சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மறைக்கப்பட்ட நிலையில் டாடா பன்ச் EV சோதனையின் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது

ansh ஆல் நவ 07, 2023 03:20 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
31 Views

பம்பருக்கு கீழே ஒரு டெயில்பைப்பை நீங்கள் பார்க்க முடியும், மறைக்கப்பட்ட நிலையில் பன்ச் அதன் எக்ஸாஸ்டை பம்பரில் காட்டுகிறது.

  • ரெகுலர் மாடலில் வடிவமைப்பில் குறைவான அப்டேட்களை பன்ச் EV பெறுகிறது, நெக்ஸான் EV போன்ற ஸ்டைலிங் -கையும் பெறுகிறது.

  • 500 கிமீக்கு மேல் ரேஞ்ச் கிடைக்கும் என டாடா கூறுகிறது, அதிகாரப்பூர்வ பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

  • பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.

  • அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளிவரக்கூடும்.

டாடா பன்ச் EV -யானது சில காலமாக உற்பத்தி நிலையில் இருந்து வருகிறது, அதன் வருகைக்காக நாங்கள் காத்திருக்கும் போது, ​​உருவ மறைப்பு செய்யப்பட்ட காரானது சாலைகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்பை ஷாட்களில், பன்ச் EV-யின் பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றம் தெளிவாகக் தெரிந்தது, அதன் வடிவமைப்பு பற்றிய குறிப்புகளை எங்களுக்கு அளிக்கும் அதே நேரத்தில் நம்மை குழப்பவும் செய்கின்றன என்பதை ஸ்பை ஷாட்களில் பார்க்க முடிகிறது

இது பன்ச் EV -யா?

ஆமாம், பம்பருக்கு கீழ் டெயில்பைப் ஒன்று உள்ளது, இது ICE (இன்டர்னல் கம்பசன் இன்ஜின்) டாடா பன்ச் என்று நம்மை நினைக்க வைக்கும் வகையில் உள்ளது. இது எலக்ட்ரிக் பதிப்பு என்று நாம் நம்புவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பன்ச் EV முன்பு பின்புற சக்கர டிஸ்க் பிரேக்குகளுடன் காணப்பட்டது, அதை இந்த ஸ்பை ஷாட்களிலும் காணலாம், இரண்டாவதாக, தற்போதைய ICE பன்ச் அதன் டெயில்பைப் வடிவமைப்பை பின்புற பம்பரில் ஒருங்கிணைத்துள்ளது, அதற்கு கீழே இணைக்கப்படவில்லை.

பன்ச் EV ஆனது புத்தம் புதிய அலாய் வீல்கள் உட்பட பிற வடிவமைப்பு மாற்றங்களைப் பெறும், இது நாம்ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் EV - யில் பார்த்ததைப் போன்று உள்ளது. இதுவரை ஸ்பை ஷாட்களின் அடிப்படையில், பன்ச் EV ஆனது புதிய வடிவிலான கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏர் டேம்களைப் பெறலாம். மைக்ரோ எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் அதன் பெட்ரோல் இணையைப் போலவே இருக்கும், ஆனால் டாடா,அதன் டிகோர் EV மற்றும் டியாகோ EV -வில் காணப்படுவதைப் போலவே EV-க்கான தனிப்பட்ட நீல எலமென்ட்களை இதிலும் சேர்க்கலாம்.

கேபின் அம்சங்கள்

கேபின் அதன் எலக்ட்ரிக் தன்மையை முன்னிலைப்படுத்த புதிய தீம் ஒன்றையும் பெறலாம் ஆனால் அதன் விவரங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், முந்தைய ஸ்பை ஷாட்டில் இருந்து, அதன் டேஷ்போர்டில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டாடாவின் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பேக்லிட் டாடா லோகோவுடன் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

மேலும் படிக்க: டாடா அவின்யா EV, ஜாகுவார் லேண்ட் ரோவரின் EMA பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது

செமி டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், அதிகபட்சம் 6 ஏர்பேக்குகள், EBDயுடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ரியர்வியூ கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பேட்டரி பேக் ரேஞ்ச்

டியாகோ EV மற்றும் டியோகோ EV போன்ற பேட்டரி பேக்குகளை பன்ச் EV பெற்றிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் பயணதூர வரம்பு 300 கிமீ முதல் 350 கிமீ வரை இருக்கும் என்றும் நம்புகிறோம். இருப்பினும், சமீபத்தில் டாடாவின் அதிகாரிகள், பன்ச் EV ஆனது 500 கி.மீ.க்கு மேல் உள்ளதாகக் கூறப்பட்ட பயணதூர வரம்பில் விளையாடும் என்று உறுதிப்படுத்தினர், அதாவது இந்த சிறிய EV ஆனது அந்த கூடுதல் தூரத்திற்கு அதிக திறன் வாய்ந்த மோட்டார்கள் கொண்ட பெரிய பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும்.

அறிமுகம் மற்றும் விலை விவரங்கள்


டாடா பன்ச் EV இந்த இறுதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் மற்றும் ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா டியாகோ EV மற்றும் MG கோமெட் EVக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும் அதே நேரத்தில் சிட்ரோன் eC3 -க்கு நேரடி போட்டியாக இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள: டாடா பன்ச் AMT

Share via

Write your Comment on Tata பன்ச் EV

H
hogo
Nov 7, 2023, 5:44:25 PM

These posts are random

மேலும் ஆராயுங்கள் on டாடா பன்ச் இவி

டாடா பன்ச் இவி

4.4120 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை