புதிதாக 2024 Kia Carnival காரை வாங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
published on அக்டோபர் 24, 2024 07:33 pm by shreyash for க்யா கார்னிவல்
- 95 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபலம் சுரேஷ் ரெய்னா 2024 கியா கார்னிவலின் முதல் வாடிக்கையாளராக மாறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் அறிமுகமான 2024 கியா கார்னிவல் காரை வாங்கியுள்ளார். இதன் ரூ. 63.90 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆகும். கார்னிவல் எம்பிவியின் முதல் வாடிக்கையாளராக சுரேஷ் ரெய்னா மாறியுள்ளார், மேலும் இது கிளேஸியர் வொயிட் பேர்ல் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஃபியூஷன் பிளாக் மற்றும் க்லேசியர் ஒயிட் பேர்ல் ஆகிய 2 கலர் ஆப்ஷன் மட்டுமே கியா கார்னிவலை வழங்குகிறது.
சுரேஷ் ரெய்னா வைத்திருக்கும் மற்ற கார்கள்
புதிய கியா கார்னிவல் தவிர சுரேஷ் ரெய்னாவின் கேரேஜில் மினி கூப்பர், ஃபோர்டு மஸ்டாங் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி உள்ளிட்ட சில ஆடம்பர கார்கள் மட்டுமில்லாமல் ஆடி Q7 மற்றும் போர்ஸ் பாக்ஸ்ஸ்டர் ஆகியவையும் உள்ளன.
2024 கார்னிவல் காரிலுள்ள வசதிகள்
உள்ளே கார்னிவல் பிளாக் கலரில் ஃப்னிஷ் செய்யப்பட்ட ஃபுளோட்டிங் டாஷ்போர்டு வடிவமைப்பைப் பெறுகிறது. கியா MPV -ன் வசதிகளின் பட்டியலில் டூயல் 12.3-இன்ச் கர்வ்டு டிஸ்பிளே செட்டப் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேக்கு ஒவ்வொன்றும்), 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), லும்பார் சப்போர்ட் உடன் கூடிய 12-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை மற்றும் ஒரு 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் பயணிகள் இருக்கை ஆகியவற்றை கொண்டுள்ளது. இது இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், 3-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டிபிஎம்எஸ் (டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இது ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகியவற்றுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: 2024 தீபாவளி -க்குள் இந்த 9 எஸ்யூவிகளை உடனடியாக டெலிவரி எடுக்கலாம்
டீசல் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்
2024 கியா கார்னிவல் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
193 பி.எஸ் |
டார்க் |
441 என்எம் |
டிரான்ஸ்மிஷன் |
8-வேக ஏடி |
AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
போட்டியாளர்கள்
2024 கியா கார்னிவல் ஆனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மாருதி இன்விக்டோ, மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் இது லெக்ஸஸ் எல்எம் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றுக்கு ஒரு விலை குறைவான ஆப்ஷனாகவும் இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கியா கார்னிவல் டீசல்