Toyota Hyryder ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
published on அக்டோபர் 14, 2024 05:07 pm by dipan for டொயோட்டா hyryder
- 59 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த லிமிடெட்-ரன் ஸ்பெஷல் எடிஷன் ஹைரைடரின் G மற்றும் V வேரியன்ட்களில் 13 ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷனில் ரூ. 50,817 மதிப்புள்ள ஆக்சஸெரீகளை எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் கூடுதலாக கிடைக்கும்.
-
இந்த லிமிடெட் எடிஷன் அக்டோபர் 2024 இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
-
மட் ஃப்ளாப், பாடி கிளாடிங் மற்றும் குரோம் டோர் ஹேண்டில்கள் ஆகியவை அடங்கும்.
-
ஒரு டாஷ்கேம், 3D பாய்கள் மற்றும் லெக்ரூம் லைட் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
-
இது தொடர்புடைய வேரியன்ட்டின் மைல்டு-ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைபிரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
லிமிடெட்-ரன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஹையர்-ஸ்பெக் G மற்றும் V வேரியன்ட்களுடன் கிடைக்கிறது மற்றும் கூடுதல் செலவு இல்லாமல் ரூ. 50,817 மதிப்புள்ள 13 ஆக்ஸசரீஸ்கள் வழங்குகிறது. இருப்பினும் இந்த லிமிடெட் எடிஷன் அக்டோபர் இறுதி வரை மட்டுமே கிடைக்கும். அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷனுடன் வழங்கப்படும் அனைத்து ஆக்ஸசரீஸ்களையும் பார்ப்போம்:
ஆக்ஸசரீஸ்களின் பெயர் |
வெளிப்புறம் |
மட்ஃப்ளாப் |
டோர் வைஸர் வித் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இன்செர்ட் |
முன் மற்றும் பின்புற பம்பர் கார்னிஷ் |
ஹெட்லைட் கார்னிஷ் |
ஹூட் எம்ப்ளம் |
பாடி கிளாடிங் |
ஃபெண்டர் கார்னிஷ் |
பூட் டோர் கார்னிஷ் |
குரோம் டோர் ஹேண்டில்கள் |
இன்ட்டீரியரஸ் |
ஆல்-வெதர் 3D மேட்ஸ் |
லெக்ரூம் லைட் |
டேஷ்கேம் |
மொத்த விலை = ரூ 50,817 |
மேலும் படிக்க: செப்டம்பர் 2024 -ல் அதிகம் விற்பனையான 15 கார்கள் இவை
டொயோட்டா ஹைரைடர் ஜி மற்றும் வி வேரியன்ட்: ஒரு பார்வை
G வேரியன்ட் ஒன்-பிலோவ்-டாப் வேரியன்ட் ஆகும். அதே நேரத்தில் V என்பது டொயோட்டா ஹைரைடரின் வரிசையில் உள்ள ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆகும். இந்த இரண்டு வேரியன்ட்களும் மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றன. G வேரியன்ட் CNG பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது.
இன்ஜின் |
1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் |
1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் |
1.5 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி |
பவர் |
103 PS |
116 PS (இன்டெகிரேட்டட்) |
88 PS |
டார்க் |
137 Nm |
141 Nm (ஹைபிரிட்) |
121.5 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
e-CVT (சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ்) |
5-ஸ்பீடு MT |
டிரைவ்டிரெய்ன் |
FWD/ AWD (MT மட்டும்) |
FWD |
FWD |
இந்த வேரியன்ட்களில் 9-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), பேடில் ஷிஃப்டர்கள் (AT -க்கு மட்டும்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களில் டூயல் ஏர்பேக்குகள்), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவையும் உள்ளன.
மேலும் படிக்க: இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது
விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா ஹைரைடரின் விலை ரூ.11.14 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மற்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக உள்ளது. மேலும் டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் போன்ற எஸ்யூவி-கூபேக்களுக்கு மாற்றாகவும் இது இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful