• English
 • Login / Register

இந்தியாவில் 2024 BMW M4 Competition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.1.53 கோடியாக நிர்ணயம்

published on மே 02, 2024 08:46 pm by rohit for பிஎன்டபில்யூ எம்4 போட்டி

 • 67 Views
 • ஒரு கருத்தை எழுதுக

அப்டேட் உடன் ஸ்போர்ட்ஸ் கூபே புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறுகிறது. பவர் 530 PS வரை அதிகரித்துள்ளது.

2024 BMW M4 Competition launched in India

 • BMW M4 காம்பெடிஷன் ஆனது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மாடலாகவும் ஒரே ஒரு M xDrive வேரியன்ட்டிலும் வழங்கப்படுகிறது.

 • வெளிப்புற அப்டேட்களில்  ட்வீக் செய்யப்பட்ட லைட்டிங் செட்டப், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் ஆப்ஷனலான ரெட் பிரேக் காலிப்பர்கள் ஆகியவை உள்ளன.

 • கேபின் இப்போது புதிய பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் மற்றும் இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது.

 • பெரிய 14.9-இன்ச் டச் ஸ்கிரீன், டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 • 3-லிட்டர், 6-சிலிண்டர் டூயல்-டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8-வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது; ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் கிடைகின்றது =.

நீங்கள் உயர்தர செயல்திறன் கொண்ட கார்களை விரும்புபவராக இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு செய்தி உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் BMW M4 காம்பெடிஷன் கூபே இப்போது இந்தியாவில் ஒரே ஒரு M xDrive வேரியன்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்ட இறக்குமதியாக  இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றது. இதன் விலை ரூ 1.53 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

530 ஹார்ஸ் பவர் கொண்ட இன்ஜின்

2024 BMW M4 காம்பெடிஷன்யின் மிக முக்கியமான விஷயம் அதிலுள்ல அதன் 3-லிட்டர், 6-சிலிண்டர் இரட்டை-டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும், 530 PS (+20 PS) மற்றும் 650 Nm அவுட்புட்டை இது கொடுக்கும். இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு, நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது. இது வெறும் 3.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.

2024 BMW M4 Competition

BMW ஆனது M-ஸ்பெசிபைடு சஸ்பென்ஷனை  வழங்கியுள்ளது. இன்ஜினின் மோடை மாற்றுவதற்காக எஃபிசியன்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் டிரைவ்டிரெய்ன் செட்டப்களில் இருந்து உரிமையாளர்கள் தேர்வு செய்யலாம். அதே சமயம் கம்ஃபோர்ட், ஸ்போர்ட் அல்லது ஸ்போர்ட் பிளஸ் ஆகியவற்றிலிருந்து எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் டம்பர்களுக்கான மூன்று அமைப்புகளை மாற்றலாம்.

வெளிப்புறத்தில் உள்ள வடிவமைப்பு அப்டேட்கள்

2024 BMW M4 Competition
2024 BMW M4 Competition rear

அதன் முன்புறம் இன்னும் முன்பு போலவே போலரஸிங் ஆக உள்ளது. இரண்டு பெரிய M-ஸ்பெசிபைடு கிட்னி கிரில் (ஹரிஸாண்டல் ஸ்லேட்டுகளுடன்) அடாப்டிவ் LED ஹெட்லைட்களால் நிரம்பியுள்ளது. எல்இடி டிஆர்எல்கள் மாற்றியமைக்கப்பட்டு இரண்டு ஹெட்லைட் கிளஸ்டர்களுக்குள்ளும் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று இணையாக வைக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் கூபேக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட 19- மற்றும் 20-இன்ச் எம்-ஃபோர்ஜ் அலாய் வீல்கள் (ஆப்ஷனாலன ரெட் பிரேக் காலிப்பர்கள்) மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃபை வழங்கியுள்ளது. பின்புறத்தில் புதிய M4 காம்பெடிஷன் ஆனது மேம்படுத்தப்பட்ட LED டெயில் விளக்குகள் மற்றும் இருபுறமும் பிளாக் கலர் குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட டபுள் எக்ஸாஸ்ட்களை கொண்டுள்ளது. இது M4 CSL இன் ஸ்டைலிங் போன்ற புதிய டீக்கால்களையும் பெறுகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் அறிமுகமானது BMW i5 M60 கார், விலை ரூ. 1.20 கோடியாக நிர்ணயம்

கேபின் மற்றும் வசதிகள்

உட்புறத்தில் 2024 M4 கூபே ஒரு புதிய 3-ஸ்போக் பிளாட்-பாட்டம் மற்றும் லெதரால் மூடப்பட்ட M-ஸ்பெசிஃபைடு  ஸ்டீயரிங் மற்றும் கார்பன் ஃபைபர் ஆக்ஸன்ட்களை கொண்டுள்ளது. இது ‘எம்’ லெதர் இருக்கைகள் மற்றும் ‘எம்’ சீட் பெல்ட்களையும் கொண்டுள்ளது.

2024 BMW M4 Competition cabin

இதில் இன்டெகிரேட்ட்ட டூயல் டிஸ்பிளே செட்டப் உடன் வருகிறது, இதில் 14.9-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் மற்றும் டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. போர்டில் உள்ள மற்ற அம்சங்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். அதன் பாதுகாப்பு வலையில் மல்டி ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

BMW M4 காம்பெடிஷன் போட்டியாளர்கள்

2024 BMW M4 Competition rear

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட BMW M4 காம்பெடிஷன் ஆனது ஆடி RS 5 மற்றும் வரவிருக்கும் மெர்சிடிஸ்-AMG C63 போன்றவற்றுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: BMW M4 காம்பெடிஷன் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது பிஎன்டபில்யூ M4 Competition

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience