இந்தியாவின் முதல் டர்போ சார்ஜ்டு சிஎன்ஜி இன்ஜின்… Tata Nexon CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on செப் 24, 2024 03:42 pm by dipan for டாடா நிக்சன்
- 123 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸான் ஆனது இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினுடன் வரும் முதல் சிஎன்ஜி கார் ஆகும்.
-
நான்கு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ்.
-
வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகியவை டாடா நெக்ஸான் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பைப் போன்றே இருக்கின்றன..
-
டூயல் CNG சிலிண்டர்களுடன் வரும் இந்த காரில் 321 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது.
-
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஜோடியாக, 100 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜினுடன் வழங்கப்படுகிறது.
-
இந்த பிரிவில் பனோரமிக் சன்ரூ.ஃப் உடன் வரும் முதல் CNG கார் ஆகவும் இது உள்ளது.
-
நெக்ஸான் சிஎன்ஜியின் விலை ரூ..8.99 லட்சம் முதல் ரூ..14.59 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
டாடா நெக்ஸான் சிஎன்ஜி இந்தியாவில் ரூ..8.99 லட்சம் முதல் ரூ..14.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி இன்ஜினுடன் வரும் கார் ஆகும். மேலும் நெக்ஸான் இப்போது பனோரமிக் சன்ரூ.ஃப் உடன் வருகிறது.
வேரியன்ட் வாரியான விலை மற்றும் நெக்ஸான் CNG காரில் உள்ள வசதிகளைப் பார்ப்போம்:
விலை
வேரியன்ட் |
பெட்ரோல் விலை |
CNG விலை |
வித்தியாசம் |
ஸ்மார்ட் |
– |
ரூ. 8.99 லட்சம் |
புதிய வேரியன்ட் |
ஸ்மார்ட் பிளஸ் |
ரூ. 8.70 லட்சம் (5-ஸ்பீடு MT உடன்) |
ரூ. 9.69 லட்சம் (6-ஸ்பீடு MT உடன்) |
+ரூ. 99,000 |
ஸ்மார்ட் பிளஸ் எஸ் |
ரூ. 9 லட்சம் (5-ஸ்பீடு MT உடன்) |
ரூ. 9.99 லட்சம் (6-ஸ்பீடு MT உடன்) |
+ரூ. 99,000 |
பியூர் |
ரூ.9.70 லட்சம் |
ரூ.10.69 லட்சம் |
+ரூ. 99,000 |
பியூர் எஸ் |
ரூ.10 லட்சம் |
ரூ.10.99 லட்சம் |
+ரூ. 99,000 |
கிரியேட்டிவ் |
ரூ.10.70 லட்சம் |
ரூ.11.69 லட்சம் |
+ரூ. 99,000 |
கிரியேட்டிவ் பிளஸ் |
ரூ.11.20 லட்சம் |
ரூ.12.19 லட்சம் |
+ரூ. 99,000 |
ஃபியர்லெஸ் பிளஸ் PS |
– |
ரூ.14.59 லட்சம் |
– |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்க்கானவை ( பான்-இந்தியா )
டாடா நெக்ஸான் CNG காரில் கிடைக்கும் வசதிகள் அனைத்தையும் இப்போது பார்க்கலாம்:
புதிதாக என்ன இருக்கிறது
டாடா நெக்ஸான் CNG ஆனது 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டூயல்-CNG சிலிண்டர்களுடன் வருகிறது. இது 321 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டது. இது ICE ( இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) நெக்ஸானை விட 61 லிட்டர் குறைவாக உள்ளது. சிஎன்ஜி பதிப்பு பனோரமிக் சன்ரூ.ஃப் உடன் வருகிறது.
பவர்டிரெய்ன்
இன்ஜின் |
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி |
பவர் |
100 PS |
டார்க் |
170 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு மேனுவல் |
கிளைம்டு மைலேஜ் |
கி.மீ.க்கு 24 கிலோ |
நெக்ஸான் சிஎன்ஜி -யில் எந்த விதமான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் தற்போது கொடுக்கப்படவில்லை.
ஒப்பிடுகையில் நெக்ஸான் -ன் ICE எடிஷன் அதே இன்ஜினுடன் 120 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டிசிடி (டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 6-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. ICE-இயங்கும் நெக்ஸான் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினையும் (115 PS/260 Nm) பெறுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Tata Nexon EV ஆனது மேம்படுத்தப்பட்ட வரம்புடன் கூடிய பெரிய பேட்டரி பேக் மற்றும் பனோரமிக் சன்ரூ.ஃப் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கிடைக்கிறது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடா நெக்ஸான் சிஎன்ஜி புதிய பனோரமிக் சன்ரூ.ஃப் மற்றும் 10.25-இன்ச் டூயல்-ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது (ஒன்று டச் ஸ்கிரீன் -க்கு மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கு). இது வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 8-ஸ்பீக்கர் ஸ்பீக்கர் செட்டப் வருகிறது. ஒரு ஆட்டோ ஏசி, ஏர் ஃபியூரிபையர், ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் மற்றும் முன் பயணிகள் இருக்கை பெல்ட்களும் உள்ளன.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஆனது மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நெக்ஸான் ஏஎம்டி
0 out of 0 found this helpful