சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon EV Facelift: முன்பதிவை தொடங்கியது டாடா நிறுவனம்

டாடா நெக்ஸன் இவி க்காக செப் 09, 2023 10:22 am அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா நெக்ஸான் EV காரை (முன்பனம் ரூ. 21,000 செலுத்தி) ஆன்லைனில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள டாடாவின் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.

  • டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படவுள்ளது.

  • மூன்று வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படும்: கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு.

  • ஸ்டாண்டர்டு ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானுடன் இதுவும் வெளியிடப்படவுள்ளது.

  • மூடிய கிரில் மற்றும் கனெக்டட் LED DRL போன்ற புதிய வடிவமைப்பை இதில் பார்க்க முடிகிறது

  • காரின் உள்ளே 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.

  • இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது: 30kWh (325km) மற்றும் 40.5kWh (465km).

  • 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை தொடங்கும்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வெளியான சிறிது நேரத்திலேயே, டாடா டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் காரையும் அறிமுகப்படுத்திவிட்டது. இப்போது, ​​டாடா ஆன்லைனிலும் அதன் பான்-இந்திய டீலர் நெட்வொர்க்கிலும் புதிய நெக்ஸான் EV -க்கான புக்கிங்குகளை ரூ.21,000 க்கு தொடங்கியுள்ளது. இது இப்போது டியாகோ EV -யில் காணப்படுவது போல் “.ev” பெயரைக் கொண்டிருக்கும். புதுப்பிக்கப்பட்ட அனைத்து-எலக்ட்ரிக் நெக்ஸான் -ன் விரைவான பார்வை இங்கே:

புதிய தனித்துவமான வடிவமைப்பு

இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) அப்டேட் செய்யப்பட்ட பதிப்பின் அடிப்படையில் நெக்ஸான், SUV -யின் EV மாற்றானது, புதிய வடிவிலான LED லைட்டிங் மற்றும் அலாய் வீல்கள் உட்பட பல வடிவமைப்பு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. நெக்ஸான் EV -யில் உள்ள இரண்டு வித்தியாசம் என்னெவென்றால் நீளமான LED DRL ஸ்ட்ரிப் மற்றும் குளோஸ்டு-ஆஃப் கிரில் ஆகும். பழைய மாடலின் பின்புறத்தில் உள்ள மாற்றங்கள், இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள் மற்றும் ரீடோன் டெயில்கேட் உட்பட, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானை போலவே இருக்கும். இது வழக்கமான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மீது எம்பவர்டு ஆக்சைடு வடிவில் தனித்துவமான கலர் ஆப்ஷனையும் பெறுகிறது.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் வேரியன்ட் வாரியான வண்ண ஆப்ஷன்கள் விரிவாக இங்கே

பெரிய கேபின் மற்றும் கூடுதல் அப்டேட்கள்

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம், மேலும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டிலும் அதிகமாகவே இருக்கிறது. இது மையத்தில் டாடாவின் ஒளிரும் லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய கேபின் தீம்கள் ஆகியவற்றை பெறுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அதன் EV -க்கும் கொடுக்கப்பட்டுள்ளன, இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க சில EV-குறிப்பிட்ட டிஸைன் டச்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

வசதிகளை பொறுத்தவரையில் நெக்ஸான் EV -யானது பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 10.25 -இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, AC கன்ட்ரோல்களுக்கான டச்-பேஸ்டு பேனல், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான கோ-டிரைவர் சீட் மற்றும் 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெறுகிறது. ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை இந்த காரில் டாடா கொடுத்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பவர்டிரெயின்கள்

டாடா புதிய நெக்ஸான்.ev -யை மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது: கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு. அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி பிரைம் மற்றும் மேக்ஸுக்குப் பதிலாக மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு பதிப்புகளில் வழங்கப்படும். இது அதே அளவிலான பேட்டரியைப் பயன்படுத்துகிறது, ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் புதிய ஜென்-2 மின்சார மோட்டார்களுக்கு சக்தி அளிக்கிறது. அதன் ஒரு பார்வை இதோ

விவரம்

30kWh (மீடியம் ரேஞ்ச்)

40.5kWh (லாங் ரேஞ்ச்)

மின்சார மோட்டார்

சிங்கிள்

சிங்கிள்

பவர்

129PS

145PS

டார்க்

215Nm

215Nm

ARAI உரிமை கோரப்பட்ட ரேஞ்ச்

325 கி.மீ

465 கி.மீ

தொடர்புடையது: பாருங்கள்: டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் V2L அம்சம் செயல்பாட்டில் உள்ளது

விலை என்னவாக இருக்கும் ?

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் விலையை தற்போதுள்ள மாடல்களை விட கூடுதலான விலையில் 14.49 லட்சம் மற்றும் 19.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV400 EV MG ZS EV -க்கு போட்டியாளராக இருக்கும் மேலும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் புதிய நெக்ஸான் EV -க்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

Share via

Write your Comment on Tata நெக்ஸன் இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை