டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
published on அக்டோபர் 12, 2023 06:23 pm by shreyash for டொயோட்டா ஃபார்ச்சூனர்
- 99 Views
- ஒரு கருத்தை எழுதுக
2023 ஆம் ஆண்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
-
டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் 4X2 வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.44,000 அதிகமாகச் செலுத்த வேண்டும்.
-
எஸ்யூவிகளின் 4X4 வேரியன்ட்களின் விலை ரூ.70,000 உயர்ந்துள்ளது.
-
டொயோட்டா 4X4 டிரைவ் டிரெய்ன் விருப்பத்தை எஸ்யூவி -யின் பெட்ரோல் பதிப்பில் மட்டுமே வழங்குகிறது.
-
டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஜிஆர்-எஸ் (ஜிஆர்-ஸ்போர்ட்)வேரியன்ட் 4X4 டீசல் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ரூ.70,000 உயர்ந்துள்ளது
இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் இந்த எஸ்யூவிகளின் இரண்டாவது தடவையாக விலை உயர்த்தப்பட்டுள்ளன, முதல் விலை உயர்வு ஜூலை மாதம் நடந்தது. விலை உயர்வு ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜெண்டர் எஸ்யூவிகளின் அனைத்து வேரியன்ட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, 4X4 வேரியன்ட்களில் அதிகமான உயர்வு உள்ளது. இப்போது, இந்த எஸ்யூவிகளின் வேரியன்ட் வாரியான புதிய விலை விவரங்களை இங்கே பார்ப்போம்.
ஃபார்ச்சூனர் பெட்ரோல்
வேரியன்ட்ஸ் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
4x2 MT |
ரூ. 32.99 லட்சம் |
ரூ. 33.43 லட்சம் |
+ ரூ. 44,000 |
4X2 AT |
ரூ. 34.58 லட்சம் |
ரூ. 35.02 லட்சம் |
+ ரூ. 44,000 |
ஃபார்ச்சூனர் டீசல்
வேரியன்ட்ஸ் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
4X2 MT |
ரூ. 35.49 லட்சம் |
ரூ. 35.93 லட்சம் |
+ ரூ. 44,000 |
4X2 AT |
ரூ. 37.77 லட்சம் |
ரூ. 38.21 லட்சம் |
+ ரூ. 44,000 |
4X4 MT |
ரூ. 39.33 லட்சம் |
ரூ. 40.03 லட்சம் |
+ ரூ. 70,000 |
4X4 AT |
ரூ. 41.62 லட்சம் |
ரூ. 42.32 லட்சம் |
+ ரூ. 70,000 |
GR-S 4X4 AT |
ரூ. 50.74 லட்சம் |
ரூ. 51.44 லட்சம் |
+ ரூ. 70,000 |
இதையும் பார்க்கவும்: அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு ஏசி இல்லாமல் வாகனம் ஓட்டுவது மதிப்புள்ளதா? இங்கே கண்டுபிடிக்கவும்
ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (டீசலில் மட்டும்
வேரியன்ட்ஸ் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
4X2 AT |
ரூ. 43.22 லட்சம் |
ரூ. 43.66 லட்சம் |
+ Rs 44,000 |
4X4 AT |
ரூ. 46.94 லட்சம் |
ரூ. 47.64 லட்சம் |
+ Rs 70,000 |
டொயோட்டா ஃபார்ச்சூனரின் பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.44,000 ஒரே மாதிரியான விலை உயர்வைக் கண்டுள்ளன, அதே நேரத்தில் எஸ்யூவி -யின் அனைத்து 4X2 டீசல் வேரியன்ட்களுக்கும் இதே உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜெண்டர் ஆகிய இரண்டின் 4X4 வேரியன்ட்களிலும் அதிகபட்சமாக ரூ.70,000 உயர்த்தப்பட்டுள்ளது.
பவர்டிரெய்ன் விவரம்
டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது: 2.7-லிட்டர் பெட்ரோல் (166PS/245Nm) மற்றும் 2.8-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் (204PS/500Nm). முந்தையது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றொன்று 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டும் ஆப்ஷனல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இருக்கலாம்.
இதையும் பார்க்கவும்: புதிதாக வெளியிடப்பட்ட 2024 ஸ்கோடா கோடியாக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இதோ
புதிய விலை & போட்டியாளர்கள்
டொயோட்டா இப்போது ஃபார்ச்சூனரை ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரை விற்பனை செய்கிறது, அதே சமயம் ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.43.66 லட்சம் முதல் ரூ.47.64 லட்சம் வரை உள்ளது. இரண்டு எஸ்யூவிகளும் எம்ஜி குளோஸ்டர், ஜீப் மெரிடியன், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful