ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை நாளை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்
இந்த இரண்டு மாடல்களிலும் இன்னும் அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு போலவே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
-
ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு கார்களும் முதல் முறையாக முழுமையான மிட்லைஃப் அப்டேட்டை பெற்றுள்ளன.
-
வெளிப்புற மாற்றங்கலில் புதிய LED லைட்டிங் செட்டப் மற்றும் அப்டேட்டட் பம்பர் வடிவமைப்புகள் அடங்கும்.
-
அவற்றின் கேபின்கள் புதிய வடிவிலான டாஷ்போர்டு மற்றும் புதிய டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலை பெறுகின்றன.
-
12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், டூயல் ஜோன் ஏசி மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகியவை இந்த காரில் உள்ளன.
-
இரண்டு எஸ்யூவி -களும் ஏற்கனவே இருக்கும் மாடல்களின் விலையை விட ஒரு லட்சம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸ் கார்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளன, மேலும் டாடா நிறுவனம் அனைத்து அம்சங்களையும் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. புதிய ஹாரியர் அல்லது சஃபாரியை ஆன்லைனில் அல்லது இந்தியா முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப்களில் ரூ.25,000 -க்கு முன்பதிவு செய்யலாம்.
இந்த எஸ்யூவி -களில் என்ன புதிதாகம்இருக்கிறது என்பதை விரைவாக இங்கே பார்ப்போம்:
புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறம்
இரண்டு எஸ்யூவி -களும் புதிய வடிவிலான கிரில், கூர்மையான இன்டிகேட்டர்கள் மற்றும் புதிய LED ஹெட்லைட்கள் போன்ற மாற்றங்களுடன் புதிய தோற்றத்தை கொண்டுள்ளன. அவை முன்புறத்தில் நீண்ட LED DRL ஸ்ட்ரிப் மற்றும் முன் கதவுகளில் புதிய எழுத்துக்களில் 'ஹாரியர்' மற்றும் 'சஃபாரி' பேட்ஜ்கள் இருக்கின்றன. டாடா 17 இன்ச் முதல் 19 இன்ச் யூனிட்கள் வரை அலாய் வீல்கள் கொண்ட இரண்டு எஸ்யூவி -களை வழங்குகிறது. இரண்டு எஸ்யூவி -களின் பின்புறம் இணைக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்பை கொண்டுள்ளது, மேலும் இரண்டும் சங்கியான ஸ்கிட் பிளேட்களுடன் வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர்
கேபினில் இப்போது லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் டச் அடிப்படையிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஒன்று உள்ளது. இரண்டு மாடல்களும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொண்ட 'டாடா' லோகோவை கொண்டுள்ளன, மேலும் வேரியன்ட்டின் அடிப்படையில் இன்செர்ட்களை எக்ஸ்டீரியரின் நிறத்துக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும்.
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்
இந்த எஸ்யூவி -கள் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் வருகின்றன. அவை எலக்ட்ரிக்கலி-அட்ஜஸ்டபிள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் (6 இருக்கைகள் கொண்ட சஃபாரியில் நடுத்தர வரிசை வென்டிலேட்டட் உடன் கிடைக்கும்), க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகிய வசதிகள் கிடைக்கும்.
பாதுகாப்புக்காக ஏழு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக ஆறு), 360-டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் மவுன்ட்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESP) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை இருக்கும். அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட்-கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் கண்காணிப்புடன் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க: புதிய டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டுடன் டாடா காரில் அறிமுகமாகும் 5 அம்சங்கள்
டீசல் இன்ஜின் மட்டுமே கிடைக்கும்
ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்கள் இரண்டும் 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170PS/350Nm), 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா எஸ்யூவி -கள், நான்கு முக்கிய டிரிம்களாகப் பிரிக்கப்பட்டு, அப்டேட் செய்யப்பட்ட் வேரியன்ட் -களாக விற்கப்படும். ஹாரியர் ஃபேஸ்லிஃப்டை பொறுத்தவரை, இவை ஸ்மார்ட், பியூர், அட்வென்ச்சர் மற்றும் ஃபியர்லெஸ்; மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டிற்கான டிரிம்கள் ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்பிளிஸ்டு. பழைய மாடல்களை விட புதிய கார்களின் விலை ஒரு லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புக்கு, தற்போதைய ஹாரியர் ரூ.15.20 லட்சத்தில் தொடங்கி ரூ.24.27 லட்சம் வரை செல்கிறது, அதே சமயம் தற்போதுள்ள சஃபாரி ரூ.15.85 லட்சம் முதல் ரூ.25.21 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.
புதிய டாடா ஹாரியர் MG ஹெக்டர் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுடனும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் ஹையர் வேரியன்ட்களுடனும் தொடர்ந்து போட்டியிடும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் போன்ற 3-வரிசை எஸ்யூவி -களான மஹிந்திரா XUV700, மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
இதையும் பார்க்கவும்: டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அட்வென்ச்சர் வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க: ஹாரியர் டீசல்