2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு, டொயோட்டா கொரோலா அல்டிஸ் ஹைபிரிடு கொண்டு வரப்படுகிறது
டொயோட்டா கரோலா அல்டிஸ் க்காக ஜனவரி 27, 2016 06:24 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
நம் நாட்டின் தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! ஒற்றை-இரட்டை (ஆடு-ஈவன்) விதிமுறையை கடந்து சென்று, ஒரு பிரிமியம் தன்மை கொண்ட சேடனை வாங்குவதற்காக தேடுபவரா நீங்கள், இதற்கு மேல் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தற்செயலாக கிரெய்ட்டர் நெய்டா பகுதியில் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரின் இந்திய துணை நிறுவனம், அதன் ஹைபிரிடு கொரோலா சேடனை கொண்டு வர வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிடு வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதை கருத்தில் கொண்டுள்ள டெல்லி அரசு, இவ்வாகனங்களுக்கு ஒற்றை-இரட்டை விதிமுறையில் இருந்து சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில், கொரோலா அல்டிஸ் சேடனின் ஹைபிரிடு பதிப்பை, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துவிட்டு, குறுகிய காலத்தில் டொயோட்டா நிறுவனம் அதை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.
இந்த காரின் உள்ளக அம்சங்களை குடைந்து ஆற்றலகத்தை கண்டறிவோம். இந்த ஹைபிரிடு கொரோலா அல்டிஸில் 1.5-லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜினை பெற்று, 73bhp ஆற்றல் வெளியீடை அளிக்கிறது. இந்த பெட்ரோல் மில் 60bhp ஆற்றல் அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது தான் இந்த ஜப்பான் வாகன தயாரிப்பாளர் அளிக்கும் டொயோட்டா ஹைபிரிடு சிஸ்டம் II ஆகும். இதன்மூலம் இந்த ஹைபிரிடு கொரோலாவை ஒரு 130bhp+ சேடன் என்று நீங்கள் கருதினால், அது தவறு. இவ்விரு மோட்டார்களின் இணைந்த செயல்பாடு மூலம் ஆற்றல் வெளியீட்டு அளவு 99bhp மட்டுமே கிடைக்கும். இந்த சேடனின் ஜப்பான் மாதிரி மாடல்களில் லிட்டருக்கு 33 கி.மீ. என்ற எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை, எரிபொருள் சிக்கன அளவு லிட்டருக்கு 25 கி.மீட்டரை ஒட்டி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் வகையில் புதுமையான தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், கொரோலா அல்டிஸின் ஒரு முழு-அளவு பிரிமியம் பெட்ரோல் சேடனை வைத்து ஒப்பிட்டால், இது ஒரு வியத்தகு புள்ளிவிபரங்கள் ஆகும். இது, ரெனால்ட் க்விட் போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக்குகளுடன் போட்டியிட உள்ளது.
மேலும் வாசிக்க 2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்