டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிரிவின் பெயரை Tata.ev என மாற்றியுள்ளது
rohit ஆல் ஆகஸ்ட் 30, 2023 04:50 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய பிராண்ட் அடையாளமானது, டாடா மோட்டார்ஸின் மின்சார வாகன (EV) பிரிவுக்கான புதிய டேக் லைனை கொண்டு வருகிறது: மூவ் வித் மீனிங்
-
டாடா தனது மின்சார கார் பிரிவுக்கான புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
-
புதிய பிராண்டின் அடையாளச் சின்னம் புதிய ஒலி அடையாளத்தையும் பெறும்.
-
புதிய Tata.ev பிராண்டிற்கு கார் தயாரிப்பாளர் அதன் Evo Teal வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
-
டாடா மோட்டார்ஸ் புதிய பிராண்ட் அடையாளத்தையும் லோகோவையும் படிப்படியாக வெளியிட உள்ளது
மின்சார வாகன (EV) களத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ், இப்போது அதன் EV பிரிவை Tata.ev என மறுபெயரிட்டுள்ளது, இது முன்பு Tata Passenger Electric Mobility Ltd (TPEM) என அழைக்கப்பட்டது. மஹிந்திரா சமீபத்தில் அதன் வரவிருக்கும் புதிய எலக்ட்ரிக் (BE) வாகனங்களுக்கான அடையாளத்தையும் மாற்றியிருந்தது.
ஏன் இந்த மாற்றம்?
நிலைத்தன்மை, சமூகம் மற்றும் தொழில்நுட்பத்தின் மதிப்புகளை இணைப்பதே இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளது என டாடா தெரிவித்துள்ளது. புதிய பிராண்ட் அடையாளம் அதன் சொந்த முழுக்கத்துடன் வருகிறது - மூவ் வித் மீனிங்
மேலும் படிக்க: BS6 பேஸ் 2, ஃப்ளெக்ஸ்-ஃப்யூலில் இயங்கும் டொயோட்டா Toyota Innova Hycross ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காரின் மாதியை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி
மற்ற திருத்தங்கள்
டாடா தனது மின்வாகன பிரிவுக்கு ஒரு புதிய அடையாளத்தை மட்டுமல்ல, புதிய லோகோவையும் கொடுத்துள்ளது. இது ஒரு ஆர்பிட் வடிவில் வைக்கப்பட்டுள்ள ‘.ev’ பின்னொட்டைக் கொண்டுள்ளது, இது டாடாவின் கூற்றுப்படி, மனித மற்றும் சுற்றுச்சூழல் தொடர்புகளின் ஒரு வட்ட சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்த உதவுகிறது.
Tata.ev -க்காக அதன் தனித்துவமான Evo Teal கலர் ஸ்கீமை டாடா பயன்படுத்தியுள்ளது, இது அதன் நிலைத்தன்மை உறுதிப்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது. டாடா தனது புதிய பிராண்ட் அடையாளத்தை எலக்ட்ரானிக் சர்க்யூட்கள் மற்றும் சக்திவாய்ந்த சிற்றலை ஒலி ஆகியவற்றின் கலவையாக ஒரு தனித்துவமான ஒலியை வழங்குகிறது.
எப்போது வெளியிடப்படும்?
மின்சார வாகன துறையில் 70 சதவீத சந்தை பங்குடன் டாடா நிறுவனம் முன்னணியில் உள்ளது. அது புதிய பிராண்ட் அடையாளத்தை படிப்படியாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி வரவிருக்கும் டாடா நெக்ஸான் EV -யின் ஃபேஸ்லிப்ட் காரில் புதிய லோகோ மற்றும் அடையாளத்தை விரைவில் பார்க்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
டாடா நெக்ஸான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் தவிர, டாடாவின் டேபிளில் மேலும் இரண்டு மின்சார கார்கள் உள்ளன: டியாகோ EV மற்றும் டிகார் EV. அதன் புதிதாக வரவிருக்கும் மின்சார வாகனங்களில் பன்ச் EV, ஹாரியர் EV மற்றும் கர்வ்வ் EV ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் EV சார்ஜ் செய்யும் போது முதல் முறையாக கேமராவில் சிக்கியது