Toyota Taisor காரின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது
published on ஏப்ரல் 01, 2024 06:26 pm by rohit for டொயோட்டா டெய்சர்
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவரின் டொயோட்டா-பேட்ஜ் பதிப்பு ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
-
மாருதி மற்றும் டொயோட்டா இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆறாவது மாடல் டெய்சர் ஆகும்.
-
அதன் டீஸர் வீடியோ அதன் புதிய வடிவ கிரில் புதிய LED DRLகள் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
-
அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி போன்ற பிற பகிரப்பட்ட தயாரிப்புகளில் காணப்படுவது போல் ஃப்ரான்க்ஸ் காரில் கேபின் புதிய தீம் கொடுக்கப்படலாம்.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் கொடுக்கப்படலாம்.
-
N/A பெட்ரோல் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் இரண்டையும் பெறலாம்; CNG பவர்டிரெய்ன் பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்தியாவில் மாருதி -டொயோட்டா கூட்டாண்மையின் மற்றொரு பகிரப்பட்ட தயாரிப்பான ஃபிரான்க்ஸ்-பேஸ்டு டெய்சர் கிராஸ் ஓவர் கார் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் டெய்சரின் முதல் டீஸர் வீடியோவை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டீசரில் கவனிக்கப்பட்ட விவரங்கள்
டொயோட்டா பகிர்ந்த குறுகிய டீசரில் டெய்சரின் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்ட்டீரியரின் சில காட்சிகளைப் பார்க்க முடிகின்றது. அர்பன் குரூசர் ஹைரைடர் LED DRLகள் கிரில்லுக்கான தேன்கூடு மாடல் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட் செட்டப் போன்றவற்றை வீடியோ காட்டுகிறது. மாருதி ஃப்ரான்க்ஸ் போல இல்லாமல் டொயோட்டா கிராஸ்ஓவர் புதிய வடிவிலான பம்பர்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். டீஸர் வீடியோ புதிய ஆரஞ்சு எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷனில் டெய்சரை ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதை காட்டுகிறது.
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
மாருதி மற்றும் டொயோட்டா இடையே முன்னர் பகிரப்பட்ட தயாரிப்புகளின் அடிப்படையில் டெய்சர் காரிலும் இருந்து வேறுபட்ட கேபின் தீம் கொடுக்கப்படலாம். அதைத் தவிர டொயோட்டா க்ராஸ்ஓவரில் வேறு எந்த வித்தியாசமும் இருக்காது. மேலும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் பட்டியலையும் கொண்டிருக்கும்.
மாருதி ஃப்ரான்க்ஸின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
இது அதே 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி ஆகியவற்றுடன் வரும். பாதுகாப்பைப் பொறுத்தவரை டெய்சர் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS 360-டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள்
பவர்டிரெயின்கள்
டொயோட்டா நிறுவனம் ஃபிரான்க்ஸில் கொடுக்கப்படும் அதே பவர்டிரெய்ன்களை டெய்சருக்கும் பயன்படுத்துகிறது. அவை:
விவரக்குறிப்பு |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2-லிட்டர் பெட்ரோல்+சிஇன்ஜி |
பவர் |
90 PS |
100 PS |
77.5 PS |
டார்க் |
113 Nm |
148 Nm |
98.5 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AT |
5-ஸ்பீடு MT |
டெய்சர் பெட்ரோல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டெய்சர் CNG பின்னர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாருதி ஃபிரான்க்ஸில் அப்படியே செய்ததைப் பார்த்தோம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா டெய்சரின் ஆரம்ப விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஃபிரான்க்ஸை போலவே இது சப்-4எம் எஸ்யூவிகளான டாடா நெக்ஸான், கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300 மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்
0 out of 0 found this helpful