பிரதமர் நரேந்திர மோடியுடன் க்விட் முன்னோக்கு காரியங்களை, ரெனால்ட் பகிர்ந்து கொண்டது
published on பிப்ரவரி 17, 2016 04:33 pm by sumit for ரெனால்ட் க்விட் 2015-2019
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
“மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உருவாக்கப்பட்டது) பிரச்சாரத்திற்கு நேரான தனது அர்ப்பணிப்பை பிரெஞ்சு கார் தயாரிப்பாளர் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ரெனால்ட் இந்தியா செயல்பாடுகள் பிரிவின் நம் நாட்டின் CEO மற்றும் MD-யுமான திரு.சுமித் சாஹ்னி, மும்பையில் தற்போது நடைபெற்று வரும் “மேக் இன் இந்தியா” வாரத்தின் போது, இந்திய பிரதமரான திரு.நரேந்திர மோடி உடன் க்விட் காரை குறித்த தனது முன்னோக்கு காரியங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர், “மேக் இன் இந்தியா” பிரச்சாரத்திற்கு உடன்படுவதை குறிக்கும் வகையில், பிரதமரிடம் கையினால் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் காரின் மாடல் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய திரு.சாஹ்னி கூறுகையில், “அரசு விரும்பும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஒரு வெற்றிகரமான உடன்பாட்டிற்கு சாட்சி வகிக்கும் ரெனால்ட் க்விட்டை காண, ரெனால்ட் அரங்கிற்கு மாண்புகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி வருகை தந்துள்ள இந்த தருணம், ரெனால்ட் இந்தியாவிற்கு ஒரு பெருமையான தருணம் ஆகும். ஒரு உலக தரம் வாய்ந்த தயாரிப்பை அறிமுகம் செய்வதில், எங்களின் நிலைப்பாட்டையும், முயற்சியையும் பகிர்ந்து கொண்டதோடு, உலகளவில் இந்தியாவின் திறமையை உயர்த்தி காட்டி உள்ளோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமானால், அதன் தயாரிப்பு தொழில்துறைகள் வளர வேண்டும். இதில் உள்ள முக்கிய இயக்கிகளில், ஆட்டோமொபைல் தொழில்துறையும் ஒன்றாகும். இந்த தொழில்துறை மீண்டும் முழு பலத்தோடு கூட திரும்பும் என்பதில் நாங்கள் அதிக நம்பிக்கையை கொண்டுள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரம், ஒரு முக்கிய பங்கை வகிக்கும்” என்றார்.
தனது வாகனங்களின் உள்ளூர் தயாரிப்பு அளவை, ரெனால்ட் நிறுவனம் மிகவும் அதிகரித்துள்ளது. க்விட் காரில், ஏறக்குறைய 98% கூறுகள் உள்ளூரை சார்ந்தவை. இதேபோல டஸ்டரின் தற்போதைய உள்ளூர் பங்களிப்பை 70%-ல் இருந்து 80% ஆக உயர்த்த, இந்த கார் தயாரிப்பாளர் கடுமையாக முயன்று வருகிறார். சமீபகாலமாக ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் பெருமளவில் விரிவடைந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு வெறும் 14 விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையங்கள் மட்டும் இருந்தன. ஆனால் தற்போது இது 205 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகி வரும் க்விட் கார்களை, பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை குறித்து, இந்த வாகனத் தயாரிப்பாளர் ஆராய்ந்து வருகிறார். அனைத்து காரியங்களும் திட்டமிட்டபடி நடைபெற்றால், இந்த ஏற்றுமதி பணிகள் மிக விரைவில், அதாவது அடுத்த மாதமே துவங்கும். இதன்மூலம் இந்தியாவின் தயாரிப்புத் தொழிற்சாலைகளை குறித்த ஒரு சாதகமான கருத்து உலகமெங்கும் உருவாக பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் வாசிக்க அடுத்த மாத இறுதியில், புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது!
0 out of 0 found this helpful