• English
  • Login / Register

செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Tata Nexon மற்றும் Nexon EV Facelift

டாடா நிக்சன் க்காக ஆகஸ்ட் 28, 2023 05:53 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 76 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய நெக்ஸான், வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் கூடுதல் பிரீமியமாக இருக்கும்.

Tata Nexon 2023

  • டாடாவின் புதிய வடிவமைப்பை வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்திலும், கர்வ்வ் மற்றும் ஹாரியர் EV -ன் இன்ஸ்பிரேஷன்களுடன் நெக்ஸான் மற்றும் அதன் EV பதிப்பு கொண்டிருக்கலாம்.

  • டச் பேஸ்டு AC பேனல், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

  • ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படலாம்.

  • புதிய நெக்ஸான் கூடுதல் ஆற்றல்மிக்க 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் எதிர்பார்க்கப்படுகிறது; டீசல் இன்ஜின் ஆப்ஷனும் கிடைக்கும்.

  • நெக்ஸான் EV -க்கான பவர்டிரெய்ன் அப்டேட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் இல்லை.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இறுதியாக செப்டம்பர் 14 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல ஆண்டுகளாக டாடா தனது எஸ்யூவி -க்கு லேசான அப்டேட்களை அடிக்கடி வழங்கி வருகிறது, இது 2020 -ம் ஆண்டுக்குப் பிறகு அதன் முதல் பெரிய அப்டேட்டாகும். நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு மற்றும் அம்ச மாற்றங்களோடு அதே நாளில் சந்தையில் நுழைய உள்ளது.

புதிய வடிவமைப்பு

Tata Nexon 2023 Front Profile

ஸ்பை புகைப்படங்கள் மூலம், ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. முழு நீள LED DRL, நேர்த்தியான கிரில், ஸ்பிலிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு மற்றும் கூர்மையான பம்பர்களுடன், டாடா கர்வ்வ் மற்றும் ஹாரியர் EV ஆகியவற்றிலிருந்து முன்புறத் தோற்றம் பெறப்பட்டிருக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட சப் காம்பாக்ட் எஸ்யூவி -க்காக அலாய் வீல்கள் ரீடிஸைன் செய்யப்படும். பின்புறத்தில், இணைக்கப்பட்ட LED  டெயில் லைட்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் பெரிய பூட் ஆகியவற்றைக் பார்க்க முடியும். நெக்ஸான் EV -யிலும் அதன் பிரத்யேக விஷுவல் எலமென்ட்களுடன் இதே போன்ற மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள்

நெக்ஸான் மற்றும் அதன் EV பதிப்பு இரண்டின் கேபினும் கிளீனான தோற்றத்திற்காக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிவைஸ்டு சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அப்கிரேட்கள் நெக்ஸான் EV க்கும் கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளது.

Tata Nexon 2023

கூடுதல் அம்சங்கள்

ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறக்கூடும். நெக்ஸான் EV மற்றும் அதன் ICE பதிப்பும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) பெறலாம், இது இந்த பாதுகாப்பு அம்சத்தைப் பெறும் முதல் சப்-4மீட்டர் எஸ்யூவி -யாக நெக்ஸானை மாற்றுகிறது..  

மேலும் படிக்க: இந்தியாவில் மின்சார கார்கள்

புதிய நெக்ஸான் பவர்டிரெயின்கள்

2023 Tata Nexon Rear Spied

நெக்ஸான் பெட்ரோல், டீசல் மற்றும் உறுதியாக மின்சார பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படும். இது 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை (6-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்) தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் டாடாவின் புதிய 1.2 TGDI டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் மாற்றப்படும். புதிய பெட்ரோல் இன்ஜினின் ஆற்றல் 125PS மற்றும் 225Nm என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மேனுவல் ஸ்டிக் தவிர 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நெக்ஸான்  EV பவர்டிரெயினில் ஏதேனும் அப்டேட்களை பெறுமா என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. இது தற்போது 30.2kWh (பிரைம்) மற்றும் 40.5kWh (மேக்ஸ்) பேட்டரி பேக்கை பெறுகிறது, இது 312 kms மற்றும் 453 kms ரேஞ்ச் வரை இருக்கும்.

மேலும் படிக்க: Tata Punch EV: சார்ஜ் செய்யும் போது முதன் முறையாக கேமராவில் சிக்கியுள்ளது

2023 நெக்ஸான் விலை

Tata Nexon EV Max

(தற்போதைய நெக்ஸான் EV மேக்ஸ் எடுத்துக்காட்டுக்காக)

குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காரணமாக நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்களின் விலைகள் உயர்த்தப்படும், ஆனால் முக்கியமாக அவற்றின் டாப் கார் வேரியன்ட்களில்  மட்டுமே உயர்த்தப்படும். ICE  பதிப்புகளின் விலை தற்போது ரூ.8 லட்சம் முதல் ரூ.14.60 லட்சம் வரையிலும், EV கவுண்டர்பார்ட்டின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.19.54 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.

படங்களின் ஆதாரம்
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience