சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG கோமெட்-டிற்கு போட்டியாக டாடா டியாகோ EV ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும்

published on மார்ச் 14, 2023 06:55 pm by tarun for எம்ஜி comet ev

MG யின் புதிய மலிவான எலக்ட்ரிக் கார் 300 கிலோமீட்டர்கள் தூரம் வரை ரேன்ஜ் -ஐ வழங்குகிறது.

  • ஏப்ரல் இறுதியில் இரண்டு கதவுகளைக் கொண்ட கோமெட் EV காருக்கு MG விலைகளை அறிவிக்க உள்ளது.

  • அது பலதரப்பட்ட பேட்டரி பேக் தேர்வுகள் மற்றும் 300 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் -ஐ வழங்குகிறது.

  • டூயல் 10.25 அங்குல டிஸ்பிளேக்கள், ஆட்டோ ஏசி மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  • சுமார் ரூ.9 இலட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான MG யின் மிக மலிவான எலக்ட்ரிக் கார்கள் ஒன்றின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. அவர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் காரான கோமெட் EV இரண்டு கதவுகளைக் கொண்ட கார்களுக்கான சந்தையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் சிட்ரோன் eC3 மற்றும் டாடா டியாகோ EV கார் விரும்பிகளுக்கு போட்டியாக வருகிறது.

MG கோமெட் EV கார்தான் அடிப்படையில் ஏர் EVயாக இருக்கும், அது MG-இன் சகோதரி பிராண்டான வூலிங்-கின் கீழ் இந்தோனேசியாவில் விற்கப்படுகிறது. நீளத்தைப் பொருத்தவரை, டாடா நேனோவைவிட அது நீளம் குறைந்தது, ஆனால் மாருதி ஆல்டோ K10 ஐ விட அகலமானது மற்றும் உயரமானது. என்ட்ரி-லெவல் MG EV கேபினுக்குள் நான்கு பயணிகள் அமர்வதை அனுமதிக்கும்.

மேலும் படிக்க: MG கோமெட் EVயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

இந்த மைக்ரோ EV பல அம்சங்களை வழங்குகிறது, அதாவது இரு 10.25 அங்குல டச் ஸ்கிரீன் (ஒன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துக்கும் மற்றொன்று டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்டேசனுக்கும்), கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமெட்டிக் ஏசி, ஸ்டியரிங்-மௌன்டட் கன்ட்ரோல்கள், டூயல் முன்பக்க ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற-வியு கேமரா போன்றவை அதில் அடங்கியுள்ளன.

இந்தோனேசியாவில், ஏர்(கோமெட்) EV 17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக் ஆப்சன்களுடன் வழங்கப்படுகிறது, அது முறையே 200கிமீ மற்றும் 300 கிமீ தூரத்துக்கு ரேன்ஜ் -ஜ வழங்குகிறது. ரியர்-வீல் டிரைவ் காருக்கு ஆற்றலளிக்கும் 40PS எலக்ட்ரிக் மோட்டாருக்கு இரு பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கோமெட் EV-உடன் இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: இந்தியாவில் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்

சுமார் ரூ. 9 இலட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) MG கோமெட் EV -யின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது இங்கு சந்தையில் விற்பனைக்கு வந்தவுடன் ஃப்ளீட்/கமர்ஷியல் வாங்குபவர்களுக்கும் வழங்கப்படலாம்.

மேலும் படிக்கவும்: டாடா டியாகோ AMT

t
வெளியிட்டவர்

tarun

  • 35 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி Comet EV

Read Full News

explore மேலும் on எம்ஜி comet ev

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.49 - 19.49 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.40 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை