ரெனால்ட் கிவிட் 25 Kmpl மைலேஜ் தருமா?
published on செப் 05, 2015 04:15 pm by அபிஜித் for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- 18 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் கிவிட்டின் முன்பதிவு நாடெங்கிலும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது. இதன் அறிமுகம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏற்கனவே அறிமுகப் படலம் முடிந்துவிட்டது. எனவே, இந்த சிறிய ரக க்ராஸ் ஓவர் காரின் சிறப்பம்ஸங்கள் வெளியாகி உள்ளன. இந்த விவரக் குறிப்பில், மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், கிவிட் 25 kmpl மைலேஜ் கொடுக்கிறது. இந்த அளவு, மாருதி ஆல்டோவின் 21.38 kmpl மற்றும் ஹுண்டாய் இயானின் 21.1 kmpl மைலேஜை விட மிகவும் உயர்வாக இருக்கிறது.
இது தவிர, இதன் குதிரைத் திறன் மற்றும் முடுக்கு திறன், முறையே 57 bhp மற்றும் 74 Nm கொடுத்து, இந்த காரை இதன் வர்க்கத்திலேயே மிகவும் சிறந்ததாக உயர்த்துகிறது, என்று இந்த விவரக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும், இத்தகைய அருமையான செயல்திறனை கொடுப்பது இதன் 3 பாட் 800 cc மோட்டாராகும். இந்த மோட்டாரை ரெனால்ட் நிறுவனம் தமிழ் நாட்டில் நுள்ள ஓரகடத்தில் உள்ள ரெனால்டின் தொழிற்சாலையில் தயாரிக்கிறது.
வெளிப்புற பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், கிவிட் 3.68 மீட்டர் நீளத்திலும், 1.58 மீட்டர் அகலத்திலும் வருகிறது. தரையிலிருந்து 180 mm (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) மேலெழும்பி கம்பீரமாக நிற்கும் இதன் SUV போன்ற வடிவத்தை மேலும் பிரம்மாண்டமாக்க, உப்பிய சக்கர வட்டுகள், (வீல் ஹௌஞ்ச்) தட்டையான முன்புற வடிவம் மற்றும் பல இடங்களில் வளைவுகள் (பாடி கிளாடிங்க்) ஏற்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தை பார்க்கும் பொது, கிவிட் கார் தனது 7 அங்குல தொடு திரையில் பயண வழிமுறை அமைப்பை ( டச் ஸ்கிரீன் மீடியா நேவிகேஷன்), டஸ்டரில் இருந்து பெற்று, ரெனால்டின் பெருமையை பறைசாற்றுகிறது. இதன் உயரமான வடிவமைப்பு, உட்புறத்தில் நல்ல காற்றோட்ட வசதியை தாராளமாக தருகிறது. மேலும், இதன் பூட் பகுதியின் கொள்ளளவு சுமார் 300 லிட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி உண்மையானால், நிச்சயமாக கிவிட்டுடன் போட்டி போடும் அனைத்து போட்டி கார்களின் பூட் பகுதியின் இடத்தை விட கணிசமான அளவு பெரிதாக இருக்கும்.
இந்தியர்களின் தேவைக்கேற்ப 98 சதவிகிதம் மற்றும் ரெனால்ட்டின் CMF – A தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ரெனால்ட் கிவிட்டின் விலை ரூபாய் 3.5 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அனைத்து சலுகைகளும் சேர்ந்து வரும்போது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பண்டிகை கால வாய்ப்பாக கருதப்படுகிறது.
0 out of 0 found this helpful