சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Curvv மற்றும் Hyundai Creta மற்றும் Maruti Grand Vitara : விவரங்கள் ஒப்பீடு

published on பிப்ரவரி 08, 2024 02:45 pm by rohit for டாடா curvv

ப்ரீ-புரடெக்ஷன் டாடா கர்வ்வ் காரை பற்றிய ஏராளமான விவரங்கள் எங்களிடம் உள்ளன. டாடா கர்வ்வ் காரால் அவற்றை வைத்து ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுடன் போட்டியிட முடியுமா ?. அதை ஒப்பீடு மூலமாக இங்கே பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் டாடா கர்வ்வ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் EV பதிப்புகள் இரண்டிலும் வழங்கப்பட உள்ளது. இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டாடாவின் என்ட்ரியாக இருக்கும். இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். எஸ்யூவி-கூபே ஸ்டைலிங் மூலம் உடனடியாக செக்மென்ட்டில் தனித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த காரை அறிமுகப்படுத்த டாடா முடிவு செய்துள்ளது. ஆனால் வடிவமைப்பை விட இன்னும் நிறைய விஷயங்கள் இந்த காரில் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில், கர்வ்வ் ICE -யின் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம், அதன் முக்கிய போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி போட்டியிடுகின்றது என்பதைப் பார்ப்போம்.

அளவீடுகள்

டாடா கர்வ்வ்

ஹூண்டாய் கிரெட்டா

மாருதி கிராண்ட் விட்டாரா

நீளம்

4308 மி.மீ

4330 மி.மீ

4345 மி.மீ

அகலம்

1810 மி.மீ

1790 மி.மீ

1795 மி.மீ

உயரம்

1630 மி.மீ

1635 மிமீ (ரூஃப் ரெயில்ஸ்)

1645 மி.மீ

வீல்பேஸ்

2560 மி.மீ

2610 மி.மீ

2600 மி.மீ

பூட் ஸ்பேஸ்

422 லிட்டர்

433 லிட்டர்

N.A.

*N.A. - கிடைக்கவில்லை

  • மேலே குறிப்பிட்டுள்ள மூன்று எஸ்யூவி -களின் ஒட்டுமொத்த நீளம் மற்றும் உயரம் என்று வரும்போது, ​மாருதி கிராண்ட் விட்டாரா முன்னணியில் இருக்கின்றது.

  • ஹூண்டாய் கிரெட்டா மிக நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது (கர்வ்வை விட +50 மிமீ நீளம்) டாடா கர்வ்வ் இந்த மூன்றில் மிகவும் அகலமானது.

  • பூட் ஸ்பேஸ் என்று வரும்போது, ​​கிரெட்டாவில் கர்வ்வை விட 11 லிட்டர் கூடுதல் ஸ்டோரேஜ் பகுதி உள்ளது. மறுபுறம், மாருதி அதன் காம்பாக்ட் எஸ்யூவி -யின் சரியான பூட் ஸ்பேஸ் அளவை வெளியிடவில்லை. ஆனால் கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்களின் பின்புறத்தில் உள்ள லக்கேஜ் பகுதியில் இடவசதி சற்று குறைவாக இருக்கும்.

பெட்ரோல் பவர்டிரெய்ன்

விவரங்கள்

டாடா கர்வ்வ்

ஹூண்டாய் கிரெட்டா

மாருதி கிராண்ட் விட்டாரா

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5-லிட்டர் N/A^ பெட்ரோல் இன்ஜின்/ 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5-லிட்டர் பெட்ரோல் (மைல்டு-ஹைப்ரிட்)/ 1.5-லிட்டர் பெட்ரோல் (ஸ்ட்ராங்-ஹைப்ரிட்)

பவர்

125 PS

115 PS/ 160 PS

103 PS/ 116 PS (சிஸ்டம்)

டார்க்

225 Nm

144 Nm/ 253 Nm

137 Nm/ 141 Nm (சிஸ்டம்)

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது)

6-ஸ்பீடு MT, CVT/ 7-ஸ்பீடு DCT

5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT/ e-CVT

^N/A - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

  • இங்குள்ள மூன்று எஸ்யூவி -களில், கர்வ்வ் -தான் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது. இது ஒரு டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட் ஆகும், மூன்றில் இரண்டாவது சிறந்த டார்க்கை கொடுக்கிறது.

  • கிரெட்டாவின் 1.5-லிட்டர் டர்போ பவர்டிரெய்ன் கார்யில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் டார்க் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இது விரைவில் டர்போ-எம்டி காம்போவுடன் கிடைக்கும் ஸ்போர்ட்டியர் கிரெட்டா என் லைன் அறிமுகம்.

  • இ-சிவிடி கியர்பாக்ஸுடன் கனெக்டட் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் அதன் காம்பாக்ட் எஸ்யூவி -யை இங்கு மாருதி மட்டுமே வழங்குகிறது. இதற்கிடையில், அதன் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் இங்கு மிகக் குறைந்த சக்திவாய்ந்த ஆப்ஷனாக உள்ளது. மாருதி மட்டுமே இங்கு தனது எஸ்யூவி -யை ஆப்ஷனல் ஆல்-வீல் டிரைவ் டிரெய்னுடன் (AWD) மட்டுமே கொடுக்கின்றது, ஆனால் மைல்ட்-ஹைப்ரிட் மேனுவல் பவர்டிரெய்னுடன் மட்டுமே கிடைக்கும். கிராண்ட் விட்டாரா -வில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது.

மேலும் படிக்க: ஃபாஸ்டேக் பேடிஎம் மற்றும் KYC காலக்கெடு பற்றிய முழுமையான விவரங்கள்… பிப்ரவரி 2024 -க்குப் பிறகும் ஃபாஸ்டேக் வேலை செய்யுமா ?

டீசல் பவர்டிரெய்ன்

விவரங்கள்

டாடா கர்வ்வ்

ஹூண்டாய் கிரெட்டா

இன்ஜின்

1.5 லிட்டர் டீசல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

116 பி.எஸ்

டார்க்

260 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

  • டாடா மற்றும் ஹூண்டாய் எஸ்யூவி -கள் மட்டுமே டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷனை பெறுகின்றன.

  • சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் காட்சிப்படுத்தப்பட்ட கர்வ்வ் ICE -யின் அடிப்படையில், நெக்ஸான் எஸ்யூவி -க்கு சக்தியளிக்கும் அதே 1.5-லிட்டர் டீசல் இன்ஜினைப் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், டாடா 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

  • ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் -க்கு பிறகு காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கர்வ்வ் மட்டுமே டீசல் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது. 260 Nm என்ற வகையில் இந்த பிரிவில் சிறந்த டார்க் அவுட்புட்டை கொண்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்

டாடா கர்வ்வ் (எதிர்பார்க்கப்படும்)

ஹூண்டாய் கிரெட்டா

மாருதி கிராண்ட் விட்டாரா

ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

LED DRL லைட் பார்

கனெக்டட் LED டெயில்லைட்கள்

18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன்

கனெக்டட் கார் டெக்னாலஜி

வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

பனோரமிக் சன்ரூஃப்

ஆட்டோ ஏசி

ஆம்பியன்ட் லைட்ஸ்

வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

பேடில் ஷிஃப்டர்கள் (ஆட்டோ மட்டும்)

பிரீமியம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்

க்ரூஸ் கன்ட்ரோல்

6 ஏர்பேக்ஸ்

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

360 டிகிரி கேமரா

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

ADAS

ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

LED DRL லைட் பார்

கனெக்டட் LED டெயில்லைட்கள் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

8-வே பவர்டு அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்

ஆம்பியன்ட் லைட்ஸ்

10.25 இன்ச் டச் ஸ்கிரீன்

10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே

பனோரமிக் சன்ரூஃப்

டூயல் ஜோன் ஏசி

வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

பேடில் ஷிஃப்டர்கள் (ஆட்டோ மட்டும்)

க்ரூஸ் கன்ட்ரோல்

8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம்

கனெக்டட் கார் டெக்னாலஜி

ADAS

6 ஏர்பேக்ஸ்

360 டிகிரி கேமரா

TPMS

முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

ESC

ஆட்டோ-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

LED DRLகள்

LED டெயில்லைட்கள்

17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

ஆம்பியன்ட் லைட்ஸ்

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 9-இன்ச் டச் ஸ்கிரீன்

7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் காட்சி*

ஹெட்அப் டிஸ்பிளே*

பனோரமிக் சன்ரூஃப்

ஆட்டோ ஏசி

வென்டிலேட்டட் முன் இருக்கைகள்*

வயர்லெஸ் போன் சார்ஜிங்*

க்ரூஸ் கன்ட்ரோல்

6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம்

6 ஏர்பேக்ஸ்

360 டிகிரி கேமரா

TPMS

ESC

பின்புற பார்க்கிங் சென்சார்கள்

* ஸ்ட்ராங்-ஹைபிரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே கிடைக்கும்

  • நீங்கள் மிகவும் வசதிகள் நிரம்பிய எஸ்யூவி -யை தேடுகிறீர்கள் என்றால், ஹூண்டாய் கிரெட்டா மற்றவற்றை விட சற்று முன்னால் உள்ளது. டூயல்-இன்டெகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 8-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் மற்றும் டூயல்-ஜோன் ஏசி போன்ற கூடுதல் வசதிகளை இது பெறுகிறது.

  • டாடா கர்வ்வ் -காரின் தயாரிப்புக்கு தயாராக உள்ள அம்சங்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு வசதிகள் நிறைந்த கார் ஆக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஹாரியர்-சஃபாரி கார்களில் இருந்து பனோரமிக் சன்ரூஃப், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பிரீமியம் வசதிகளைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

  • மாருதி கிராண்ட் விட்டாரா ஒரு சில பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது, மேலும் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: Tata Curvv மற்றும் Tata Nexon: இரண்டுக்கும் இடையே உள்ள 7 பெரிய வித்தியாசங்கள்

விலை

டாடா கர்வ்வ் (எதிர்பார்க்கப்படும்)

ஹூண்டாய் கிரெட்டா (அறிமுகம்)

மாருதி கிராண்ட் விட்டாரா

விலை வரம்பு

ரூ.10.50 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை

ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை

ரூ.10.70 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம்

டாடா கர்வ்வ் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இரண்டு கார்களுக்கும் கடுமையான போட்டியாக இருக்கும் வகையில் இதன் விலை இருக்கலாம். அதன் டீசல் வேரியன்ட்கள் கூட, இது கிரெட்டாவின் டாப்-ஸ்பெக் விலை -க்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக, இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா தான் இங்கு விலை உயர்ந்த கார் என்றாலும் கூட, மாருதி கிராண்ட் விட்டாரா -வின் விலையும் கிட்டத்தட்ட நெருக்கமாகவே உள்ளது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கான விலை ஆகும்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 28 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா curvv

Read Full News

explore similar கார்கள்

ஹூண்டாய் கிரெட்டா

Rs.11 - 20.15 லட்சம்* get சாலை விலை
டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

மாருதி கிராண்டு விட்டாரா

Rs.10.99 - 20.09 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.6 கிமீ / கிலோ
பெட்ரோல்21.11 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை