விட்டாரா ப்ரீஸ்ஸாவின் முன்பதிவு துவக்கம், இதையடுத்து விரைவில் அறிமுகம் நடைபெறும்
published on பிப்ரவரி 11, 2016 10:52 am by nabeel for மாருதி கிராண்டு விட்டாரா
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட அடுத்து வரவுள்ள மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸாவிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. சில பெருநகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில், இந்த துணை-கச்சிதமான SUV-யை முன்பதிவு செய்ய ரூ.21,000-யை முன்பணமாக பெற்றுக் கொள்ள துவங்கி உள்ளனர். தற்போது TUV300 மற்றும் ஈகோஸ்போர்ட் ஆகிய இரு கார்களை மட்டுமே கொண்டுள்ள துணை-4 மீட்டர் SUV பிரிவிற்குள் விட்டாரா ப்ரீஸ்ஸாவும் சேர உள்ளது. இந்த மாருதி வாகனத்திற்கு ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சத்திற்கு உட்பட்டு விலை நிர்ணயிக்கப்படலாம் என்ற நிலையில், வரும் மார்ச் மாதத்தையொட்டி இதன் அறிமுகம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே, இந்த காரின் பட்டுவாடா துவக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் முதல் முதலாக இந்த கார் வெளியே வந்தது. அதுவும் ஊடகத் துறையினருக்கான முதல் நாள் அன்றே இது வெளியிடப்பட்டது. இந்த காருக்கு இருக்கும் சிறப்பான தோற்றம் மூலம், இது உண்மையிலேயே மாருதியின் ஒரு புதுமையான தயாரிப்பு என்பதை நம்மை தெளிவாக உணர வைக்கிறது. அதிகளவில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்திய நுகர்வோர் மற்றும் சாலை சூழ்நிலைகளின் மீது ப்ரீஸ்ஸா கவனம் செலுத்தி உள்ளது. இந்த காரின் தடித்த முன்பக்க தோற்றத்தை ஒரு க்ரோம் மூலம் முழுமைப்படுத்தப்பட்டுள்ள தன்மை, இந்திய ரசனையை கூட்டுவதாக அமைகிறது. இதில் காணப்படும் ஒரு ஃப்ளோட்டிங் ரூஃப் மூலம், போட்டியில் தனித்தன்மைக் கொண்டதாக இது நிச்சயம் தெரியும்.
என்ஜினை பொறுத்த வரை, துவக்கத்தில் ஒரு டீசல் என்ஜினை மட்டுமே கொண்டு ப்ரீஸ்ஸா வெளிவரும். இது ஒரு 1.3 லிட்டர் DDiS200 ஆகும். S கிராஸ், சியஸ் மற்றும் எர்டிகா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள இந்த என்ஜின், மாருதி தரப்பிலான சிறந்த சாதனம் என்பதால், மேற்கூறிய கார்கள் அனைத்தும் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த என்ஜின் மூலம் 88bhp ஆற்றலும், ஏறக்குறைய 200Nm முடுக்குவிசையும் பெற முடிகிறது. ஒரு 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ள இந்த என்ஜின், அடுத்த மைல்கல்லை நோக்கி பாயும் உங்களின் அதிரடியான இயக்கத்திற்கு ஈடுகொடுக்க தவறினாலும், மட்டமான ஆற்றல் கொண்டது என்று வருந்த வேண்டிய தேவை இருக்காது. மேலும், லிட்டருக்கு 23.65 கி.மீ எரிபொருள் சிக்கனத்தை அளிப்பதாக உறுதி அளிக்கப்படும் சிறந்த என்ஜின்களில் ஒன்றான இது, ஒரு சாதாரண இந்திய வாடிக்கையாளருக்கு ஏற்றதாகும். பெட்ரோல் வகைகளை பொறுத்த வரை, ஒரு 1.2-லிட்டர் அல்லது ஒரு 1.4-லிட்டர் VVT என்ற உருவில் விரைவில் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விட்டாரா ப்ரீஸ்ஸாவில், இரட்டை ஏர்பேக்குகள், ABS உடனான EBD மற்றும் சுசுகியின் TECT ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே வரும் மாதத்தில் ஒரு நகர்புற SUV-யை வாங்க யாராவது விரும்பினால், கொஞ்சம் பொறுத்திருந்து ப்ரீஸ்ஸாவை வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இந்த பிரிவில் இது, சிறந்த விற்பனையாகும் காராக விளங்க போகிறது. விட்டாரா ப்ரீஸ்ஸாவை குறித்த ஒரு விரிவான தோற்றத்தை பெற, இதோ அதன் இமேஜ் கேலரி மற்றும் வீடியோ.
மேலும் வாசிக்க : மாருதி சுசுகி இக்னிஸ்: உள்ளும் புறமும்