2016 ஆட்டோ எக்ஸ்போ: வோல்க்ஸ்வேகன் - டிகுவானை கொண்டு வருகிறது
தற்போது நடைபெற்று வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் சார்பில் டிகுவான் வெளியிடப்பட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் குழுவின் மாடுலாரர் க்யூர்பாகஸ்டன் (MQB) பிளாட்பாமை அடிப்படையாக கொண்ட இந்த கார், ஃபோர்டின் புதிய எண்டோவர், டொயோட்டா ஃபார்ச்யூனர் மற்றும் செவ்ரோலேட் ட்ரையல்பிளேஸர் ஆகிய கார்களுடன் போட்டியிட உள்ளது. PQ35 பிளாட்பாமை விட 100 கிலோ எடைக் குறைவான MQB பிளாட்பாம், காருக்கு சாதகமான ஒன்றாக அமைகிறது. இந்த டிகுவானில், ஆன்லைன் அசிஸ்டென்ஸ் மற்றும் தானியங்கி விபத்து அறிவிப்பு (ஆட்டோமேட்டிக் ஆக்ஸிடெண்ட் நோட்டிஃபிகேஷன்) உள்ளிட்ட சில மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் அதில் ஆன்லைன் டிராஃபிக், பார்க்கிங் ஸ்பேஸ் இன்ஃபோ மற்றும் வாகனத்தின் நிலை குறித்த தகவல் (வெஹிக்கிள் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்) ஆகியவை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு ரேர்வ்யூ கேமரா சிஸ்டம் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய கீலஸ் ஆக்சிஸ் போன்றவை அளிக்கப்படுகிறது. இசை ஆர்வலர்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில், இதில் உள்ள மியூஸிக் சிஸ்டம் – ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த காரில் பாதுகாப்பு தொடர்பாக, ABS மற்றும் EBD ஆகியவை உடன் ஏர்பேக்குகளையும் கொண்டுள்ளது. இதன் தோற்றத்தை பொறுத்த வரை, இந்த காருக்கு உயரமான நிலை அளிக்கப்பட்டுள்ளதால், இந்த கிராஸ்ஓவர் பெரும்பாலும் பார்ப்பதற்கு ஒரு SUV-யைப் போல காட்சி அளிக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்த கார் தயாரிப்பாளர் கூறியதாவது, “தனித்தன்மைக் கொண்ட 4x4 செயல்பாடு கொண்ட டிகுவான், ஆடம்பரம், கையாளுதல், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் ஒரு கலவையாக உள்ளது. சர்வதேச அளவிலான கண்டுபிடிப்பு பண்புகள் மற்றும் இந்தியாவில் உள்ள SUV வகைகளின் குறியீடுகள் உடனான இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது” என்றார். இந்த காருக்கு ஒரு 2.0-லிட்டர் டீசல் மில் மூலம் ஆற்றல் பெறப்பட்டு, 148 bhp என்ற அதிகபட்ச ஆற்றல் கிடைக்கிறது. இந்த ஆற்றலகம், ஒரு 6-ஸ்பீடு இரட்டை-கிளெச் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மாற்று வழியில் செல்ல விரும்புவோருக்காக, இந்த வாகனத்தில் ஒரு ஆல்-வீல்-டிரைவ் வகையும் அளிக்கப்படுகிறது.
முன்னதாக 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், டிகுவான் தொழில்நுட்பம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 2.2 லிட்டர் மில்லை கொண்டு, அதிகபட்ச ஆற்றலான 158 bhp-யை அளிக்கும் புதிய எண்டோவர் உடன் மிக நெருக்கமாக இது போட்டியிட உள்ளது. இந்த ஃபோர்டின் தயாரிப்பில் கூட ஒரு 4x4 வகை இடம்பெற்று, கரடுமுரடான பாதைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
மேலும் வாசிக்க
- வோல்க்ஸ்வேகனின் வைட் நைட், ஸ்கோடா ராபிட் GTI ஆக இருக்கலாம்
- வோல்க்ஸ்வேகனின் புதிய கச்சிதமான சேடனின் அதிகாரபூர்வமான பெயர் அமியோ
- புதிய உயர் நிர்வாகத்தை வோல்க்ஸ்வேகன் நியமித்தது