• English
    • Login / Register

    Punch EV -யை இன்று அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்… இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

    டாடா பன்ச் EV க்காக ஜனவரி 05, 2024 12:15 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 143 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பன்ச் EV சோதனை செய்யப்படும் போது பல முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 500 கி.மீ -க்கு வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tata Punch EV

    • வேறுபட்ட வரம்பு மற்றும் விலை என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Nexon EV-ல் இருந்து பெறப்பட்ட வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள்.

    • மற்ற புதிய டாடா மாடல்களை போலவே கேபினும் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் மல்டி-லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவற்றைப் பெறலாம்.

    • இதன் விலை ரூ.12 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா பன்ச் EV மிகவும் எதிர்பார்க்கப்படும் என்ட்ரி-லெவல் மின்சார காராகும், மேலும் இது பலமுறை சோதனை -யின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.டாடா அதன் சமூக ஊடக பக்கங்களில் மின்சார மைக்ரோ எஸ்யூவி இன்று அறிமுகமாகவுள்ளது என்பதை காட்டும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. இது ஒரு அதிகாரப்பூர்வமான பார்வை இல்லை என்றாலும் பன்ச் EV ஒரு புதிய வடிவமைப்பில் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV  -யில் இருந்து கடன் வாங்கிய பாகங்களுடன் வரலாம். இதுவரை வெளியான ஸ்பை படங்களின் அடிப்படையில். பன்ச் EV -யில் கிடைக்கக்கூடிய அனைத்தும் இங்கே உள்ளன.

    A post shared by TATA.ev (@tata.evofficial)

    Nexon EV இன்ஸ்பையர் செய்யப்பட்ட டிசைன்

    2024 Tata Punch EV

    பன்ச் EV ஆனது அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) போலவே இருக்கலாம் ஆனால் முன்பக்கத்தில் வித்தியாசமான வடிவமைப்பை பார்க்க முடிகிறது. அதன் முன் பக்கத்தில் நெக்ஸான் EV போன்ற லைட்டிங் எலமென்ட்கள், ஸ்பேனிங் LED DRL -கள் மற்றும் நேர்த்தியான LED ஹெட்லைட்கள் போன்றவை இடம்பெறலாம். இது ICE பன்ச் -உடன் ஒப்பிடும்போது வித்தியாசமான கிரில்லையும், அலாய் வீல்களுக்கான வித்தியாசமான வடிவமைப்பையும் பெறலாம்.

    2024 Tata Punch EV

    பன்ச் EV -யின் கேபின் விரிவாக தெரிய வரவில்லை என்றாலும், ஆனால் பெரிய சென்ட்ரல் டிஸ்பிளேவுடன் மற்ற புதிய டாடா மாடல்களை போலவே இதுவும் இதே போன்ற வடிவமைப்பை பெறலாம். கார் தயாரிப்பாளர் ICE பன்ச் -ன் பிளாக் மற்றும் வொயிட் கேபின் தீம் ஆகியவை கொடுக்கப்படலாம், ஆனால் டாஷ்போர்டு அமைப்பு EV-க்கான டச்களுடன் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    500 கிமீ தூரம்?

    டாடா பன்ச் EV உடன் பல பேட்டரி பேக்குகளை வழங்கலாம். என்ட்ரி லெவல் மின்சார எஸ்யூவி இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த புதிய தலைமுறை மின்சார பவர்டிரெய்ன்  500 கி.மீ வரை செல்லக்கூடும். மேலும், இது மல்டி-லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பெறலாம், பேடில் ஷிஃப்டர்களும் கொடுக்கப்படலாம்.

    புதிய அம்சங்கள்

    Tata Punch EV paddle shifter spied

    அதன் ICE மாடலின் வடிவமைப்பு மாற்றங்களைத் தவிர, அதன் அம்சங்கள் பட்டியலில் சில மேம்படுத்தல்களையும் கொடுக்கலாம். பன்ச் EV ஆனது பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டில் கிளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வரலாம்.

    மேலும் படிக்க: டாடா பன்ச் 3,00,000வது யூனிட்டை வெளியிடுகிறது

    பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், ABS வித் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ரியர்வியூ கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவற்றைப் பெறலாம்.

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    2024 Tata Punch EV touchscreen

    டாடா பன்ச் EV -யின் விலை ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.இது சிட்ரோன் eC3 -க்கு போட்டியாக இருக்கும். டாடா டியாகோ EV மற்றும் இந்த எம்ஜி காமெட் இவி -க்கு பிரீயமான மாற்றாகவும் இருக்கும் மேலும் டாடா நெக்ஸான் EV -க்கு சிறிய மற்றும் மிகவும் விலை குறைவான மாற்றாகவும் உள்ளது.

    மேலும் படிக்க: பன்ச் AMT

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச் EV

    1 கருத்தை
    1
    K
    kilaru sureshkumar
    Jan 6, 2024, 6:10:36 AM

    Very good car in ev

    Read More...
      பதில்
      Write a Reply

      explore மேலும் on டாடா பன்ச் இவி

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்
      ×
      We need your சிட்டி to customize your experience