Kia Sonet ஃபேஸ்லிப்ட் காருக்கான முன்பதிவு சில டீலர்ஷிப்களில் தற்போது தொடங்கியுள்ளது
published on டிசம்பர் 05, 2023 04:32 pm by rohit for க்யா சோனெட்
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்டட் கியா சோனெட் டிசம்பர் 14 அன்று வெளியிடப்படும் மற்றும் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்
-
கியா இந்தியாவில் 2020 -ல் சோனெட் காரை அறிமுகப்படுத்தியது, இப்போது எஸ்யூவி -க்கு அதன் முதல் சரியான அப்டேட்டை வழங்குகிறது.
-
புதிய வடிவிலான கிரில், கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் புதிய வடிவிலான அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்படும்
-
கேபின் அப்டேட்களில் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும்.
-
10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஸ்டாண்டர்டு ஏர்பேக்குகள் மற்றும் ADAS உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இப்போதுள்ள மாடலின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களால் இயக்கப்படும்.
-
விலை ரூ 8 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
ஃபேஸ்லிஃப்ட் இந்தியா-ஸ்பெக் கியா சோனெட் டிசம்பர் 14 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. கியா சமீபத்தில் அதை உறுதிப்படுத்தியதோடு புதுப்பிக்கப்பட்ட SUV பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் வெளியிட்டது. இப்போது, ஒரு சில டீலர்ஷிப்கள் புதிய சோனெட் -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. இதுவரை தெரிய வரும் விஷயங்கள் இங்கே:
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்கள்
கியாவின் சப்-4எம் எஸ்யூவியின் பவர்டிரெய்ன்களில் பெரிய மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்டேட் செய்யப்பட்டாலும் கூட, கீழே உள்ள அதே ஆப்ஷன்களுடன் இது தொடரவே வாய்ப்புள்ளது:
விவரம் |
1.2-லிட்டர் N.A. பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 NM |
172 NM |
250 NM |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT/ 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு iMT/ 6-ஸ்பீடு AT |
ஆன்லைனில் வெளியான தகவல்களின்படி கியா நிறுவனம் iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) -க்கு பதிலாக டீசல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிய வருகிறது. இருப்பினும், ஃபேஸ்லிஃப்டட் எஸ்யூவி -யில் அது பலனளிக்குமா என்பதைப் பார்க்க, சிறிது நேரம் காத்திருக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
ஒரு புதிய தோற்றம்
நீண்ட ஃபாங் வடிவ LED DRL -கள், புதிய வடிவிலான கிரில் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட LED ஃபாக் லேம்ப்கள் ஆகியவற்றைக் கொடுத்து மிட்லைஃப் அப்டேட் மூலம் சோனெட்டின் வெளிப்புற வடிவமைப்பை கியா கூர்மைப்படுத்தியுள்ளது. மற்ற வெளிப்புற மாற்றங்களில் வேறுபட்ட அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில் விளக்குகள் ஆகியவை இருக்கின்றன.
உள்ளே எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?
கார் தயாரிப்பாளர் 2024 சோனெட்டுக்கு புதிய இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் கிளமேட் கன்ட்ரோல் பேனலை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவியின் டீஸர், இப்போதுள்ள மாடலின் அதே 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இதில் இருக்கும் என்பதை காட்டியது.
வேறு என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டில் உள்ள புதிய அம்சங்களில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே (புதிய செல்டோஸிலிருந்து) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம். வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்ட எஸ்யூவி -யை கியா தொடர்ந்து வழங்கும்.
இதன் பாதுகாப்பு அம்சங்களில், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ,ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்போது அதன் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும்.
மேலும் படிக்க: சோனெட் ஆட்டோமெட்டிக்