• English
  • Login / Register

சிறிதளவு விலை உயர்வுடன் புதிய அம்சங்களைப் பெறும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

published on மே 19, 2023 04:07 pm by tarun for வோல்க்ஸ்வேகன் டைகான்

  • 77 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஃபிளாக்‌ஷிப் ஃபோக்ஸ்வேகன் மிகவும் செயல்திறன் மிக்க  BS6 இரண்டாம் கட்ட இணக்க இன்ஜினையும் பெறுகிறது.

Volkswagen Tiguan 2023

  • புதுப்பிக்கப்பட்ட டிகுவான் விலை இப்போது ரூ. 34.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

  • புதிய டூயல்-டோன் இன்டீரியர், வயர்லெஸ் சார்ஜிங், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் பின்புற சீட் பெல்ட் நினைவூட்டல் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • மேலும் அகலமான சன்ரூஃப், த்ரீ-ஜோன் ஏசி, 8 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன.

  • 7-வேக DSG மற்றும் AWD உடன் அதே (ஆனால் புதுப்பிக்கப்பட்ட) 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது.

BS6 இரண்டாம் கட்டத்துக்கு இணக்கமான டிகுவான் SUVயை அதன் முந்தைய எடிஷனை விட ரூ.50,000 பிரீமியத்தில்  ரூ.34.69 லட்சத்தில்(எக்ஸ்-ஷோரூம்) ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியுள்ளது  SUV யில் புதிதாக  என்ன உள்ளது இதோ பார்க்கலாம்:

இதில் என்ன புதிதாக உள்ளது ?

Volkswagen Tiguan 2023

புதுப்பிக்கப்பட்ட டிகுவான் வெளிப்புற ஸ்டைலிங்கில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இருப்பினும், உட்புறம் இப்போது டூயல்-டோன் ஸ்டோர்ம் கிரே நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பார்க் அசிஸ்ட் -ஐப்  பெறுகிறது. பிந்தையது 1ஆம் நிலை ADAS வசதி இது கேமராக்கள் மற்றும் சென்சார்களின் அடிப்படையில், வாகனம் நிறுத்தும் போது ஸ்டீயரிங் வீலை இயங்குகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக, பின்புற சீட் பெல்ட் நினைவூட்டலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்: கார் ஆர்வலர்கள் ரூ.15 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய முதன்மையான 10 டர்போ-பெட்ரோல் கார்கள் இதோ.

தற்போதுள்ள அம்சங்களின் தொகுப்பு

Volkswagen Tiguan 2023

டிகுவானில் ஏற்கனவே மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், பனோரமிக் சன்ரூஃப், த்ரீ-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஹீட்டட்  முன் இருக்கைகள், 8 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்பு அம்சங்களாகும்.

புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெயின்கள்

Volkswagen Tiguan

டிகுவானை இயக்குவது அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் TSI இன்ஜின் ஆகும், இப்போது இது RDE இணக்கமாக உள்ளது. இது 190PS மற்றும் 320Nm ஐ உருவாக்குகிறது மற்றும் 7-வேக DSG (இரட்டை கிளட்ச் தானியங்கி) டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 மோஷன் டிரைவ், ஆல் வீல் டிரைவிற்கான ஃபோக்ஸ்வேகன் ஸ்பீக், ஸ்டாண்டர்டாகவும்  வழங்கப்படுகிறது. மாசு உமிழ்வு விதிமுறைகள் புதுப்பித்தலுடன், டிகுவான் ஏழு சதவீதம் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது  13.54 கிமீ லிட்டர் மைலேஜை வழங்குகிறது.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னா டர்போ DCT  Vs ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் 1.5 DSG: அசல் உலக எரிபொருள் செயல்திறன் ஒப்பீடு

போட்டியாளர்கள்

ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோன் C5  ஏர்கிராஸ் போன்றவற்றுடன்  போட்டியிட ஃபோக்ஸ்வேகன் தயாராக இருக்கிறது.

மேலும் படிக்கவும்: ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen டைகான்

Read Full News

explore மேலும் on வோல்க்ஸ்வேகன் டைகான்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience