Harrier மற்றும் Safari கார்களில் இருந்து ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை பெறவுள்ள Tata Curvv
published on டிசம்பர் 04, 2023 07:28 pm by rohit for டாடா கர்வ்
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ் காம்பாக்ட் எஸ்யூவி -யானது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற சில ADAS அம்சங்களையும் பெறும்.
-
டாடா ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் கர்வ் ICE கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது.
-
இது 2024 -ம் ஆண்டில் மிகவும் போட்டி வாய்ந்த காம்பாக்ட் SUV பிரிவில் டாடாவின் என்ட்ரியாக இருக்கும்.
-
LED விளக்குகள், அலாய் வீல்கள் மற்றும் கூபே ரூஃப்லைன் ஆகியவை ஸ்பை புகைப்படங்கள் மூலமாக தெரிய வரும் வெளிப்புற விவரங்கள்.
-
2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் கிடைக்கும்.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 6 ஏர்பேக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை உள்ளடக்கிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்; EV பதிப்பு ICE மாடலுக்கு முன்னால் வருகிறது.
-
2024 -ம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது; 10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கலாம்.
வரவிருக்கும் டாடா கர்வ்வ் காரின் சோதனை கார்கள் இப்போது அடிக்கடி சாலையில் தென்படுகின்றன. சமீபத்தில், எஸ்யூவி-கூபேயின் முக்கிய அம்சத்தை வழங்கிய அதன் மற்றொரு மாடலை சோதனையின் போது பார்த்தோம்.
புதிதாக என்ன இருக்கிறது ?
சமீபத்திய ஸ்பை ஷாட்டில், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இருப்பதை குறிக்கும் வகையில் கர்வ்வின் சோதனைக் காரின் கண்ணாடியில் பொருத்தப்பட்ட கேமராவைக் கொண்டிருப்பதைக் காணலாம். LED விளக்குகள் (முன்புறத்தில் ஸ்பிளிட் ஹெட்லைட் அமைப்பு) மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கர்வ்வ் அதன் உற்பத்திக்கு-தயாராகவுள்ள வடிவத்திற்கு நெருக்கமாக இருப்பதை சோதனைக் கார் காட்டியது.
முந்தைய ஸ்பை ஷாட்கள் ஏற்கனவே புதிய டாடா காரின் கூபே ரூஃப்லைன் மற்றும் ஃப்ளஷ் டோர் கைப்பிடிகள் இருப்பதை காட்டியுள்ளன. காம்பாக்ட் எஸ்யூவி -யின் பிரிவில் டாடாவின் அறிமுகத்தை கர்வ்வ் மூலமாக தொடங்கும்.
எதிர்பார்க்கப்படும் கேபின் அப்டேட்கள்
தயாரிப்பு-ஸ்பெக் டாடா கர்வ்வ் காரின் உட்புறம் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை. என்றாலும் கூட சமீபத்தி; அப்டேட் செய்யப்பட்ட டாடா மாடல்களை போல, இது புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் ஒளிரும் டாடா லோகோ மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கர்வ்வ் -ல் உள்ள மற்ற அம்சங்களில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். ADAS தவிர, 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றையும் டாடா வழங்கலாம்.
இதையும் பாருங்கள்: 2023 -ல் நீங்கள் பார்க்கப்போகும் கடைசி 3 புதிய கார்கள் இவைதான்: ஒரு எலக்ட்ரிக் லம்போர்கினி மற்றும் இரண்டு சிறிய எஸ்யூவிகள்
இன்ஜின்/பேட்டரி ஆப்ஷன்கள்
புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (125 PS/225 Nm) கர்வ்வை டாடா வழங்கும். அதன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. என்றாலும் கூட புதிய டாடா நெக்ஸான் போன்ற அதே 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) வழங்கப்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். கர்வ்வ் கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களையும் பெறலாம், அவற்றின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
முதலில், டாடா கர்வ்வ் EV அறிமுகத்தை பார்ப்போம், மின்சார சலுகைகளுக்காக டாடா ஜென் 2 கட்டமைப்பு தளத்தில் கட்டப்பட்டது. இந்த புதிய வகை டாடா EV -கள் 500 கிமீ தூரம் வரை செல்லும். இருப்பினும், மின்சார பவர்டிரெய்ன் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
விலை மற்றும் வெளியீடு
டாடா கர்வ்வ் EV 2024 -ம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும், இதன் விலை ரூ. 20 லட்சத்திலும், ICE மாடலின் விலை சுமார் ரூ. 10.5 லட்சத்திலும் (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை) இருக்கலாம். ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், சிட்ரோன் C3 ஏர்கிராஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற வழக்கமான காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு இது ஒரு எஸ்யூவி-கூபே ஆப்ஷனாக இருக்கும்.மேலும், எம்ஜி ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் போன்றவற்றுக்கு கர்வ்வ் EV ஒரு மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: டாடா சஃபாரி டீசல்
0 out of 0 found this helpful