புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள Tata Nexon EV கார்
published on செப் 24, 2024 05:35 pm by rohit for டாடா நெக்ஸன் இவி
- 58 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸான் EV -யை 45 kWh பேட்டரி பேக்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இப்போது 489 கி.மீ ரேஞ்ச் இந்த காரில் கிடைக்கும். மேலும் இப்போது புதிய ரெட் டார்க் பதிப்பையும் டாடா அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா நெக்ஸான் EV காரின் எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சில வசதிகள் இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இப்போது புதிய ரெட் டார்க் பதிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நெக்ஸான் EV 45 லாங் ரேஞ்ச் -ன் அப்டேட் செய்யப்பட்ட வேரியன்ட் வாரியான விலை விவரங்களை இங்கே பார்க்கலாம்:
வேரியன்ட் |
புதிய நெக்ஸான் EV 45 லாங் ரேஞ்ச் |
கிரியேட்டிவ் |
ரூ.13.99 லட்சம் |
ஃபியர்லெஸ் |
ரூ.14.99 லட்சம் |
எம்பவர்டு |
ரூ.15.99 லட்சம் |
எம்பவர்டு பிளஸ் |
ரூ.16.99 லட்சம் |
நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் (LR) புதிய ரெட் டார்க் பதிப்பிலும் இப்போது கிடைக்கும். இது ஃபுல்லி லோடட் எம்பவர்டு பிளஸ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன் விலை ரூ.17.19 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லோவர் கிரியேட்டிவ் டிரிமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் -ன் ஆரம்ப விலை இப்போது ரூ.60,000 வரை குறைவாக உள்ளது.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் அப்டேட்கள்
டாடா நெக்ஸான் EV LR இப்போது ஒரு பெரிய 45 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது கர்வ் EV இல் உள்ள அதே அளவு மற்றும் 489 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. முன்பு இருந்த அதே 145 PS/215 Nm எலக்ட்ரிக் மோட்டார் இப்போதும் உள்ளது. அதன் C75 கிளைம்டு ரேஞ்ச் (உலகப் பயன்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில்) சுமார் 350 கி.மீ முதல் 370 கி.மீ வரை உள்ளது. நெக்ஸான் EV உடன் தற்போதுள்ள பேட்டரி பேக்குகளான 325 கி.மீ ரேஞ்ச் உடன் 30 kWh யூனிட் மற்றும் 465 கி.மீ ரேஞ்சில் 40.5 kWh யூனிட் ஆகியவற்றை டாடா தொடர்ந்து வழங்கும்:.
நெக்ஸான் EV இல் உள்ள புதிய பேட்டரி பேக் 60 kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி வெறும் 40 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் அப் செய்யலாம்.
வேறு ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா?
பனோரமிக் சன்ரூஃப் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது நெக்ஸான் EV -யின் மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரே கூடுதல் வசதி ஒரு ஃப்ரங்க் (முன் ட்ரங்க்) ஆகும். 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை மற்ற முக்கிய ஹைலைட்ஸ் ஆகும். 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
நெக்ஸான் EV ரெட் டார்க் எடிஷன் அறிமுகம்
நெக்ஸான் EV -ல் இந்த அப்டேட்களுடன் டாடா ரெட் டார்க் பதிப்பையும் வெளியிட்டுள்ளது. இது வழக்கமான மாடலின் அதே கார்பன் பிளாக் பெயிண்ட் ஆப்ஷனில் வருகிறது. அதே நேரத்தில் பிளாக்-அவுட் ரூஃப் ரெயில்கள், ORVM -கள், அலாய் வீல்கள் மற்றும் கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரெட் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்ட முன் ஃபெண்டர்களில் '# டார்க்' பேட்ஜும் உள்ளது.
உட்புறத்தில் கேபினை தனித்துவமாக காட்ட பிளாக் மற்றும் ரெட் தீம் கொண்டுள்ளது. டாடா டச் ஸ்கிரீன் UI ப-க்கு டார்க் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் "டார்க்" கலரில் உள்ளன.
மேலும் படிக்க: இந்தியாவின் முதல் டர்போ சார்ஜ்டு சிஎன்ஜி இன்ஜின்…Tata Nexon CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
டாடா நெக்ஸான் EV போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் EV மஹிந்திரா XUV400 க்கு போட்டியாக இருக்கும். மேலும் டாடா கர்வ் EV மற்றும் எம்ஜி வின்ட்சர் இவி ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.இதன் வசதிகளை வைத்து பார்க்கையில் இது MG ZS EV -க்கு ஒரு ஆப்ஷனாகவும் இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்