• English
  • Login / Register

வெளிப்புறம் மறைக்கப்படாத 2024 Hyundai Creta N Line காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

published on ஜனவரி 30, 2024 02:41 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 73 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஸ்பை படங்கள் இதன் முன்பக்கம் மாற்றியமைக்கப்ட்டிருப்பதை காட்டுகின்றன ஆகவே இது எஸ்யூவி -யின் ஸ்போர்டியர் மாடலாக இது இருக்கும். அதே நேரத்தில் காரின் உள்ளேயும் வெளியேயும் ரெட் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.

2024 Hyundai Creta N Line spied

  • கிரெட்டா N லைன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது.

  • வெளிப்புறத்தில் ரெட் நிற ஹைலைட்கள், N லைன் பேட்ஜ்கள் மற்றும் பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை வெளியில் உள்ள மாற்றங்களாக பார்க்க முடிகின்றது.

  • ரெட் கலர் இன்செர்ட்கள் மற்றும் மாறுபட்ட ரெட் ஸ்டிச் கொண்ட ஆல்-பிளாக்  அறையுடன் வருவதற்கு.

  • கிரெட்டாவின் அம்சங்கள் பட்டியலில் டூயல்10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆப்ஷன்களுடன் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெற வாய்ப்புள்ளது.

  • விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, விலை ரூ. 17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

ஹூண்டாய் எஸ்யூவி -யான ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா சமீபத்தில் வெளியானது, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இந்த காரின் N லைன் எடிஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதை உறுதிப்படுத்தும் வேரியன்ட்யில் காரின் ஸ்பை ஷாட்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா N லைன் மறைக்கப்படாமல் சாலையில் இருந்தது, அநேகமாக அதன் TVC (தொலைக்காட்சி விளம்பரம்) படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இது இருக்கலாம்.

படங்கள் எதை காட்டுகின்றன ?

2024 Hyundai Creta N Line spied

தற்போதுள்ள i20 மற்றும் வென்யூவின் N லைன் டெரிவேடிவ்கள் அவற்றின் ஸ்டாண்டர்டான கார்களை விட பெரிய வடிவமைப்பு அப்டேட்களை பெறவில்லை என்றாலும், ஹூண்டாய் அதன் மிகவும் பிரபலமான எஸ்யூவி -க்காக ஒரு படி மேலே சென்றுள்ளது. வழக்கமான கிரெட்டா மற்றும் கிரெட்டா N லைன் இரண்டையும் பார்க்கும் போது இது ஸ்பிளிட்-LED ஹெட்லைட் அமைப்புடன் (LED டிஆர்எல் ஸ்டிரிப் மேலே கொடுக்கப்பட்டுள்ளது), புதிய வடிவிலான சிறிய கிரில் மற்றும் ஒரு பெரிய பம்பர் ஆகியவற்றுடன் முற்றிலும் புதிய முன்பக்கத்தை கொண்டுள்ளது.

2024 Hyundai Creta N Line spied
2024 Hyundai Creta N Line spied

பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, ரெட் நிற ஹைலைட்கள் மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பெரிய 18-இன்ச் N லைன்-குறிப்பிட்ட அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். பின்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட பம்பர் மட்டுமே விதிவிலக்காக, விஷயங்கள் இன்னும் நன்கு தெரிந்தவை. மேலும், ஸ்போர்ட்டியர் எஸ்யூவியின் வெளிப்புறத்தில் ‘N லைன்’ பேட்ஜ்களையும் எதிர்பார்க்கலாம்.

உட்புற விவரங்கள்

2024 Hyundai Creta N Line cabin spied

ஸ்பை ஷாட்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்ட கேபின் தீம் ஆகும். மற்ற N லைன் மாடல்களுக்கு ஏற்ப ஹூண்டாய் அனைத்து பிளாக்  நிற தீமை உள்புறமாக தேர்வு செய்துள்ளது. இது டாஷ்போர்டில் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவை சுற்றி ரெட் ஹைலைட்ஸ் மற்றும் கியர் லீவர் மற்றும் அப்ஹோல்ஸ்டரியில் கான்ட்ராஸ்ட் ரெட் ஸ்டிச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூண்டாய் N லைன்-ஸ்பெசிஃபிக் ஸ்டீயரிங் பொருத்தப்படலாம்.

இதில் என்ன வசதிகள் இருக்கும்?

ஹூண்டாய் கிரெட்டா N லைன் வழக்கமான எஸ்யூவியின் வெல்-எக்யூப்டு ஹையர் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது அதே இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்), டூயல்-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஸ்டாண்டர்டான மாடலில் இருந்து வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைப் பெறும்.

பாதுகாப்பை பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

பவர்டிரெய்ன் விவரங்கள்

2024 Hyundai Creta 1.5-litre turbo-petrol engine

2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்டான மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (160 PS/ 253 Nm) பெறும். இருப்பினும், இது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். N லைன் பதிப்பில், இது சற்று வித்தியாசமான சஸ்பென்ஷன் அமைப்பையும், வழக்கமான கிரெட்டாவிலிருந்து மேலும் வேறுபடுத்துவதற்கு ஷார்ப்பான கையாளுதலுக்கான விரைவான ஸ்டீயரிங் ரேக்கையும் பெறலாம். இது ஒரு ஸ்போர்ட்டியர் எக்ஸாஸ்ட் நோட்டை வெளியிடக்கூடிய சற்றே வித்தியாசமான எக்ஸாஸ்ட் அமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 ஹூண்டாய் கிரெட்டா vs ஸ்கோடா குஷாக் vs ஃபோக்ஸ்வேகன் டைகுன் vs ஹோண்டா எலிவேட் vs எம்ஜி ஆஸ்டர் vs சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்: விவரக்குறிப்பு ஒப்பீடு

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

2024 Hyundai Creta N Line spied

ஹூண்டாய் கிரெட்டா N லைன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறோம், இதன் விலை ரூ.17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடியாக கியா செல்டோஸ் GTX+ மற்றும் X-Line ஆகிய கார்களுடன் போட்டியிடும். ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் GT லைன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுற்கு ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய மாற்றாகவும் இருக்கும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா என் லைன்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience