2024 ஹூண்டாய் கிரெட்டா இப்படிதான் இருக்குமா ? டிசைன் ஸ்கெட்ச் வடிவமைப்பை இங் கே பாருங்கள்
published on ஜனவரி 09, 2024 04:45 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 187 Views
- ஒரு கருத்தை எழுதுக
டிசைன் ஸ்கெட்ச் சமீபத்தில் இணையத்தில் வெளியான படங்களில் பார்த்த 2024 கிரெட்டாவின் இறுதி வடிவத்தை போல இருக்கின்றது.
-
முன்பக்கத்தில், கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அனைத்து புதிய கிரில், புதிய ஹெட்லைட்கள் மற்றும் மிக முக்கியமான சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
எஸ்யூவி இப்போது முன்பக்கம் முழுமைக்கும் LED DRL -கள் தலைகீழான L- வடிவ வடிவமைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன.
-
பின்புறத்தில், முன்புறத்தில் உள்ள அதே தலைகீழ் L- வடிவ சிக்னேச்சர் கனெக்டட் புதிய LED டெயில்லைட் செட்டப்பை பெறுகிறது.
-
கியா செல்டோஸில் காணப்படுவது போல் புதுப்பிக்கப்பட்ட கேபின் ஒரு இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது.
-
ஹூண்டாயின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காம்பாக்ட் எஸ்யூவி இப்போது ஆப்ஷனலான 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (160 PS / 253 Nm) 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா -வின் ஃபேஸ்லிப்ட் ஜனவரி 16, 2024 அன்று வெளியாகவுள்ளது . அதற்கு முன்னதாகவே ஹூண்டாய் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. மேலும் அதற்கான டீஸர்களையும் வெளியிட்டது. இப்போது, ஹூண்டாய் 2024 கிரெட்டாவின் இரண்டு டிஸைன் ஸ்கெட்ச்களை வெளியிட்டுள்ளது, இது எஸ்யூவி -யின் முன் மற்றும் பின் பக்கங்களைக் காட்டுகிறது. டிஸைன் ஸ்கெட்ச் தோற்றத்தில் இது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
முன்பக்கம்
அப்டேட் உடன், ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இப்போது ஒரு சிறப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது. புதிய செவ்வக வடிவ கிரில் மற்றும் முன்பக்கத்தில் உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தலைகீழ் வடிவத்துடன் கூடிய L- வடிவ சிக்னேச்சர் கூடிய பானட் முழுமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள LED DRL ஸ்ட்ரிப் இருக்கின்றது. ஹெட்லைட்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஸ்கொயர் ஹவுசிங் ஆகியவற்றையும் பார்க்க முடிகின்றது. ஒட்டுமொத்தமாக, 2024 கிரெட்டாவின் டிஸைன் ஸ்கெட்ச் ஆனது எஸ்யூவியின் ஆன்லைனில் வெளியான படங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி வடிவத்துக்கு நெருக்காமாக உள்ளது.
பின்பக்கம்
2024 ஹூண்டாய் கிரெட்டாவின் சிறப்பான தோற்றத்தை பின்புறத்திலும் பார்க்க முடிகிறது, அனைத்து புதிய கனெக்டட் LED டெயில்லேம்ப்கள் முன்புறம் அதே இன்வெர்ட்டட் L வடிவ எலமென்ட்டை கொண்டுள்ளது. அதன் வலுவான தோற்றத்துக்கு மேலும் பங்களிப்பது முக்கிய சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகும். நிச்சயமாக, சக்கரங்கள் காரில் மிகவும் சரியான அளவில் உள்ளன, மேலும் வீல் ஆர்ச்களின் கீழ் அழகாக பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
முற்றிலும் புதிய கேபின் & அம்சங்கள்
கிரெட்டா 2024 டூயல் ஸ்கிரீன் செட்டப்பை கொண்ட புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது (இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு 10.25-இன்ச் மற்றும் டிரைவருக்கு 10.25-இன்ச்). எஸ்யூவி -யில் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொடுக்கப்படும் என்பதால் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது.
ஒரு புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின்
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இப்போது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி -ன் பழைய பதிப்பில் கிடைக்கும் மற்ற இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் அப்படியே ஃபேஸ்லிப்ட்டிலும் கொடுக்கிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS / 144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் 1.5- லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஹூண்டாய் கிரெட்டா ரூ.11 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: கிரெட்டா ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful