மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட Toyota Fortuner Legender அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர் க்காக மார்ச் 05, 2025 07:42 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த புதிய மேனுவல் வேரியன்ட்டிலும் அதே 2.8-லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை விட 80 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கிறது.
-
புதிய வேரியன்ட் 4x4 AT ஆப்ஷனை விட ரூ.3.73 லட்சம் விலை குறைவாக கிடைக்கும்.
-
புதிய 4x4 MT வேரியன்ட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
-
மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட டீசல் இன்ஜின் 204 PS மற்றும் 420 Nm டார்க் அவுட்புட்டை கொடுக்கும்.
-
ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில் டார்க் அவுட்புட்டை 500 Nm ஆக உள்ளது.
-
வழக்கமான ஃபார்ச்சூனரில் இருப்பதை போன்றே 11-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டத்துடன் லெஜெண்டர் இப்போது கிடைக்கிறது.
-
8 இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஜோன் ஏசி மற்றும் வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.
-
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைத்து வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்ட்ஸ் காரில் இப்போது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேனுவல் ஆப்ஷன் 4x4 (4-வீல்-டிரைவ்) செட்டப்பிற்கு மட்டுமே, ரியர் வீல் டிரைவ் (RWD) ஆப்ஷன் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். புதிய 4x4 MT வேரியன்ட் மற்ற டிரிம்களை போலவே பிளாக் ரூஃப் உடன் கூடிய டூயல்-டோன் பிளாட்டினம் வைல் பேர்ல் கலர் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் முழுமையான விலை பட்டியல் இதோ:
வேரியன்ட் |
விலை |
4x2 AT |
ரூ.44.11 லட்சம் |
4x4 MT (புதியது) |
ரூ.44.36 லட்சம் |
4x4 AT |
ரூ.48.09 லட்சம் |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
பட்டியலில் உள்ளபடியே புதிய வேரியன்ட் ஆனது இதே போன்ற அமைப்பைக் கொண்ட ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை விட ரூ.3.73 லட்சம் விலை குறைவாக கிடைக்கும். புதிய வேரியன்ட்க்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2.8 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
204 PS |
டார்க் |
420 Nm (MT) / 500 Nm (AT) |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD / 4WD |
இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் பவர் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் இப்போது புதிய ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை விட 80 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கும். முன்பே குறிப்பிட்டபடி RWD வேரியன்ட் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது. 4WD ஆனது இரண்டு ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது.
மேலும் படிக்க: Volkswagen Golf GTI மற்றும் Volkswagen Tiguan R-Line கார்கள் இந்தியாவில் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்ட்ஸ்: வசதிகள் மற்றும் பாதுகாப்பு
8-இன்ச் டச் ஸ்கிரீன், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 11-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இது வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல்-ஜோன் ஏசி, ஜெஸ்டர்-கன்ட்ரோல் உடன் டெயில்கேட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), பின்புற பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC) மற்றும் ஆட்டோ டிம்மிங் இன்சைட்-ரியர்வியூ மிரர் (IRVM) ஆகியவையும் உள்ளன.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்ட்ஸ்: போட்டியாளர்கள்
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் ஆனது எம்ஜி குளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.