2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்
published on ஜனவரி 19, 2016 04:26 pm by nabeel for டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனரை, டொயோட்டா நிறுவனம் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஃபார்ச்யூனரின் மூலம் பிரிமியம் SUV பிரிவின் பெரும்பான்மையான இடத்தை நீண்டகாலமாக இந்நிறுவனம் தன்னிடம் தக்க வைத்திருந்தது. சாண்டா பி, கேப்டிவா, பஜேரா, CR V, சாங்யாங் ரெக்ஸ்டன் ஆகியவற்றுடன் சிறிய அளவிலான போட்டியை இது எதிர்கொண்டது. இந்த பிரிவு வாகனங்களால் நிரம்பி வழிந்த போதும், ஃபார்ச்யூனரின் பிரபலத்தன்மையை வேறெந்த SUV-யினாலும் நெருங்க முடியவில்லை. இவ்வாகனத்தில் உள்ள ஒரு கம்பீரமான தோற்றம் மூலம் சாலையில் ஒரு கெளரவமான தன்மை கிடைக்கிறது. இதன் உட்புற அமைப்பியல் தொடர்பான விமர்சனங்கள் எழுந்த போதும், இந்த பிரிவில் ஃபார்ச்யூனர் தொடர்ந்து முன்னிலை வகித்தது. கடைசியாக கடந்த 2015 ஜனவரி 6 ஆம் தேதி டொயோட்டா ஃபார்ச்யூனர் மேம்படுத்தப்பட்டது. அதன்பிறகு சாண்டா பி மற்றும் டிரையல்பிளேசர் போன்ற பல புதிய போட்டியாளர்களால், இதற்கு எதிரான போட்டி அதிகரித்தது.
எனவே தனது இரண்டாம் தலைமுறை ஃபார்ச்யூனரை கொண்டு, பிரிமியம் SUV-யின் மறுக்க முடியாத ஆட்சியாளராக மீண்டும் ஜொலிக்க, டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. நவீன கால சாண்டா பி மற்றும் எண்டோவர் ஆகியவை போல, இரண்டாம் தலைமுறை ஃபார்ச்யூனர் கூட தனது முன்பக்க ஸ்டைலை அதிக கவர்ச்சியுள்ளதாக பெற்றுள்ளது. இந்த புதிய தோற்றத்தில் முன்பக்க கிரில் அதிக்கம் செலுத்துகிறது. அதிலும் முக்கியமாக உட்புறமாக அமர்த்தப்பட்ட ஹெட்லெம்ப்களை சுற்றிக் கொண்டு, தாழ்ந்து கிடைமட்டமாக வரும் 2 கிரோம் ஸ்லாட்களை பெற்றுள்ளது. இதனுடன் பெரிய ஃபோக்லெம்ப்களை மூடிய நிலையில் தடித்த கிரோம் அசென்ட்களால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, அதன் அழகுத் தன்மையை அதிகரிக்கிறது. வாகனத்தின் தடித்த முகப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நேர்த்தியான ஹெட்லெம்ப் கிளெஸ்டர், காருக்கு ஒரு அர்த்தமுள்ள தோற்றத்தை அளிக்கிறது.
பக்கவாட்டு தகவமைப்பில், மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட c-பில்லர் டிசைனை கொண்டுள்ளது. இதனால் பின்பக்க விண்டோ உயர்ந்த நிலையில் அமைந்து, கிரோம் மூலம் அடிகோடுகளை பெற்று, தடித்த தோற்றத்தை அதிகரிக்கிறது. காரின் பின்பக்கத்தில், ஃபார்ச்யூனர் பேட்ஜ்ஜின் மீதான ஒரு கிரோம் ஸ்லாட் மீது கச்சிதமாக இணையும் புதிய டெயில்லைட் கிளெஸ்டர்களின் ஜோடியை கொண்டுள்ளது. வழக்கம் போல காரின் 3வது வரிசைக்கு கீழே, காருக்கு வெளியே ஸ்டெப்னி நிறுவப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 47,990 ஆஸ்திரேலியன் டாலர் விலை நிர்ணயத்தில் இந்த டொயோட்டா ஃபார்ச்யூனர் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி கணக்கிட்டால், ஏறக்குறைய ரூ.22 லட்சம் விலை பெறுகிறது.
பெருத்த பாடி மற்றும் சாலையில் கெளரவ தோற்றம் ஆகிய காரணங்களுக்காக இந்த கார் பிரபலமடைந்தாலும், சிலர் ஃபார்ச்யூனரில் காணப்படும் இயந்திரவியல் பகுதிகளின் நம்பகத்தன்மையை பார்த்தே இதை வாங்குகிறார்கள். கடந்த 2015 அக்டோபர் 21 ஆம் தேதி இந்த கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டாம் தலைமுறை ஃபார்ச்யூனர், புதிய 2.8-லிட்டர் டீசல் என்ஜினை மட்டுமே பெற்று கிடைக்கிறது. இது டர்போடீசல், 4 சிலிண்டர், நேரடி-இன்ஜெக்டெட் மில்லாக இருந்து, 174.3 bhp ஆற்றலையும், 450 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் வெளியிட்டு, ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு 6-ஸ்பீடு மேனுவல் உடன் பொருத்தப்படும் போது, முடுக்குவிசையின் அளவு 420 Nm ஆக குறைகிறது. இந்தியாவை பொறுத்த வரை, மிருகம் போன்ற இவ்வாகனத்திற்கு ஆற்றல் அளிக்க, ஒரு 2.4-லிட்டர் மோட்டார் கூட அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.