சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon, Kia Sonet மற்றும்Hyundai Venue கார்களின் போட்டியை சமாளிக்க புதிதாக சப்-4மீ எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்கோடா நிறுவனம்

ஸ்கோடா kylaq க்காக பிப்ரவரி 20, 2024 05:12 pm அன்று sonny ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்த கார் 2025 ஆண்டில் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஸ்கோடா தனது சப்-4m எஸ்யூவி -க்கான திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை பிப்ரவரி 27 அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • இது குஷாக் மற்றும் ஸ்லாவியாவை சப்போர்ட் செய்யும் MQB-A0 IN தளத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

  • குஷாக் எஸ்யூவி -யில் இருந்து பெறப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கிடைக்கும்.

இந்திய கார் துறையில் சப்-4m எஸ்யூவி -க்கான பிரிவு என்பது கடும் போட்டி வாய்ந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இது தற்போது 7 பிராண்டுகள் இதில் போட்டியிடுகின்றன. விரைவில் ஸ்கோடா நிறுவனமும் அந்த பட்டியலில் சேர உள்ளது. இது ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுடன் போட்டியிடக்கூடும். இந்த புதிய காரை பற்றிய கூடுதல் விவரங்கள் பிப்ரவரி 27 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு மினி குஷாக் ஆக இருக்குமா ?

ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யானது குஷாக் காம்பாக்ட் எஸ்யூவி -யில் இருக்கும் MQB-A0 IN பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.ஆனால் இறுதி தயாரிப்பை 4-மீட்டர் நீள வரம்பிற்குள் வைத்திருக்கும் வகையில் அளவு மாற்றப்படும். ஸ்டைலிங் விஷயத்திலும், குஷாக்குடன் சில முக்கியமான ஒற்றுமைகளை எதிர்பார்க்கலாம், குறிப்பாக முன் பக்கத்தில்.

வென்யூ, நெக்ஸான் ஆகிய கார்களுடன் போட்டியிடும் வகையில் வசதிகள் நிறைந்ததாக இருக்கும்

புதிதாக கார் வாங்குபவர்களுக்கு வசதிகள் என்பது ஒரு காரை தேர்ந்தெடுக்க உதவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது, ஆகவே ஸ்கோடா இந்த காரை பிரிவில் முதலிடம் பெறும் வகையில் வடிவமைக்கும். 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல், வென்டிலேட்டட் முன் சீட்கள், சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற பல வசதிகள் புதிய சப்காம்பாக்ட் எஸ்யூ -வியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறந்த முறையில், இது 10-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டாப்-ஸ்பெக் குஷாக் வேரியன்ட்களில் இருந்து பவர்-அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் சீட் ஆகியவற்றையும் இந்த காருக்கு எடுத்து வரக்கூடும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, குஷாக் ஏற்கனவே 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் சப்-4m எஸ்யூவியும் அதே தளத்தை பெறக்கூடும் என்பதால், இது அதே அளவிலான பாதுகாப்பை வழங்க வாய்ப்புள்ளது. 6 ஏர்பேக்குகள், ESC, டயர் பிரஷர் ​​மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்

ஸ்கோடா ஏற்கனவே சப்-4m -க்கு ஏற்ற இன்ஜினை கொண்டுள்ளது - 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட். 115 PS மற்றும் 178 Nm அவுட்புட் மூலம், இது ஸ்கோடா எஸ்யூவி -க்கு பலனை கொடுக்கும், ஏனெனில் மற்ற அனைத்து போட்டியாளர்களும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குகிறார்கள். இந்த ஸ்கோடா காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம்.

ஃபோக்ஸ்வேகன் ட்வின் கிடையாது

தற்போது, ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் MQB-A0 IN தளத்தின் அடிப்படையில் எஸ்யூவி மற்றும் செடானின் சொந்த பதிப்புகளைக் விற்பனை செய்கின்றன: குஷாக் மற்றும் டைகன், மற்றும் ஸ்லாவியா மற்றும் விர்ட்டஸ். இருப்பினும், புதிய ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவிக்கு ஃபோக்ஸ்வேகன்-பிராண்டட் ட்வின் கிடைப்பது சாத்தியமில்லை. அதற்கு பதிலாக, ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கான வெகுஜன சந்தை -க்கான EV கார்கள் மீது அதன் கவனத்தை செலுத்தும்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுக்கு ஸ்கோடா தரப்பு போட்டியாளராக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா மிகவும் போட்டி நிறைந்த பிரிவில் நுழையும் போது, ​​அது என்ட்ரி லெவல் விலையில் கவனம் செலுத்துவது சாத்தியமில்லை. மாறாக, இது ஒரு பிரீமியம் காராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

மேலும் படிக்க: சொனெட் ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Skoda kylaq

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை