மைக்ரோ ஹாட்ச் பிரிவில் புயல் போல நுழையும் ரெனால்ட் கிவிட் 1.0 லிட்டர் வேரியண்ட்
published on பிப்ரவரி 18, 2016 01:57 pm by அபிஜித் for ரெனால்ட் க்விட் 2015-2019
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த புதிய கிவிட் 1.0 லிட்டர் வெர்ஷன், பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்தது. தற்போது இந்திய சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கும் 800 cc வெர்ஷன் போலவே அது தோற்றமளித்தது. அது மட்டுமல்ல, ரெனால்ட்டின் அரங்கத்தில், கிளைம்பர் கான்செப்ட் மற்றும் ரேஸ் R கான்செப்ட் என்ற மேலும் இரண்டு கவர்ச்சிகரமான கிவிட் மாடல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவை, எப்போது உற்பத்திக்குத் தயாராகும் என்பது தெரியவில்லை. எனினும், தற்போது உற்பத்திக்குத் தயாராக இருக்கும் கிவிட் 1.0 லிட்டர், கிவிட் வரிசையில் மற்றுமொரு கூடுதல் வேரியண்ட் என்ற பெயரோடு சாதாரணமாக இருக்காது, ஏனெனில், இது சக்திவாய்ந்த மைக்ரோ ஹாட்ச் கார் வேண்டும் என்ற மக்களை மட்டும் திருப்திப்படுத்தப் போவதில்லை, மாறாக, மக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் சாதாரண காரைப் போல இல்லாமல், இது ஒரு டிரைல்பிளேசரைப் போல பயணங்களில் வழிகாட்டியாகச் செயல்படும். எப்படி என்ற விவரத்தை அறிய, மேலும் வாசியுங்கள்.
புதிய கிவிட் 1.0 லிட்டர் வேரியண்ட்டின் செயல்திறன்
கிவிட் 1.0 லிட்டர் காரின் திறனைப் பற்றி முழுமையாகத் தெரிய வேண்டும் என்றால், ஹாட்ச்பேக் பிரிவில் சமீபத்தில் பிரபலமாக உள்ள VW போலோ GT TSI காருடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். போலோவின் எடை சுமார் 1100 கிலோக்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் இஞ்ஜின் 103 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. இதன் சக்தி மற்றும் எடைக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், போலோவின் ஒவ்வொரு 10 கிலோவும் ஒரு bhp சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், தற்போது சந்தையில் உள்ள கிவிட்டின் எடை 660 கிலோக்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் இஞ்ஜின் 53 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. இதன் சக்தி-எடை விகிதத்தை கணக்கிட்டால் 12 கிலோக்களுக்கு ஒரு bhp என்ற அளவில் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள வதந்திகள் மட்டும் உண்மையானால், 1.0 லிட்டர் கிவிட் வேரியண்ட் 70 bhp என்ற அளவிற்கும் அதிகமான சக்தியை உற்பத்தி செய்யும். சற்றே பெரிய இஞ்ஜின் பொருத்தப்படவிருப்பதால், இதன் எடை கிட்டத்தட்ட 700 கிலோக்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. எனவே, இது தோராயமாக 10 கிலோக்களுக்கு ஒரு bhp விகிதம் உற்பத்தி செய்யவல்லதாக இருக்கும். அதே சமயம், புதிய கிவிட், நிச்சயமாக போலோ GT TSI போல விலை உயர்ந்ததாக இருக்காது. எனவே, அனைவரும் இந்த காரை வாங்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். அது மட்டுமல்ல, கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 1.0 லிட்டர் வெர்ஷனில் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. எனவே, மேனுவல் கியர்பாக்ஸ் பிரியர்களையும் புதிய கிவிட் மாடல் கவர்ந்திழுக்கும்.
சந்தையில் உள்ள கிவிட் மாடலின் சிறப்பம்சங்கள்
நாம் இப்போது மேற்சொன்ன மேம்பாடுத்தப்பட்ட காரில் இருந்து இடம்பெயர்ந்து, சமீபத்தில் நம் அனைவரின் மனதையும் கவர்ந்த 800 cc இஞ்ஜின் பொருத்தப்பட்ட கிவிட்டில் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இதன் 800 cc இஞ்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹாட்ச்பேக் பிரிவில் உள்ள மிகவும் எடை குறைவான காரை விட, இதன் எடை 60 கிலோ குறைவாக இருக்கிறது. மேலும், ஹாட்ச்பேக் பிரிவில் வேறெந்த காரும் பெறாத, SUV காரைப் போன்ற தோற்றத்தை கிவிட் பெற்றுள்ளது. தோற்றம் மட்டுமல்ல, இதன் உட்புறத்தில் உள்ள விசாலமான இடவசதியிலும் கிவிட் நிகரற்றதாக இருக்கிறது. மேலும், இதன் உட்புறத்தில், மீடியாநவ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் இடம் பெறுகிறது. பாதுகாப்புத் திறனிலும் கிவிட் சிறந்து விளங்குகிறது. இதில் SRS டிரைவர் ஏர் பேக் ஆப்ஷனலாகப் பொருத்தப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் வேரியண்ட்டில், பயணம் செய்பவருக்காக மேலும் ஒரு காற்றுப் பை இணைக்கப்படும். அது மட்டுமல்ல, 1.0 லிட்டர் கிவிட் மாடலில், ABS மற்றும் EBD அமைப்புகளும் இடம்பெறவுள்ளன.
புதிய 1.0 லிட்டர் கிவிட் சிறப்பம்சங்கள்
புதிய 1.0 லிட்டர் கிவிட் வேரியண்ட், அப்படியே 800 cc திறன் கொண்ட கிவிட் போலவே இருக்கிறது. எனினும், ரெனால்ட் நிறுவனம் ஒரு சில முக்கிய மாற்றங்களை இந்த காரில் கொண்டுவரும் என்று தெரிகிறது. கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காரின் பின்புற ஜன்னல்களில், பவர் விண்டோஸ் அமைப்பு இடம் பெறவில்லை, எனவே, இத்தகைய அமைப்புகள் புதிய கிவிட்டில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்புற டாஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் AMT நாப் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பயணிகள் தங்களது பொருட்களை வைத்துக் கொள்வதற்கு வசதியாக சென்ட்ரல் டனலில் நிறைய இடம் உள்ளது. காரின் உட்புறத்தில் காற்றோட்டமாக இருப்பதற்கு, இத்தகைய அமைப்பு வழிவகை செய்கிறது.
இறுதித் தீர்ப்பு
ஹாட்ச்பேக் பிரிவில் உள்ள காரை வாங்க வேண்டும் என்று நினைக்காதவர்களையும் கூட தன்னிடம் ஈர்க்கும் சக்தி தற்போது சந்தையில் உள்ள கிவிட்டிடம் இருப்பது போலவே, இந்தப் புதிய கிவிட் மாடலிடமும் இருக்கிறது. நாம் மேலே பகிர்ந்து கொண்டதைப் போன்ற செயல்திறன் இருந்தால், நிச்சயமாக இது தினந்தோறும் உபயோகப்படுத்தக் கூடிய ஹாட்ச் காராகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக, இது GT TSI மாடலை ஒரேடியாக ஒழித்துக் கட்டிவிடும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஏனெனில், பரபரப்பான இந்திய தெருக்களில் நீங்கள் அந்த சிறிய காரை ஓட்டிச் செல்பவர்களையும் நீங்கள் பார்க்க நேரிடும். GT காரின் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டிருப்பவர், குறுகலான தெருவிற்குள் காரைத் திருப்பலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் போது, நீங்கள் புதிய கிவிட் மாடலில் எந்தவித குழப்பமும் இன்றி பயணம் செய்வீர்கள். அது மட்டுமல்ல, இதன் பிரிவிலேயே இது ஒரு காட்ஜில்லாவாகத் திகழவும் வாய்ப்பிருக்கிறது.
மேலும் வாசிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் க்விட் முன்னோக்கு காரியங்களை, ரெனால்ட் பகிர்ந்து கொண்டது
0 out of 0 found this helpful