• English
    • Login / Register

    இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Volkswagen Golf GTI

    வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ க்காக மார்ச் 18, 2025 06:55 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 29 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    • குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் கோல்ஃப் ஜிடிஐ -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

    • இது மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், 18 அல்லது 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் செட்டப் உடன் ஆக்ரோஷமான மற்றும் மிரட்டலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

    • இது மெட்டாலிக் பெடல்கள் மற்றும் GTI லோகோவுடன் கூடிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் ஆல்-பிளாக் கேபின் தீம் உடன் வரலாம்.

    • 265 PS மற்றும் 370 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கும்.

    • விலை ரூ. 52 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ இருக்கும். தற்சமயம் அறிமுகத்துக்கு முன்னால் மறைக்கப்படாமல் சோதனை செய்யப்பட்டு வரும் கார் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் முழுமையாக கட்டப்பட்ட யூனிட் (CBU) ஆக விற்கப்படும். மற்றும் இது குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்.

    ஸ்பை ஷாட்டில் என்ன பார்க்க முடிந்தது?

    ஸ்பை ஷாட்டில் இந்தியா-ஸ்பெக் கோல்ஃப் ஜிடிஐ -யின் தெளிவான பக்கவாட்டு பார்வையை தோற்றத்தை பார்க்க முடிந்தது. இது 5-ஸ்போக் அலாய் வீல்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிவப்பு நிறத்திலான பிரேக் காலிப்பர்களை கொண்டிருந்தது. முன் கதவில் ஒரு 'ஜிடிஐ' பேட்ஜ் இருந்தது. மேலும் பின்புறத்தில் உள்ள எல்இடி டெயில் லைட்களையும் பார்க்க முடிந்தது. இது நிலையான கோல்ஃப் ஸ்போர்ட் காரை விட சற்று தாழ்வாக உள்ளது. இது மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தை காருக்கு கொடுக்கிறது.

    கோல்ஃப் ஜிடிஐ -யின் வடிவமைப்பு

    இது மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், மையத்தில் 'VW' லோகோ உடன் நேர்த்தியான முன்பக்கம் உள்ளது. அக்ரசிவ் ஹனிகோம்ப் மெஷ் வடிவத்துடன் கூடிய முன்பக்க பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ஒரு ஸ்போர்ட்டி டிஃப்பியூசர் மற்றும் டூயல் எக்சாஸ்ட் அமைப்பும் உள்ளது.

    கேபின் மற்றும் வசதிகள் 

    Volkswagen Golf GTi DashBoard

    இது ஆல் கருப்பு கேபின் தீம், லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் டார்டன்-கிளாட் ஸ்போர்ட்டி சீட்களுடன் வரும். இது மெட்டாலிக் பெடல்கள் மற்றும் ‘ஜிடிஐ’ பேட்ஜுடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை -யும் பெறுகிறது. ஜிடிஐ என்பதை குறிப்பிட்டு காட்டும் வகையில் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.

    6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

    சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    கோல்ஃப் ஜிடிஐ காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இது 265 PS மற்றும் 370 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும். இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த ஹேட்ச்பேக்கின் முன் சக்கரங்களை இயக்குகிறது. இது வெறும் 5.9 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டும். மற்றும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகும்.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    கோல்ஃப் ஜிடிஐ முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட ஆஃபராக இருக்கும் என்பதால் இதன் விலை ரூ. 52 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது மினி கூப்பர் எஸ் காருக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Volkswagen Golf ஜிடிஐ

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கான்வெர்டிப்ளே சார்ஸ்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience