சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை இன்னோவாவின் பெயர் யூகம்: டொயோடா இன்னோவா க்ரிஸ்டா

published on ஜனவரி 28, 2016 04:18 pm by manish for டொயோட்டா இனோவா

ஜப்பானிய வாகன தயாரிப்பாளரான டொயோடா நிறுவனம், கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ளது. காடு, மலை மற்றும் கடற்கரை என்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் டொயோடா இன்னோவா MPV காரின் அடுத்த தலைமுறை மாடலின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள, மாபெரும் 2016 ஆட்டோ எக்ஸ்போ சர்வதேச வாகன கண்காட்சியில் இடம்பெறப் போகும் இந்த காரின் பெயரை இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே இதன் பெயரை, தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் இன்னோவா MPV காரை, பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரின் அதிகாரபூர்வ புகைப்படத்தை ‘தி இந்தியா டுடே' பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஸ்பெஷல் எடிஷன் இன்னோவா மாடலுக்காகவே, ‘க்ரிஸ்டா' என்னும் பெயர் ஏற்கனவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

டொயோடாவின் மற்றொரு பிரபலமான ஆஃப்-ரோடு காரான ஃபார்ச்யூனரில் இடம்பெற்றுள்ள அதே லாடர்-ஃபிரேம் தொழில்நுட்பம், 2016 இன்னோவாவிலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய MPV –யில் பொருத்தப்பட்டுள்ள 2.4 லிட்டர் GD டீசல் இஞ்ஜின், அதிகபட்சமாக 149 PS என்ற அளவில் சக்தி மற்றும் 342 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மற்றொரு நற்செய்தி என்னவென்றால், டொயோடா நிறுவனம் இதற்கான புதிய பெட்ரோல் வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில், 130 PS அளவு சக்தி மற்றும் 187 Nm அளவு டார்க்கையும் உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் டூயல் VVT-i இஞ்ஜின் பொருத்தப்படும் என்று தெரிகிறது. 2000 cc என்ற அளவிற்கு அதிகமான டீசல் வாகனங்களைத் தடை செய்துள்ள உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறாமல் செயல்பட, இந்த ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. மேலும், புதிய இன்னோவாவின் இஞ்ஜின்கள், ஸ்டாண்டர்ட் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஆப்ஷனலாக வரும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றே பெரிய அளவில் உள்ள புதிய இன்னோவாவில், மெக்கானிக்கல் மாற்றங்கள் மட்டுமல்லாது, இதன் வெளிப்புறத் தோற்றத்திலும், உட்புற அமைப்புகளிலும், திகட்டத் திகட்ட மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும் போது, அடுத்த தலைமுறை இன்னோவா காரின் உட்புறம், நாம் நினைக்காத அளவிற்கு ஆடம்பரமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புகைப்பட ஆதாரம்: Auto Today
மேலும் வாசிக்க

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டொயோட்டா இனோவா

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை