Mahindra XUV 3XO மற்றும் Tata Nexon: விவரங்கள் ஒப்பீடு
published on மே 02, 2024 04:21 pm by sonny for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா XUV300 -க்கு ஒரு புதிய பெயரையும் அப்டேட்டையும் கொடுத்துள்ளது. ஆனால் இந்த பிரிவில் முதலிடத்துக்கு வர முடியுமா ?
பழைய மஹிந்திரா XUV300 என்ற பெயருக்கு பதிலாக மஹிந்திரா XUV 3XO என்ற பெயரில் இப்போது அழைக்கப்படுகிறது. இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட (படிக்க: ஃபேஸ்லிஃப்டட்) கார் மூலமாக சப்-4m எஸ்யூவி பிரிவை கைப்பற்ற மஹிந்திரா முயற்சி செய்கின்றது. இந்த் காரின் மிக முக்கிய போட்டியாளர்களில் ஒன்று டாடா நெக்ஸான் ஆகும். இவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம். அளவுகளில் இருந்து முதலில் தொடங்கலாம்:
அளவுகள்
மாடல் |
மஹிந்திரா 3XO |
டாடா நெக்ஸான் |
நீளம் |
3990 மி.மீ |
3995 மி.மீ |
அகலம் |
1821 மி.மீ |
1804 மி.மீ |
உயரம் |
1647 மி.மீ |
1620 மி.மீ |
வீல்பேஸ் |
2600 மி.மீ |
2498 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
364 லிட்டர் |
382 லிட்டர் |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
201 மி.மீ |
208 மி.மீ |
-
நெக்ஸான் நீளமாக இருக்கலாம், ஆனால் XUV 3XO மற்ற எல்லா விதத்திலும் பெரியதாக உள்ளது.
-
இருப்பினும் மஹிந்திராவை விட அதிக பூட் கெபாசிட்டி மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றை டாடா நெக்ஸான் கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் & மைலேஜ்
விவரங்கள் |
மஹிந்திரா 3XO |
டாடா நெக்ஸான் |
||
இன்ஜின் |
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்/ 1.2-லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
112 HP/ 130 HP |
117 PS |
120 PS |
115 PS |
டார்க் |
200 Nm/ 250 Nm வரை |
300 Nm |
170 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6MT, 6AT |
6MT, 6AMT |
5MT, 6MT, 6AMT, 6DCT |
6MT, 6AMT |
கிளைம்டு மைலேஜ் |
18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி/ 20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி |
17.44 கிமீ/லி, 17.18 கிமீ/லி, 17.01 கிமீ/லி |
23.23 கிமீ/லி, 24.08 கிமீ/லி |
-
மஹிந்திரா 3XO மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குகின்றன. மஹிந்திரா டர்போ-பெட்ரோல் இன்ஜினின் இரண்டு வெர்ஷன்களை வழங்குகிறது. இரண்டாவது அதிக செயல்திறனுக்கான டேரக்ட் இன்ஜெக்ஷனை கொண்டுள்ளது.
-
மஹிந்திரா XUV300 காரை போலவே, 3XO இன்ஜினை பொருட்படுத்தாமல் அதிக டார்க்கை கொண்டுள்ளது. ஆனால் அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
-
நெக்ஸான் அதன் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் AMT மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்ஸ் இரண்டும் அடங்கும். XUV 3XO ஒரு மேனுவல் தேர்வு மற்றும் ஒரு புதிய டார்க் கன்வெர்டர் ஆட்டோவை பெறுகிறது.
-
இரண்டு எஸ்யூவி -களும் அவற்றின் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களை வழங்குகின்றன.
-
கிளைம் செய்யப்படும் மைலேஜ் புள்ளி விவரங்களை பொறுத்தவரையில் மஹிந்திரா 3XO -ன் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் நெக்ஸானின் டர்போ-பெட்ரோல் இன்ஜினை விட முன்னணியில் உள்ளன. இருப்பினும் டாடா எஸ்யூவியின் டீசல் இன்ஜின் மஹிந்திராவை விட லிட்டருக்கு அதிக கிலோ மீட்டர்கள் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறது.
வசதிகள்
வசதிகள் |
மஹிந்திரா XUV 3XO |
டாடா நெக்ஸான் |
இன்ஃபோடெயின்மென்ட் |
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் |
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் |
வெளிப்புறம் |
பை- LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் பை- ஃபங்ஷனல் LED DRLகள் LED ஃபாக் லைட்ஸ் 17 இன்ச் அலாய் வீல்கள் பனோரமிக் சன்ரூஃப் |
பை- ஃபங்ஷனல் LED ஹெட்லைட்கள் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் சீக்வென்ஷியல் LED DRLகள் 16-இன்ச் அலாய் வீல்கள் வாய்ஸ் அசிஸ்டட் எலக்ட்ரிக் சன்ரூஃப் |
உட்புறம் |
டூயல் டோன் கேபின் லெதரைட் அப்ஹோல்ஸ்டரி 60:40 ஃபோல்டிங் ரியர் சீட்ஸ் அனைத்து 5 இருக்கைகளுக்கும் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் கப் ஹோல்டர்களுடன் பின்புற ஃபோல்டபிள் ஆர்ம்ரெஸ்ட்டை ஸ்டோரேஜ் உடன் கூடிய முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட் |
வேரியன்ட் அடிப்படையில் டூயல்-டோன் கேபின் இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் லெதரைட் அப்ஹோல்ஸ்டரி ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள் ஆம்பியன்ட் லைட்ஸ் 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டு பின் இருக்கைகள் |
கம்ஃபோர்ட் & வசதி |
பின்புற ஏசி வென்ட்களுடன் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆட்டோ டிம்மிங் IRVM க்ரூஸ் கன்ட்ரோல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் முன் வைப்பர்கள் பவர் ஃபோல்டிங் மற்றும் அட்ஜஸ்ட்டபிள் ORVMகள் |
டச் கன்ட்ரோல் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் பின்புற ஏசி வென்ட்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் க்ரூஸ் கன்ட்ரோல் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் பேடில் ஷிஃப்டர்ஸ் (AMT & DCT) ஆட்டோ டிம்மிங் IRVM தானாக மடிக்கும் ORVMகள் |
பாதுகாப்பு |
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு) அனைத்து சக்கர வட்டு பிரேக்குகள் ABS உடன் EBD ESC (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்) டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் 360 டிகிரி வியூ கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ADAS (அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட்) |
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு) ABS உடன் EBD எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் 360 டிகிரி கேமரா பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் |
-
வசதிகளைப் பொறுத்தவரையில் மஹிந்திரா XUV 3XO டாடா நெக்ஸானை விட சற்று முன்னிலையில் முடிந்தது. இது முக்கியமாக பனோரமிக் சன்ரூஃப், ADAS சூட் மற்றும் டூயல்-சோன் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
இருப்பினும் நெக்ஸான் இன்னும் 3XO காரை விட சில பலன்களை கொண்டுள்ளது, அதன் உள்ளேயும் வெளியேயும் நவீன LED லைட் செட்டப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் அதிக பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
-
இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி -கள் இரண்டும் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா தொடர்பான பகுதிகளில் சமமாக (பேப்பரில்) உள்ளன.
-
3XO காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே செயல்பாடுகளை வழங்குவதாக மஹிந்திரா கூறியுள்ளது.
-
டாடா நெக்ஸான் காரில் நம்பகத்தன்மை சிக்கல்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையின் மோசமான தரம் குறித்து பல அறிக்கைகள் வந்துள்ளன என்பதையும் நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மஹிந்திராவின் புதிய 3XO அது போன்ற சிக்கல்களைத் தவிர்த்து விட்டால் இந்த இரண்டு கார்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாகிவிடும்.
விலை
மஹிந்திரா XUV 3XO |
டாடா நெக்ஸான் |
ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (அறிமுகம்) |
ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் |
விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்க்கானவை
-
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO ஆனது டாடா நெக்ஸானை விட என்ட்ரி லெவல் (ரூ. 76,000) டாப்-எண்ட் வேரியன்ட்களில் மிகவும் விலை குறைவாக கிடைக்கிறது.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO vs முக்கிய போட்டியாளர்கள்: விலை பேச்சு
-
3XO ஆனது 9 வகைகளில் வழங்கப்படுகிறது, நெக்ஸானின் பட்டியலில் கூடுதல் டார்க் பதிப்பு வேரியன்ட்களுடன் மொத்தமாக 12 வேரியன்ட்கள் உள்ளன.
-
மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் ஆகியவை இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு மற்ற போட்டியாளர்களாக உள்ளன.
மேலும் படிக்க: XUV 3XO ஆன் ரோடு விலை