சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா WPL 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV அறிவிக்கப்பட்டுள்ளது

டாடா பன்ச் EV க்காக பிப்ரவரி 23, 2024 06:37 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

டாடா மகளிர் பிரீமியர் லீக் 2024 பிப்ரவரி 23, 2024 முதல் மார்ச் 17, 2024 வரை நடைபெறவுள்ளது.

  • வுமன்ஸ் பிரீமியர் லீக் 2024 என்பது இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) போல பெண்கள் மட்டுமே ஆடும் கிரிக்கெட் தொடர் ஆகும்.

  • இந்திய கிரிக்கெட் லீக்குகளான ஐபிஎல் மற்றும் டபிள்யூபிஎல் ஆகிய இரண்டிற்கும் டாடா டைட்டில் ஸ்பான்சர் ஆக உள்ளது.

  • பன்ச், டியாகோ EV, ஆல்ட்ரோஸ், ஹாரியர் மற்றும் நெக்ஸான் ஆகியவை முந்தைய ஐபிஎல் சீசன்களின் அதிகாரப்பூர்வ கார்களாக இருந்தன.

டாடா பன்ச் EV, டாடாவின் ஆல் எலக்டிரிக் கார் வரிசையில் சமீபத்தி சேர்ந்தது. டாடா நிறுவனமே வுமன்ஸ் பிரீமியர் லீக் 2024 -ன் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. ஆகவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பன்ச் EV லீக்கின் அதிகாரப்பூர்வ காராக மாறியுள்ளது, இது இந்தியாவில் பிப்ரவரி 23, 2024 முதல் மார்ச் 17, 2024 வரை நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 22, 2024

கிரிக்கெட் லீக்கில் இடம்பெற்ற மற்ற டாடா கார்கள்

ஒரு டாடா கார் கிரிக்கெட் லீக்கின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருப்பது இது முதல் முறை அல்ல. முதன் முதலில் 2018 ஆண்டு டாடா நெக்ஸான் ஐபிஎல் அதிகாரப்பூர்வ காராக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019 ஐபிஎல் சீசனில் ஹாரியர் எஸ்யூவி அதிகாரப்பூர்வ காராகவும், 2020 -ல் ஆல்ட்ரோஸ் ஆகவும், 2021 இல் சஃபாரி எஸ்யூவி ஆகவும், 2022 -ல் டாடா பன்ச் ஆகவும் மாறியது. அதே ஆண்டில் டாடா அதன் டைட்டில் ஸ்பான்சராக ஆவதன் மூலம் தனது கூட்டணியை உறுதிப்படுத்தியது. இந்தியன் பிரீமியர் லீக் பின்னர் டாடா டியாகோ EV 2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கார் ஆனது. மேலும் 2023 -ல், இந்திய கார் தயாரிப்பாளரும் வுமன்ஸ் பிரீமியர் லீக்கிற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றார், இதில் டாடா சஃபாரியின் ரெட் டார்க் பதிப்பு சீசனின் அதிகாரப்பூர்வ காராக இருந்தது.

டாடா பன்ச் EV பற்றிய கூடுதல் தகவல்கள்

டாடா பன்ச் EV ஆனது, Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்ட டாடாவின் முதல் ஆல் எலக்ட்ரிக் கார் ஆகும். இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது - மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் - மற்றும் அதன் விவரங்கள் கீழே உள்ளன:

வேரியன்ட்

மீடியம் ரேஞ்ச்

லாங் ரேஞ்ச்

பேட்டரி பேக்

25 kWh

35 kWh

பவர்

82 PS

122 PS

டார்க்

114 Nm

190 Nm

கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச்

315 கி.மீ

421 கி.மீ

பன்ச் EV பல சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கின்றது, மேலும் சார்ஜிங் செய்வதற்கான நேரங்கள் பின்வருமாறு:

சார்ஜர்

மீடியம் ரேஞ்ச்

லாங் ரேஞ்ச்

3.3 kW AC

9.4 மணி நேரம்

13.5 மணி நேரம்

7.2 kW AC

3.6 மணி நேரம்

5 மணி நேரம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர்

56 நிமிடங்கள்

56 நிமிடங்கள்

மேலும் பார்க்க: Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டாடா பன்ச் EV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்றவற்றுடன் வருகிறது.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன

விலை போட்டியாளர்கள்

டாடா பன்ச் EV -யின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. சிட்ரோன் eC3 உடன் இது போட்டியிடும் மேலும், டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata பன்ச் EV

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை