சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய தோற்றத்தில் Nexon Facelift காரை அறிமுகப்படுத்திய டாடா

published on செப் 01, 2023 11:01 pm by rohit for டாடா நிக்சன்

ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படும்.

  • புதிய நெக்ஸானை ஃபியர்லெஸ், கிரியேட்டிவ், ப்யூர் மற்றும் ஸ்மார்ட் என நான்கு வேரியன்ட்களில் டாடா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

  • எக்ஸ்டீரியர் மாற்றங்களில் ஸ்லீக்கர் கிரில், கனெக்டட் LED டெயில்லைட்ஸ் மற்றும் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் ஆகியவை அடங்கும்.

  • புதிய நெக்ஸான் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ், டச்-பேஸ்டு ஏசி கண்ட்ரோல்கள் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் வருகிறது.

  • புதிய அம்சங்களில் 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளக் கூடிய முன் சீட்கள் ஆகியவை அடங்கும்.

  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் இது கிடைக்கும்; புதிய 7-ஸ்பீடு DCT -யை பெறுகிறது.

  • ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமாக (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்த பின்னர் தற்போது முழுமையாக அதன் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இது நான்கு வேரியன்ட்களில் விற்கப்படும்: ஃபியர்லெஸ், கிரியேட்டிவ், ப்யூர் மற்றும் ஸ்மார்ட். சமீபத்திய ஸ்பை ஷாட்கள் ஏற்கனவே புதிய வடிவமைப்பானது இந்த காரில் இருக்கிறது என தெரிய வந்தாலும், இந்தியாவின் தற்போதைய சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் எஸ்யூவி -யின் புதிய தோற்றத்தை பற்றிய எங்கள் முதல் விரிவான பார்வை இதுவாகும். செப்டம்பர் 14 அன்று புதிய நெக்ஸானின் வேரியன்ட் வாரியான விலையை டாடா வெளியிடும் அதே நாளில் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் EV -யை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள எக்ஸ்டீரியர்

View this post on Instagram

A post shared by CarDekho India (@cardekhoindia)

டாடாவின் புதுப்பிக்கப்பட்ட சப்-4m எஸ்யூவி இப்போது ஒரு நேர்த்தியான முன் வடிவமைப்பை கொண்டுள்ளது, இதில் புதிய கிரில் மற்றும் திருத்தப்பட்ட LED DRL -கள் உள்ளன. முன்பக்க பம்பர் செங்குத்தாக அடுக்கப்பட்ட LED ஹெட்லைட்களை கனெக்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது , கீழ் பகுதியில் ஃபிரெஷ்ஷான ஆக்ஸன்ட்கள் உள்ளன. எஸ்யூவியின் பக்கவாட்டில் நமக்கு தெரியும் ஒரே முக்கிய அப்டேட் அலாய் வீல் டிஸைன் மட்டுமே.

பின்புறத்தில் உள்ள மாற்றங்களில் கனெக்டட் LED டெயில்லைட்களின் புதிய தொகுப்பு மற்றும் டெயில்கேட்டிற்கான புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் ஆகியவை அடங்கும். இந்த அனைத்து அப்டேட்களும் நெக்ஸான் EV க்கும் கொடுக்கப்படும், இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை போல குறிப்பிட்ட ப்ளூ ஹைலைட்ஸ் மற்றும் குளோஸ்டு-ஆஃப் பேனல்களை பெறும்.

இன்ட்டீரியரும் புதிய வடிவமைப்பை பெறுகிறது

டாடா நிறுவனம் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஷ்போர்டு மற்றும் கர்வ் -ல் உள்ளதைப் போலவே புதிய 2-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை வழங்கும். மையத்தில் லைட்-அப் டாடா லோகோ -வும் கொடுக்கப்பட்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் பேனல் வெறுமனே ஒளிரக் கூடிய வசதியை மட்டும் கொண்டிருக்கவில்லை, கூடுதலாக நவீன இன்டெர்ஃபேஸ் -க்கான டச் இன்புட்களால் இயக்கப்படுகிறது.

டாடா நிறுவனம் எஸ்யூவியின் கேபினுக்கு புதிய ஸ்டைலிங் மற்றும் அப்ஹோல்ஸ்டரியை வழங்கியுள்ளது, இது வேரியன்ட் மற்றும் வெளிப்புற நிறத்தை பொறுத்து வெவ்வேறு கலர் ஸ்கீம்களை கொண்டிருக்கும்.

மேலும் பார்க்கவும்: டாடா சஃபாரி மற்றும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் 2023 அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்

இந்த ஃபேஸ்லிஃப்ட்டுடன், புதிய டாடா நெக்ஸான் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, லேட்டஸ்ட் iRA கனெக்டட் கார் டெக் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 360-டிகிரி கேமராவுடன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றையும் டாடா வழங்கும். புதிய நெக்ஸான் ஆனது சப்வூஃபர் மற்றும் ஹர்மன் நிறுவனத்தின் AudioworX உட்பட 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட​ சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.

புதிய டிஜிட்டல் டிரைவரின் டிஸ்பிளேவின் சிறப்பான செயல்பாடு என்னவென்றால், இது சொகுசு கார்களில் காணப்படும் டிஜிட்டல் கிளஸ்டர்களை போலவே நேவிகேஷனையும் நமக்கு காட்டும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில், ஃபேஸ்லிஃப்டட் மாடலில் ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை கிடைக்கும்.

புதிய நெக்ஸானின் பவர்ஹவுஸ்கள்

2023 டாடா நெக்ஸான் ஒரு பரிச்சயமான ஜோடி இன்ஜின்களை கொண்டுள்ளது, ஆனால் இப்போது அதிக பிரீமியம் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனும் உள்ளது. இரண்டின் விவரங்களும் பின்வருமாறு:

விவரங்கள்

1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5-லிட்டர் டீசல்

பவர்

120PS

115PS

டார்க்

170Nm

260Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT, 7-ஸ்பீடு DCT (புதியது)

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

நெக்ஸான் தொடர்ந்து டிரைவ் மோடுகளை (ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ்) வழங்குகிறது, ஆனால் இப்போது ஏஎம்டி மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு பேடில் ஷிஃப்டர்களை சேர்த்துள்ளது.

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டை பொறுத்தவரை, பவர்டிரெயினில் எந்த மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது வெவ்வேறு பேட்டரி அளவுகளுடன் இரண்டு பதிப்புகளில் தொடர்ந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பிரைம் மற்றும் மேக்ஸ்.

மேலும் படிக்க: டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிரிவின் பெயரை Tata.ev என மாற்றியுள்ளது

விலை எவ்வளவு இருக்கும் ?

டாடா நிறுவனம் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தற்போதுள்ள மாடலை விட கூடுதலாக நிர்ணயிக்கலாம் என்பதால் இதன் விலையை ரூ.8 லட்சம் முதல் ரூ.14.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் வெளியிடும் எதிர்பார்க்கிறோம். இந்த சப்-4m எஸ்யூவி -யானது மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மஹிந்திரா XUV300, ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களுடன் போட்டியிடும் .

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 70 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன்

R
rakesh kumar
Sep 3, 2023, 5:54:16 PM

CNG Variant Available or Not in Fecelift Launching List.

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை