Tata Curvv மற்றும் Tata Curvv EV கார்களின் எக்ஸ்ட்டீரியர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன, EV எடிஷன் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது
published on ஜூலை 19, 2024 06:05 pm by shreyash for டாடா கர்வ் இவி
- 92 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ்வ் கர்வ்வ் மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகிய இரண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள விலை குறைவான எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார்கள் ஆகும். முதல் முறையாக டாடா காரில் கிடைக்கும் சில வசதிகளுடன் இது வருகிறது.
-
கூபே பாணியிலான ரூஃப், கனெக்டட் LED லைட்ஸ் செட்டப் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவை காரின் வெளியில் உள்ள ஹைலைட்டான விஷயங்கள் ஆகும்.
-
உள்ளே இரண்டு கார்களுமே நெக்ஸான் காரில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு செட்டப் மற்றும் ஒளிரும் டாடா லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்வ்வ் காரில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகிய வசதிகளும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்வ்வ் ICE 1.2 லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களளுடன் வரக்கூடும்.
-
கர்வ்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 500 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.
-
கர்வ்வ் EV -க்கான விலை முதலில் அறிவிக்கப்படும். மேலும் இதன் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
-
கர்வ்வ் ICE பதிப்பின் விலை ரூ. 10.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஸ்பை ஷாட்கள் மற்றும் பல டீஸர்களுக்கு பின்னர் டாடா கர்வ்வ் மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகிய இரண்டு கார்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டது. இருப்பினும் கார் தயாரிப்பாளர் இரண்டு எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார்களின் வெளிப்புறங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. முதலில் டாடா கர்வ்வ் காரின் எலக்ட்ரிக் பதிப்பிற்கான விலை விவரங்களை அறிவிக்கும். அதன்பின்னர் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வேரியன்ட்டுக்கான விலை விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். கர்வ்வ் -க்க்கான ஆர்டர் புத்தகங்களை டாடா இன்னும் திறக்கவில்லை என்றாலும். சில டாடா டீலர்ஷிப்கள் அதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கின்றன.
வடிவமைப்பு
கர்வ்வ் என்பது இந்திய கார் சந்தையில் கிடைக்கும் முதல் விலை குறைவான எஸ்யூவி-கூபே ஆகும். இருப்பினும் அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு தற்போதுள்ள பிற டாடா கார்களில் இருந்து உத்வேகத்தையும் பெறுகிறது. ICE மற்றும் EV எடிஷன்கள் இரண்டும் கனெக்டட் LED DRLகள் மற்றும் பம்பரில் அனைத்து LED ஹெட்லைட் செட்டப்பையும் கொண்டுள்ளன. கர்வ்வ் ICE ஆனது பிளாக்-அவுட் கிரில்லை கொண்டுள்ளது. அதே நேரத்தில் EV பதிப்பு கிரில்லுக்கான பாடி கலர்டு குளோஸ்டு பேனல் கொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.
பக்கத்தில் கர்வ்வ் காரின் ICE எடிஷன் பெட்டல்-ஷேப்டு டூயல்-டோன் அலாய் வீல்களை பெறுகிறது. அதே நேரத்தில் கர்வ்வ் EV ஏரோடைனமிக் பாணியிலான அலாய்ஸ் வீல்களுடன் வருகிறது. இரண்டு கார்களுமே ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளன. இந்த விஷயமானது முதல் முறையாக டாடா காரில் கொடுக்கப்படுகிறது. பின்புறத்தில் கர்வ்வ் -ன் இரண்டு எடிஷன்களுமே கனெக்டட் LED டெயில் லைட் செட்டப்பை கொண்டுள்ளன.
உட்புறம்
டாடா கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV -ன் இன்ட்டீரியர் காட்சிப்படுத்தவில்லை என்றாலும் இது டாடா நெக்ஸானை போலவே இருக்கும். ஸ்டீயரிங் வீல் ஹாரியர்-சஃபாரி டியோவில் இருந்து வரும் டாடா லோகோவுடன் ஒளிரும் 4-ஸ்போக் யூனிட் ஆகும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
EV மற்றும் ICE எடிஷன்கள் இரண்டும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் , 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது. 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கர்வ்வ் ICE ஆனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினை அறிமுகம் செய்யும். அதே சமயம் இது நெக்ஸானிலிருந்து கடன் வாங்கப்பட்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் பெறுகிறது. விவரக்குறிப்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.2-லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
மறுபுறம் கர்வ்வ் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரலாம். மேலும் இது சுமார் 500 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும். கர்வ்வ் EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை.
வெளியீடு, எதிர்பார்க்கப்படும் விலை & போட்டியாளர்கள்
டாடா முதலில் கர்வ்வ் EV -யின் விலையை அறிவிக்கும். மேலும் இது ரூ.20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். கர்வ்வ் காரின் ICE எடிஷனின் விலை ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். கர்வ்வ் EV ஆனது MG ZS EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV உடன் போட்டியிடும். கர்வ்வ் ஆனது சிட்ரோன் பசால்ட் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்க்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இது இருக்கும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
0 out of 0 found this helpful