நடிகர் சுனில் ஷெட்டி அவரது முதல் மின்சார வாகனமாக MG Comet EV -யை தேர்ந்தெடுத்துள்ளார்
ஹம்மர் H2 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 போன்றவை நடிகர் சுனில் ஷெட்டி -யிடம் உள்ளன. MG EV இப்போது நடிகரின் அசத்தலான சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
இந்த பண்டிகை காலத்தில் ,பாலிவுட் பிரபங்களின் பட்டியலில் இவி கார்கள் இடம்பெற்றன. அவர்களில் ஒருவர் சுனில் ஷெட்டி, 'ஹேரா ஃபெரி' படங்களில் மூலமாக நன்கு அறியப்பட்டவர், அவர் இப்போது எம்ஜி காமெட் இவி காரை வாங்கும் முதல் பாலிவுட்-நகரத்தின் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார், மேலும் இது அவரது முதல் மின்சார கார் ஆகும்.
Comet EV பற்றிய கூடுதல் விவரங்கள்
9.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையுள்ள MG EV-யின் ஃபுல்லி லோடட் ப்ளஷ் வேரியன்ட்டை பாலிவுட் நட்சத்திரம் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. காமெட் EV உடன் கிடைக்கும் தனிப்பயனாக்க டீகால் (ஸ்டிக்கர்கள்) பேக்குகள் இல்லாமல் எளிமையான மோனோடோன் ஸ்டார்ரி பிளாக் ஷேடை அவர் தேர்வு செய்துள்ளார்.
அவரது கேரேஜில் உள்ள மற்ற கார்கள்
அதிக மாஸ்-மார்க்கெட் காமெட் EV தவிர, சுனில் ஷெட்டி தனது சேகரிப்பில் பலவிதமான கார்களை வைத்திருக்கிறார். இதில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110, Mercedes-Benz GLS 350, BMW X5, மற்றும் ஹம்மர் H2 ஆகியவை அடங்கும் .
காமெட் EV -க்கு ஆற்றல் அளிப்பது எது ?
MG நிறுவனம் 17.3 kWh பேட்டரி பேக் உடன் 230 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்ட காமெட் EV -க்கு வழங்கியுள்ளது. ரியர் வீல் டிரைவ் மின்சார மோட்டார் 42 PS மற்றும் 110 Nm அவுட்புட்டை கொடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 3.3 kW சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய ஏழு மணிநேரம் ஆகும்.
மேலும் படிக்க: 2023 ஆண்டோடு இந்திய சந்தையில் இருந்து விடைபெறப் போகும் 8 கார்கள்
காரில் உள்ள அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
MG EV ஆனது இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒவ்வொரு இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்), கீலெஸ் என்ட்ரி, கனெக்டட் கார் டெக்னாலஜி, முன் பவர் ஜன்னல்கள் மற்றும் 2-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.
இதில் பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.
சுனில் ஷெட்டியின் புதிய EV காரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: காமெட் EV ஆட்டோமெட்டிக்