வோல்க்ஸ்வேகனின் புதிய கச்சிதமான சேடனின் அதிகாரபூர்வமான பெயர் அமியோ

published on ஜனவரி 21, 2016 03:50 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நாங்கள் முன்பு தெரிவித்தது போல, வோல்க்ஸ்வேகனின் “பெயர் யூகிக்கும்” (கெஸ் த நேம்) பிரச்சாரம் இன்றோடு முடிவுக்கு வந்தது. சந்தையில் நிலவி வந்த வதந்திகளை உண்மையாக்கும் வகையில், அடுத்து வரவிருக்கும் கச்சிதமான சேடனின் பெயர் “அமியோ” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தை குறித்து, சிறந்த தயாரிப்பின் மீது ஒரு தவறான வழிநடத்தல் என்றும், இதனால் அது கண்ணியமானதாக மாறுகிறது என்றும் ஒரு சிலர் கூறலாம். இந்த பிரச்சாரம் தொடர்பான வீடியோவில் நுட்பமான ஒரு மாற்றம் தெரிகிறது. அதில் பங்கேற்றவர்களின் பேச்சில் குறிப்பிடத்தக்கதாக, காரின் அதிகாரபூர்வமான பெயரை உச்சரிப்பாக இருந்தாலும், அவர்களின் வாய் அசைவு அமியோ என்ற உச்சரிப்பிற்கு மிகவும் வேறுப்பட்டதாக காணப்பட்டது. அதிக விற்பனைக்காக இது போன்ற ஒரு ரகசியமான வியாபார நுணுக்கம் கையாண்டு இருக்கக் கூடும் என்றாலும், இது ஒரு ஏமாற்று வேலையாக தான் தெரிகிறது. அதிலும் இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளரின் தற்போதைய சர்ச்சைக்குரிய நிலையை வைத்து பார்த்தால், இந்த சூழ்நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அவ்வளவு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. எனவே இந்த வீடியோவில் நீங்கள் இடம்பெறவில்லை என்றோ, சரியான பெயரை யூகிக்க முடியவில்லை என்றோ, நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட்டர் நொய்டா பகுதியில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் 13வது பதிப்பில், வோல்க்ஸ்வேகன் அமினோ காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அமினோ என்ற பெயர் லத்தீன் வார்த்தையான ‘அமோ’ என்பதன் திரிபு ஆகும். இதை மொழிப்பெயர்த்தால், ‘நான் விரும்புகிறேன்’ (ஐ லவ்) என்று பொருள் தருகிறது. போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்டோ சேடன் ஆகியவை வோல்க்ஸ்வேகனின் PQ24 பிளாட்பாமை பகிர்ந்துள்ளது போல, அமினோவும் இதையே அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த காரின் ஒட்டுமொத்த ஸ்டைலிங் கூட, அதன் உறவில் அமைந்த தயாரிப்புகளிடம் இருந்து பகிர்ந்து கொண்டுள்ளது.

அமினோவின் உளவுப் படங்களை வைத்து பார்த்தால், ஒரு மறுசீரமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் வென்டோ சேடன் உடன் ஒப்பிட்டால் ஒரு பெரிய பூட்டை ஆகியவற்றை பெற்றுள்ளது. இதன்மூலம் இது சப்-4 மீட்டர் கச்சிதமான சேடனுக்கான வரி வட்டத்திற்குள் அமையும் என்று யூகிக்க முடிகிறது. இதன் பின்பக்கத்தை பார்க்கும் போது, போலோவை கணிசமான அளவில் சார்ந்ததாக அமைந்த டெயில்லைட்டை பெற்றிருந்தாலும், இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பில் காணப்படும் கிளெஸ்டர் மூலம் ஹேட்ச்பேக்கிடம் இருந்து தன்னை வேறுப்படுத்தி காட்டுகிறது. டெயில்கேட்டில் கூட ஒரு புதுமையான டிசைனை கொண்டிருப்பது, மேலே அளிக்கப்பட்டுள்ள டீஸர் படத்தின் மூலம் அறியலாம்.

அதேபோல, அதிகம் கவனிக்கப்படாத சில நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, வோல்க்ஸ்வேகன் போலோவில் காணப்படும் அதே ஆற்றல் தேர்வுகளையே, அமினோவும் பெற்றிருக்கும் என்ற யூகம் நிலவுகிறது. இதன்மூலம் ஃபோர்டு ஆஸ்பியர், மாருதி டிசையர், டாடா செஸ்ட் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஆகியவற்றுடன் இது போட்டியிட எதுவாக அமையும்.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience