டாடா நிறுவனம் ஜனவரி 17 ஆம் தேதி பன்ச் EV -யை அறிமுகப்படுத்துகிறது
published on ஜனவரி 12, 2024 09:38 pm by ansh for டாடா பன்ச் EV
- 503 Views
- ஒரு கருத்தை எழுதுக
வடிவமைப்பு மற்றும் வசதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன, பன்ச் EV -யின் பேட்டரி, செயல்திறன் மற்றும் ரேஞ்ச் பற்றிய விவரங்களுக்காக நாம் இன்னும் காத்திருக்கிறோம்.
-
12 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை எதிர்பார்க்கப்படுகிறது.
-
முன்பக்கம் முழு அகலத்துக்கும் உள்ள LED DRL கள், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஹெட்லைட்கள் மற்றும் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
-
உள்ளே, இது டாடாவின் புதிய ஸ்டீயரிங், டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் 10.25-இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றை பெறுகிறது.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.
டாடா பன்ச் EV இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் பல டீஸர்களுக்கு பிறகு, டாடா இப்போது இறுதியாக பன்ச் -காரின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இது ஜனவரி 17 அன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இருப்பினும், அதன் அறிமுகத்திற்கு முன், டாடா அதன் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் ஆகிய விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். பன்ச் EV பற்றி இதுவரை நாம் அறிந்த அனைத்தும் விஷயங்களும் இங்கே உள்ளன.
நெக்ஸானால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு
பன்ச் EV காரானது நெக்ஸான் இவி -யில் இருந்து புதிய வடிவமைப்பின் மொழியை பெற்றுள்ளது. இதன் முன்பக்கம் முழுவதும் உள்ள LED DRL -கள், செங்குத்தாக உள்ள LED ஹெட்லைட்கள் மற்றும் ஒரு பெரிய பம்பர் உள்ளது. பக்கவாட்டில் ஏரோடைனமிக் அலாய் வீல்களையும் பெறுகிறது; இருப்பினும், பின்பக்கம் ஏறக்குறைய இதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) காரை போலவே உள்ளது.
நவீன வசதிகள் கொண்ட கேபின்
உள்ளே, பன்ச் EV ஆனது, டாடாவின் புதிய ஸ்டீயரிங் வீலுடன் டூயல்-டோன் கேபினைக் கொண்டுள்ளது, அதில் ஒளிரும் வகையில் டாடா லோகோ உள்ளது. இது டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல், புதிய வடிவிலான டாஷ்போர்டு மற்றும் பெரிய டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.
அம்சங்கள் பட்டியல்
டாடா பன்ச் EV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதுவரை வெளியான டீஸர்களின் அடிப்படையில், அதன் எஸ்யூவி பண்புகளை வெளிப்படுத்த சில வகையான டிரைவ் அல்லது டிராக்ஷன் மோட்களை (வழக்கமான பன்ச் போன்றது) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: வெளியீடு நெருங்குவதால் டீலர்ஷிப்களை வந்தடையும் Tata Punch EV கார்கள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வரும்.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
டாடா இந்த காரின் பவர்டிரெய்ன் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக்குகளின் தேர்வுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். பன்ச் EV ஆனது டாடாவின் புதிய Acti.ev கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
விலை & போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV -யின் விலையை ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் நிர்ணயிக்கலாம். சிட்ரோன் eC3 -க்கு இது நேரடி போட்டியாக இருக்கும் டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகிய கார்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் AMT