Toyota Rumion எம்பிவி ரூ.10.29 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது
published on ஆகஸ்ட் 28, 2023 02:38 pm by tarun for டொயோட் டா rumion
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரூமியான் காரானது மாருதி எர்டிகா -வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும்.
-
ரூமியானின் விலை ரூ 10.29 லட்சம் முதல் ரூ 13.68 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கிறது.
-
S, G மற்றும் V ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும்; CNG மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பேஸ் வேரியன்ட்டுடன் கிடைக்கின்றன.
-
ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், நான்கு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை இந்த காரில் இருக்கின்றன.
-
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனகளுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் ரூமியான் கிடைக்கும்.
டொயோட்டா ரூமியான் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது மாருதி எர்டிகா -வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். இதில் உள்ள சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் இந்த காரை வேறுபடுத்தி காட்டுகின்றன. இது டொயோட்டா மற்றும் மாருதி இடையே உள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி வெளியாகும் ஐந்தாவது கிராஸ்-பேட்ஜ் தயாரிப்பு ஆகும். டொயோட்டா ரூமியானுக்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது மேலும் இதன் டெலிவரி செப்டம்பர் 8 முதல் தொடங்கும்.
வேரியன்ட் வாரியான விலைகள்
வேரியன்ட் |
மேனுவல் |
ஆட்டோமெட்டிக் |
S |
ரூ.10.29 லட்சம் |
ரூ.11.89 லட்சம் |
S CNG |
ரூ. 11.24 லட்சம் |
- |
G |
ரூ 11.45 லட்சம் |
- |
IN |
ரூ 12.18 லட்சம் |
ரூ 13.68 லட்சம் |
சிஎன்ஜி ஆப்ஷன் பேஸ் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஆச்சரியமளிக்கும் விதத்தில், மிட்-ஸ்பெக் G வேரியண்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் வசதி கொடுக்கப்படவில்லை.
எர்டிகா -வின் ஆரம்ப விலை இதை விட குறைவாகவே இருந்தாலும், அதன் VXI வேரியன்ட் ரூமியானின் S வேரியன்ட்டுக்கு இணையாக இருக்கிறது.
எர்டிகா -வுடன் ஒப்பிடும்போது இதிலுள்ள மாற்றங்கள்
ரூமியான் மற்றும் எர்டிகாவின் ஸ்டைலிங்கிற்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் புதிய முன்பக்க தோற்றம் மற்றும் வித்தியாசமான அலாய் வீல்கள் மட்டுமே. ஃபேப்ரிக் இருக்கைகளுக்கு புதிய டூயல்-டோன் ஷேட் மற்றும் டேஷ்போர்டு டிரிம்மிற்கு வித்தியாசமான டோன் ஷேடு ஆகியவற்றுடன் இன்டீரியரும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காரில் உள்ள வசதிகள்
மாருதி எர்டிகா -வில் உள்ளா பெரும்பாலான வசதிகள் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, இன்ஜின் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வசதிகள் இதில் இருக்கின்றன.
நான்கு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் கொண்ட ESP, ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன் விவரங்கள்
ரூமியானில் மாருதி எர்டிகாவின் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 103PS மற்றும் 137Nm உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் யூனிட்கள் டிரான்ஸ்மிஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேனுவல் ஷிஃப்டருடன் 26.11 கிமீ/கிலோ வரையிலான மைலேஜ் தரும் CNG ஆப்ஷனும் இந்த காரில் உள்ளது.
போட்டியாளர்கள்
டொயோட்டா ரூமியானுக்கு உண்மையாக உள்ள ஒரே ஒரு போட்டியாளர் அதன் உடன்பிறப்பான மாருதி எர்டிகா தான். எப்படி பார்த்தாலும், மாருதி -யின் MPV போலவே, கியா கேரன்ஸ்,ரெனால்ட் ட்ரைபர், மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களுக்கு ஒரு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டொயோட்டா ரூமியான் ஆன் ரோடு விலை