• English
  • Login / Register

ரெனால்ட் க்விட் காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியது

published on அக்டோபர் 07, 2015 04:55 pm by அபிஜித் for ரெனால்ட் க்விட் 2015-2019

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

சிறிய அளவிலான ஹேட்ச்பேக் காரான க்விட், அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு வாரத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25,000 யூனிட்களுக்கான முன்பதிவை பெற்றுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் முன்பதிவு எண்ணிக்கை, பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பாளரின் புதிய சாதனை ஆகும். அதே நேரத்தில் மாருதி போன்ற மற்ற நிறுவனங்களுக்கு இது ஒரு இலக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: Renault Lists Kwid Accessories, Launches KrazyForKwid Contest: Gallery Inside

நாடெங்கிலும் உள்ள இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்களை, தனிப்பட்ட முறையில் சென்று விசாரிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதை காண முடிகிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம் நாட்டில் க்விட் ஆப்-பை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கையும் குவிந்து வருகிறது.

நாம் ஏற்கனவே அறிந்தது போல, க்விட் காரின் துவக்க விலையாக ரூ.2.57 லட்சம் எனவும், அதிகபட்சமாக ரூ.3.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) எனவும் நிர்ணயித்த ரெனால்ட் நிறுவனம், அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தது. இதன்மூலம் இந்தியாவின் 98% உள்ளூரை எட்டி சேர்ந்து, மேற்கூறிய குறைந்த விலை நிர்ணயத்தின் மூலம் உயர்தரத்தை சேர்ந்த பிரிவு மற்றும் அடிப்படை தரத்தை சேர்ந்த பிரிவின் முன்னணி போட்டியாளர்களை, இது பின்னுக்கு தள்ளி உள்ளது.

அதன் பிரிவில் எல்லா வகையிலும் பெரிய அளவிலான காராக உள்ள க்விட், அதன் வெளிப்புற பரிணாமங்கள், உள்புற இடவசதி அல்லது பூட் ஸ்பேஸ் ஆகிய அம்சங்களை கொண்டு, அதன் போட்டியாளர்களையும், இதை விட உயர்ந்த பிரிவை சேர்ந்த ஆல்டோ K10 போன்ற சில கார்களையும் எளிதில் வெற்றி பெறுகிறது.

இயந்திரவியலை பொறுத்த வரை, இன்லைன் 3-சிலிண்டர் 800cc என்ஜினை கொண்டு இயங்கும் இந்த கார், ஏறக்குறைய 54 PS ஆற்றலையும், 72 Nm முடுக்குவிசையையும் அளித்தாலும், லிட்டருக்கு 25.17 கி.மீ. மைலேஜை கொடுக்கிறது. இந்த ஆற்றலை 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் முன்புற வீல்களுக்கு அளிக்கப்படுகிறது.

இவற்றை தவிர, க்விட் காரில் ஏராளமான தனிப்பட்ட தேர்வுகள் காணப்படுவதால், அது மற்ற கார்களில் இருந்து வேறுபடுகிறது. இந்த குறைந்த விலை நிர்ணயத்திற்குள் இருக்கும் போது, இந்த தனிப்பட்ட தேர்வுகளை கொண்ட பேக்கையும் சேர்த்து வாங்கினால் கூட, அது ஒரு பெரும் தொகையாக தெரியாது.

was this article helpful ?

Write your Comment on Renault க்விட் 2015-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience