் சிறிது தாமதம் இருப்பதை போல தெரிகிறது. மேலும் நீங்கள் காரை நகர்த்தும்போது பிரேம் ரேட் -டிலும் தாமதம் இருப்பதாக தோன்றுகிறது. மேலும் உள்ள கேமரா ஃபீட் மஹிந்திரா எஸ்யூவி பாதி திரையில் மட்டுமே காட்டப்படும். இந்த வசதியை பயன்படுத்தும் போது விவரங்களை பார்ப்பதை கடினமாக்குகிறது. இருப்பினும் 3D உருவமும் டிரான்ஸ்பரன்ட் ஆக இருக்கிறது. இது காரின் கீழ் இருக்கும் விஷயங்களை கண்டறிவதை எளிதாக்குகிறது.
டாடா நெக்ஸானில் உள்ள கேமராக்களில் இருந்து கிடைக்கும் வீடியோ ஃபீட் மிகவும் சாஃப்ட் ஆக உள்ளது மற்றும் எந்த தாமதமும் இல்லை. 3D மாடல் எந்த பிரேம் தாமதமும் இல்லாமல் விரைவாக நகர்கிறது. மேலும் இது முழு 10.25-இன்ச் திரையையும் உள்ளடக்கியது. இது விவரங்களை பார்ப்பதை மிகவும் எளிதாக்குகிறது.
மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஜூன் 2024 -ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக முதல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
இந்த சோதனைக்குப் பிறகு டாடா நெக்ஸானில் இந்த வசதியை பயன்படுத்துவது சிறப்பாக உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். மேலும் 3XO மேம்படுத்தக்கூடிய சில பகுதிகளும் உள்ளன.
மற்ற பாதுகாப்பு வசதிகள்
360 டிகிரி கேமராவை தவிர, இரண்டு கார்களும் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. இந்த கார்கள் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன.
லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஹை பீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற லெவல் 2 ADAS வசதிகளின் முழு தொகுப்புடன் வருவதால் மஹிந்திரா 3XO முன்னணியில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி டாடா நெக்ஸான் மட்டுமே NCAP -ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP ஆகிய இரண்டிலிருந்தும் 5-நட்சத்திரங்கள் என்ற சரியான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. XUV 3XO இன்னும் சோதனை செய்யப்படவில்லை ஆனால் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் XUV300 ஆனது 2020 ஆம் ஆண்டில் குளோபல் NCAP இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. மேலும் எதிர்காலத்தில் பாரத் NCAP ஆல் சோதிக்கப்படும் போது இது ஒரு சிறப்பான முடிவை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
விலை


எக்ஸ்-ஷோரூம் விலை |
|
டாடா நெக்ஸான் |
மஹிந்திரா XUV 3XO* |
ரூ.8 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரை |
ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை |
* மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO விலை (அறிமுகம்)
இந்த இரண்டு கார்களும் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மஹிந்திரா XUV 3XO அதன் அறிமுகத்தின் காரணமாக விலை சற்று குறைவாக உள்ளது. இவை இரண்டும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இந்த கார்கள் மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவிகளான ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மற்றும் மாருதி பிரெஸ்ஸா உடன் போட்டியிடுகின்றன.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT