அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஐ வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்
published on மார்ச் 06, 2020 03:40 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி700
- 56 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய எக்ஸ்யூவி500 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதனுடைய அறிமுகமானது இப்போது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
-
மஹிந்திரா 2021 முதல் காலாண்டில் இரண்டாவது தலைமுறையான எக்ஸ்யூவி500 ஐ அறிமுகம் செய்யும்.
-
இது 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
-
புதிய எக்ஸ்யுவி500 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபன்ஸ்டர் கான்செப்ட் மூலம் முன்காட்சி செய்யப்பட்டது.
-
இது 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் மூலம் இயக்கப்படும்
-
தற்போதைய மாதிரியின் விலை வரம்பில் எதிர்பார்க்கப்படுகிறது – இதன் விலை ரூபாய் 12.3 லட்சத்திலிருந்து ரூபாய் 18.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும்.
-
இது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற கார்களுக்குத் தொடர்ந்து போட்டியாக இருக்கும்.
இப்போது இரண்டாவது தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 இன் வேலை சில காலமாக நடந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மஹிந்திராவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பவன் கோயங்கா இப்போது எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கால அவகாசம் வழங்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 2020-21 நிதியாண்டின் நான்காவது காலப்பகுதியில், அதாவது ஜனவரி-மார்ச் 2021 அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
(படம் அடையாளம் காணுவதற்கு மட்டுமே)
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மஹிந்திரா காட்சிப்படுத்திய ஃபன்ஸ்டர் ரோட்ஸ்டர் கான்செப்ட்டால் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 முன்காட்சியிடப்பட்டது. இந்த கான்செப்ட் படி, புதிய எக்ஸ்யூவி500 அதிகளவு மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதைய மாதிரியைக் காட்டிலும் இது விசித்திரமான பண்பு நலன்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் காண்க: மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் முதல் முறையாகச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
உட்புற அமைவு, மஹிந்திராவின் நடுத்தர அளவு எஸ்யூவியின் இரண்டாவது தலைமுறையில் ஒரு தட்டையான – அடிப்பகுதியைத் கொண்ட திசைதிருப்பி, வெளிப்புறக் காட்சிகளை காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, காற்றோட்ட அமைப்பு கொண்ட முன்புற இருக்கைகள், ஆற்றல் மிக்க பின்புறக் கதவுகள் மற்றும் இரு மண்டல காலநிலை கட்டுப்பாடு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. க்யா செல்டோஸைப் போலவே, கருவி தொகுப்புடன் ஒரு பெரிய தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பையும் இது கொண்டிருக்கக்கூடும்.
(படம் அடையாளம் காணுவதற்கு மட்டுமே)
முன்பக்க கதவின் கீழ், அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 புதிய 2.0 லிட்டர் பிஎஸ்6-இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களால் இயக்கப்படும். மஹிந்திரா ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் தன்னுடைய புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட நேரடி-உட்செலுத்துதல் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் தொகுப்புடன், 190பிஎஸ் மற்றும் 380என்எம் வெளியிடுகின்ற 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தையும் காட்சிப்படுத்தியது. இந்த இயந்திரம் 6 வேக எம்டி மற்றும் ஏடி விருப்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். புதிய 2.0 லிட்டர் டீசல் இயந்திரம் இதுவரை வெளியிடப்படவில்லை. புதிய எக்ஸ்யூவி 500 தற்போதைய மாதிரியைப் போலவே ஆல் வீல் டிரைவிலும் வழங்கப்படலாம்.
இரண்டாவது தலைமுறை எக்ஸ்யூவி500 இன் விலைகள் தற்போதைய மாதிரியுடன் நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – இதன் விலை ரூபாய் 12.3 லட்சத்திலிருந்து ரூபாய் 18.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும். வரவிருக்கும் டாடா கிராவிடாஸ் மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் ஆகியவற்றிக்கு போட்டியாக இருக்கும், அதுபோலவே ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டியூசன், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர், ஆகிய கார்கள் அதன் போட்டியாக தொடரும்.
மேலும் படிக்க: மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல்